“ மாப்பிள்ளைக்கு மாமன் மனசு மாமனுக்கோ காமன் மனசு ” “ நெற்றிக்கண் ” படத்தில் சுசீலா பாடிய பாடல் இது . இந்த பாடல் தோன்றும் இடம் பற்றியோ கதாபாத்திரங்கள் , திரைக்கதையில் இப்பாடலின் இடம் , சுசீலா இப்பாடலை அழகாய் பாடியுள்ள விதம் பற்றியெல்லாம் நான் இப்போது அதிகம் பேசப் போவதில்லை . ரஜினி இரட்டை வேடத்தில் அப்பாவாகவும் மகனாகவும் நடித்திருக்கிறார் ; அப்பா ரஜினி காமாந்தகர் , பணக்காரத் திமிர் கொண்டவர் ; அவர் ஒரு பெண்ணை பலாத்காரம் பண்ணுகிறார் . மகன் பின்னர் அப்பாவின் தவறை உணரச் செய்கிறார் என்பது கதைச் சுருக்கம் . இதை பலர் ஏற்கனவே அறிந்திருப்பீர்கள் . இசை ராஜா என்றும் , இந்த பாடலை எழுதியவர் கண்ணதாசன் என்றும் உங்களுக்கு தெரிந்திருக்கும் . படத்தில் இப்பாடலை ஒரு பெண் பார்க்கும் காட்சியில் சரிதா பாடுகிறார் . சரிதா அப்பா ரஜினியின் நிறுவனத்தில் மேலாளர் . அவர் தான் அப்பா ரஜினியால் பலாத்காரத்துக்கு ஆளானவர் . ஆக , பெண் பார்க்கும் காட்சியில் சரிதா “ மாப்பிள்ளைக்கு மாமன் மனசு , மாமனுக்கோ காமன் மனசு ” எனும் போது ...