Skip to main content

Posts

Showing posts from May, 2019

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

ராகுல் காந்தியின் ராஜினாமா நாடகம்

பாராளுமன்ற தேர்தல் முடிவுகளை ஒட்டி ராகுல் காந்தி தோல்விக்கு முழு பொறுப்பை ஏற்றுக் கொண்டு ராஜினாமா பண்ணுவார் என்றும், ஆனால் ராகுலின் இந்த முடிவை அவரது தாயார் சோனியா நிராகரித்தார் என்றும் ஒரு செய்தியை நேற்று முன் தினம் படித்தேன். அப்போதே இது நடக்காது என எனக்குத் தெரியும். இப்போது ராகுலின் ராஜினாமா நாடகம் அவ்வாறே நடந்து முடிந்துள்ளது. வெட்கக்கேடு!

தேர்தல் முடிவுகள்

பாராளுமன்ற தேர்தல் முடிவுகளைப் பொறுத்தமட்டில் , எனக்கு பெரிய ஆச்சரியமில்லை . இரண்டு விதமாய் மத்தியில் பாஜகவின் எதிர்காலம் ஊகிக்கப்பட்டது . புல்வாமா தாக்குதலுக்குப் பின்பான அலையில் இந்துத்துவா அரசியல் பெரிய எழுச்சி பெற்று பெருவாரியான வெற்றியை மோடி பெறுவார்   என்பது ஒன்று .  அடுத்து , மக்களுக்கு பரவலாக இந்த ஆட்சி மீதுள்ள ஏமாற்றத்தினால் பாஜக போன தடவை பெற்றதை விட குறைவான இடங்களைப் பெற்று கூட்டணி ஆட்சி அமைக்கும் அல்லது பலவீனமான அரசாக தொடரும் . நான் இயல்பாகவே இரண்டாவது ஆருடமே நிகழட்டும் என ஏங்கினேன் . ஆனால் பாஜக தென்னகம் தவிர தேசம் முழுக்க தனது ஆதிக்கத்தை நிறுவி உள்ளது . 

ஃபேஸ்புக்: ஏன் நீண்ட பதிவுகளைக் கடந்து செல்கிறோம்?

இதுவே இன்றைய பின்நவீன நுகர்வுக் கலாச்சாரம். இந்தக் கலாச்சாரம் நமது உலகை பிரமாண்டமான ஹைப்பர் மார்க்கெட் ஆக்குகிறது. ஹைப்பர் மார்க்கெட்டில் நீங்கள் எல்லாப் பொருட்களையும் வாங்கப்போவதில்லை; ஆனால், அவ்வளவு பொருட்கள் அங்கு உள்ளன எனும் உணர்வே நம்மைப் பூரிக்கவைக்கிறது; கைக்கொள்ளாத உலகம் நம் கையில் வந்தது போன்றும், அது நம் கையில் வந்தாலும் அது நம்மை மீறி பிரம்மாண்டமானது என்றும் சுயமுரணாக உணர்கிறோம்.

பிக்பாஸில் காதலை வேடிக்கை பார்ப்பவவர்களின் எதிர்வினை (2)

மலையாள பிக்பாஸ் முதல் பருவத்தில் கூட இதே பிரச்சனை பெர்ளி—சுரேஷ் உறவு குறித்து எழுந்தது. வீட்டில் உள்ள பெண்களின் புகார் பெர்ளி மீது யாராவது குற்றம் சொன்னாலோ அவளோடு வாக்குவாதம் பண்ணினாலோ சுரேஷ் நடுவே அரண் போல வந்து நிற்கிறார் என்பது. அவர்கள் காதலிப்பது அல்ல, அவர்களின் காதல் ஒரு அரணாக தமக்கிடையே வருவதே பிற பங்கேற்பாளர்களின் முக்கிய புகார். ஏன் என்றால், பெர்ளி சுரேஷை முழுக்க ஏற்கவில்லை; தனக்கு சுரேஷ் மீது எந்த காதல் விருப்பமும் இல்லை என அவள் திரும்பத் திரும்ப எல்லாரிடமும் ஒப்புவிக்கிறாள். அதை அவர்கள் ஏற்கிறார்கள். ஆனால் அவர்களின் கோபம் குறைவதில்லை. வார இறுதியில் மோகன்லால் பிக்பாஸின் சார்பில் பெர்ளியை விசாரணை பண்ணிட அவள் அழுகிறாள். தன்னை மொத்த வீடுமே தூற்றுவது கண்டு கலங்கிப் போகிறாள். பெர்ளி சுரேஷை பயன்படுத்திக் கொள்கிறாள் என போட்டியாளர்கள் முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள்.

பிக்பாஸில் காதலை வேடிக்கை பார்ப்பவவர்களின் எதிர்வினை (1)

பிக்பாஸ் வீட்டுக்குள் காதலை அதில் சம்மந்தப்படாதவர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதே நாம் விவாதிக்கப்போகும் விசயம். அதற்கு முன் வேலையிடத்திலும் நட்பு வட்டங்களிலும் பொதுவான காதல் ஏற்படுத்தும் அலைகளைப் பற்றி பார்ப்போம். நான் கல்லூரியில் படிக்கையில் வகுப்புக்குள் பரஸ்பரம் காதலிக்கக் கூடாது எனும் மறைமுகமான விதி நிலவியது. இன்றும் பல கல்லூரிகளில் அது தொடர்கிறது. காதல் ஜோடிகள் தம் நண்பர்களை தனிமைப்படுத்துகிறார்கள். அதற்கு முன்போ பின்போ சற்றும் சளைக்காமல் காதல் ஜோடிகளை அவர்களின் நண்பர்கள் தனிமைப்படுத்துகிறார்கள். இன்றைய வகுப்புகளில் லெஸ்பியன் ஜோடிகளைக் காண்கிறேன். அவர்களிடமும் பிற பெண்கள் நெருங்கி அதிக நேரம் உரையாடுவதில்லை. இது ஏன்?

பிக்பாஸ்: ஆண்-பெண் உறவு (1)

பிக்பாஸ் வீடு எப்படி இன்றைய கார்ப்பரேட் சமூகத்தை, அது கண்காணிக்கப்பட்டு ஒரு போட்டிக்களமாய் நடத்தப்படும் விதத்தை, வேலையிடத்தில் நிர்வாகம் தன் அதிகாரத்தை செலுத்தும் நுணுக்கங்களை பிரதிபலிக்கிறது என ஏற்கனவே விவாதித்திருக்கிறேன். இன்றைய வாழ்நிலையை ஒரு நிலைக் கண்ணாடியில் கண்டு புரிந்திட பிக்பாஸ் நிகழ்ச்சி உதவுகிறது என்றும் சொல்லி இருந்தேன். விவிலிய நீதிக்கதைகளைப் போல இதுவும் ஒரு நவீன நீதிக்கதை (அப்படி நிகழ்ச்சி அமைப்பாளர்கள் உத்தேசிக்கவில்லை என்றாலும்). இப்போது இன்றைய ஆண்-பெண் உறவுநிலைகளை, அதில் வந்துள்ள மாற்றங்களை, மாறாத அம்சங்களை, இதில் கேரளாவுக்கும் தமிழகத்துக்குமான மாறுபாட்டை கவனிப்போம்.

பெரிதாக ஒன்றும் இல்லை - பா. சரவணனின் முதல் தொகுப்பு

பெரிதாக ஒன்றும் இல்லை - கவிதைத் தொகுப்பு ******************************************************************  “ இன்மை ” இணைய இதழில் , 2014-15 இல் வெளியான எனது கவிதைகளைத் தொகுத்து , அமேசான் கிண்டிலில் மின்நூலாக வெளியிட்டிருக்கிறேன் . ஃபேஸ்புக் கமெண்டில் பதியப்பட்ட எனது கவிதையைப் படித்து , இன்மை இதழுக்கு அனுப்பச் சொல்லி , தொடர்ந்து கவிதைகளை வெளியிட்ட ஆர் . அபிலாஷுக்கு Abilash Chandran எனது அன்பும் நன்றியும் . சர்வோத்தமனுக்கு எனது நன்றி .

2019 உலகக்கோப்பை அணிகள் ஒரு பார்வை: ஆஸ்திரேலியா

இம்மாதம் 30 ஆம் தேதி , ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பைத் தொடர் தொடங்க உள்ளது . முதல் ஆட்டமே இங்கிலாந்துக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும்   இடையே . செமையாக களைகட்டப் போகும் ஆட்டம் இது . அதற்கு முன் நாம் சிறந்த ஐந்து அணிகளின் முன்னோட்டம் ஒன்றைப் பார்போம் . எந்த அணிகள் வலிமையானவை , இங்கிலாந்தின் ஆட்டச்சூழலுக்கு தோதானவை . நல்ல ஆட்டநிலையில் உள்ளவை . இந்த அணிகளின் பலவீனம் என்னென்ன ஆகிய விசயங்களை இந்த முன்னோட்டத் தொடரில் பார்க்கலாம் . முதலில் ஆஸ்திரேலியா .

தோனியின் திடீர் ஆவேசம்: கார்ப்பரேட் சூழல் நம்மை என்ன செய்கிறது? (2)

வெற்றி   என்பது   முன்பு   இவ்வளவு   பொருண்மையாக ,  தகவல்பூர்வமாய்   புரிந்து   கொள்ளப்பட்டதில்லை .  இன்று   நான்   ஒரு   கட்டுரையை   பிரசுரித்ததும்   அதை   எத்தனை   பேர்   பார்வையிட்டார்கள் ,  அதற்கு   எத்தனை   பேர்   விருப்பக்குறி   தந்தார்கள் ,  பகிர்ந்து   கொண்டார்கள்   எனும்   தகவல்கள்   கேட்டோ   கேட்காமலோ   எனக்கு   அளிக்கப்படுகின்றன .  எழுத்தின்   நோக்கம்   பாராட்டு   மட்டுமல்ல   என்பதில்   இருந்து   கவனம் ,  பாராட்டு ,  ஏற்பு ,  பரவலான   கவனம்   என   தலைகீழாக   இன்று   மாறி   உள்ளது .  ஒரு   பக்கம்   இளம்   எழுத்தாளர்கள்   சமூகவலைகளை   பயன்படுத்தி   பிரபலமாவதை ,  பின்னர்   அது   தரும்   அழுத்தம்   பொறுக்காமல்   விலகி ,  சில   நேரம்   முழுக்க   இணையத்தில்   இருந்து ...

தோனியின் திடீர் ஆவேசம்: கார்ப்பரேட் சூழல் நம்மை என்ன செய்கிறது? (1)

11-4-19 அன்று இரவு சென்னைக்கும் ராஜஸ்தானுக்கும் இடையிலான T20 ஆட்டம் முடியும் தறுவாயில் இருக்கிறது . முதலில் ஆடியிருந்த ராஜஸ்தான் சென்னைக்கு நியமித்த இலக்கு 151. ஆரம்பத்தில் தடுமாறிய சென்னை பின்னர் தோனி மற்றும் ராயுடுவின் கூட்டணி மூலம் வெற்றி விளிம்பில் கைப்பற்றிக் கொண்டு ஏற முயன்ற போது , கடைசி ஓவரில் 18 ரன்கள் தேவை எனும் நெருக்கடி நிலையில் , தோனி தோனி அவுட் ஆனார் . அடுத்தாட வேண்டியவர்கள் ஜடேஜாவும் சேண்ட்னரும் . அவர்கள் பெயர் பெற்ற மட்டையாளர்கள் அல்ல . அவர்கள் பொலார்டோ ரஸலோ அல்ல . ஆகையால் தோனியின் விக்கெட் ஒரு பெரிய சரிவாக அமைந்தது . 

உடல் எடை குறைப்பதன் மிகப்பெரிய சவால் (2)

நமது   மரபணுக்கள் ,  வாழும்   சூழல் ,  உணவுப்பழக்கம் ,  நீண்ட   காலமாய்   நாம்   தக்க   வைத்துள்ள   எடை   ஆகிய   காரணிகள்   இந்த   நிர்ணயிக்கப்பட்ட   எடையை   வரையறுக்கின்றன .  உ . தா .,  எனது   உடலமைப்பு   என்   தாய்   மாமாவை   ஒட்டி   இருந்தால்   அவரைப்   போன்றே   எனக்கும்  70  கிலோ   எடை   நிர்ணயிக்கப்படலாம் ;  அவரைப்   போன்றே   எனக்கும்  40  வயதில்   வழுக்கை   விழலாம் .  ஆனால்   இது   இப்படி   ஒரு   உறவினரை   மட்டும்   ஒட்டி   எப்போதும்   அமைவதில்லை .  நமது   குடும்பத்தில்   உள்ள   பலரது   மரபணு   சுபாவங்கள்   நமக்கு   வந்து   சேரும் .  அதனாலே   உங்கள்   பெற்றோருக்கு   நீரிழிவோ   மனப்பிரச்சனையோ   இல்லாவிடிலும்   அது   வேறு   ஏதோ   உறவுக்கிளைகள்   வழி ...

உடல் எடை குறைப்பதன் மிகப்பெரிய சவால் (1)

எதுவுமே ஆரம்பத்தில் சற்று சுலபமாய் படும் . முதல் நாள் பள்ளிக்குப் போவது , காதலியுடன் முதல் நாள் வெளியே சுற்றுவது , ஒரு புதிய டயட்டை பின்பற்றுவது . போகப் போக ஏகப்பட்ட முட்டுக்கட்டைகள் வரும் . இடைப்பட்ட உண்ணாநோன்புக்கு (intermittent fasting) இது வெகுவாக பொருந்தி வரும் . இடைப்பட்ட உண்ணாநோன்பை பழகினால் எடைகுறைப்பு , உடல் நலத்தை பேணல் , நேரத்தை சேமிப்பு என பல பலன்கள் வரும் . குறிப்பாய் , ஆரம்ப சில மாதங்களுக்கு . சொல்லப் போனால் , பேலியோ உணவு முறை , உடற்பயிற்சி ஆகியவற்றை விட உண்ணாநோன்பினால் அதிக பலன்கள் உடனடியாய் கிடைக்கும் . என் விசயத்தில் , முதல் மூன்று மாதங்களில் மிக சுலபமாய் 16 கிலோ எடை குறைத்தேன் . நான் உணவருந்த்தும் போது எந்த கட்டுப்பாட்டையும் பின்பற்றவில்லை . விருப்பப்படி சாப்பிட்டேன் . உடற்பயிற்சியையும் ஒழுங்காக தினமும் பண்ணவில்லை . எடை குறைகிற வேகம் எனக்கு வேறெதுவும் தேவையில்லை எனும் நம்பிக்கையை அளித்தது . உண்ணாநோன்பை மிகப்பெரிய வரப்பிரசாதம் என நினைக்கத் தொடங்கினேன் . அதன் பிறகே , ஒரு பெரிய சிக்கல் ஆ...