முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாரிசு அரசியலை நியாயப்படுத்த முடியுமா? (1)


லட்சியபூர்வமாய் முடியாது என்றே நினைக்கிறேன். ஆனால் எதார்த்தத்தில் ஜனநாயக அரசியல் தன்னுள்ளே ஒருவித எதிர்-ஜனநாயகத்தை கொண்டுள்ளது. அதனுள் ஒரு முரணியக்கம் உள்ளது. இதனால் தான் மக்களாட்சி விழுமியங்கள் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டாலும் இந்திய அரசியல் களத்தில் பிரதமர், முதல்வர், தலைவர் ஆகியோர் மன்னர்களாகவும் அவர்களது பிள்ளைகள் இளவரசர்களாகவும் பார்க்கப்படுகிறார்கள். மக்கள் மத்தியில் அவர்களுக்கு அங்கீகாரமும் உள்ளது. இதை புரிந்து கொள்வது மிகவும் கடினம். ராஜன் குறை கிருஷ்ணன் தொடர்ந்து வாரிசு அரசியலின் தேவையைப் பற்றி தொடர்ந்து எழுதி வருபவர் என அறிவீர்கள். பி.பி.சி இணையதளத்தில் வெளியான அவரது ராஜீவ் காந்தி - மு. ஸ்டாலின் வெற்றியும், சஞ்சய் காந்தி-அழகிரி தோல்வியும்: வாரிசு அரசியல் எப்படி வெல்கிறது கட்டுரை இவ்விதத்தில் முக்கியமானது. அதேநேரத்தில் வாரிசு அரசியலுக்கு ஆதரவான அவரது வாதங்களில் சில மாற்றுக்கருத்துக்கள் எனக்கு உண்டு. ஏன் வாரிசு அரசியலை நம்மால் ஏற்க முடியாது என்பதையும் சொல்கிறேன்.


ராஜன் குறையின் அடிப்படையான கருத்து வாரிசு அரசியல் ஜனநாயக அமைப்பில் கூட தவிர்க்க முடியாதது என்பது. அதற்கு அவர் சில காரணங்களைத் தருகிறார்.
1) நாம் நூற்றாண்டுகளாக மன்னராட்சிக்கு பழகி இருக்கிறோம். ஜனநாயக தேர்தல் முறை வந்ததும் மன்னர் இடத்தில் பிரதமர் / முதல்வரும், நிர்வாகத்தை பார்த்துக் கொள்ள மந்திரி பிரதானிகளின் இடத்தில் மந்திரி சபையும் தோன்றுகிறது. நம்மால் இந்த கட்டமைப்பை விட்டொழிக்கவே முடியவில்லை. ஏன்
மக்கள் பரப்பு என்பது பல்வேறு முரண் போக்குகள் முயங்கும் இடம். இங்கு ஒரு மையக் கருத்து எதற்கும் சுலபத்தில் ஏற்பட முடியாது. மையமாக ஒரு கருத்துநிலை தோன்றி ஒரு தெளிவான திசை ஏற்படாவிட்டால் அங்கு ஆட்சியோ முன்னேற்றமோ சாத்தியமாகாது. அதற்குத் தான் மன்னர் / பிரதமர் தேவைப்படுகிறார். அவர் புவியீர்ப்பு விசை போல செயல்படுகிறார். ஒரு வட்டம் உருவாக எப்படி மையப்புள்ளி தேவையோ அப்படி அவர் இருக்கிறார். மன்னராட்சியும் போதும் அதிகாரம் ஓரிடத்தில் குவியவில்லை, மந்திரி பிரதானிகளும் பிற அதிகார மையங்களும் அதிகாரத்தை பரவலாக்கினர், மன்னர் என்பவர் ஒரு குறியீடு மட்டுமே; இன்றும் பிரதமரோ முதலவரோ அப்படி ஒரு குறியீடாகவே தொடர்கிறார் என்கிறார் ராஜன் குறை
அப்படி என்றால் மக்களாட்சியில் மக்களுக்கு என்று அதிகாரமோ முடிவெடுக்கும் உரிமையோ இல்லையா? இருக்கிறது. அதனாலே ஒரு வாரிசு வாரிசாக இருப்பதனால் மட்டுமே முதல்வராகவோ பிரதமராகவோ முடிவதில்லை என்று சொல்லும் ராஜன் குறை சில வாரிசுகள் அரசியலில் தோற்கடிக்கப்பட்டுள்ளதை உதாரணமாய் சொல்கிறார். மக்களின் அதற்கு பெறும் வாரிசுகள் மட்டுமே வெற்றி பெறுகிறார்கள் என்பதால் வாரிசுகள் என்பவர்கள் மக்கள் தலைவர்களுமே என்கிறார்.

இந்த வாதத்தில் இரு பிழைகள் உண்டு.
) மன்னராட்சியில் ஆட்சி அதிகாரம் என்பது ஒரு மன்னரிடம் இருந்தே தோன்றி இருக்க முடியும். அந்த மன்னரின் மகனே அடுத்த மன்னர். அவர் தோற்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்டால் ஒழிய புதிய ஒருவர் மன்னராக முடியாது. இந்த புதியவரும் ஒரு மன்னர் பரம்பரையை சேர்ந்தவராக இருக்க வேண்டும். சிவாஜி மன்னர் பரம்பரையை சேராதவர் என்பதால் அந்தணர்களின் துணையுடன் தனக்கென ஒரு அரச பரம்பரை கதையாடலை தோற்றுவித்தார் என படித்திருக்கிறோம். அதாவது மன்னராட்சியில் துவக்கமும் முடிவும் வாரிசு முறையிலே தான் இருக்க முடியும். ஆனால் மக்களாட்சியில் அப்படி அல்ல. ஒரு கட்சி இருவராலோ பலராலோ துவக்கப்பட்டு ஒருவர் வலுவான தலைவராக தோன்றி அவரே முதலவராக / பிரதமராக தேர்வு செய்யப்படுகிறார். அப்படி தேர்வாகும் போது அவர் வாரிசு அல்ல. வாரிசால் மட்டுமே ஒரு கட்சிக்குள் உருவாகும் பல முரண் அதிகார முனைகளை ஒருங்கிணைத்து சமநிலையை உருவாக்க முடியும் எனச் சொல்கிறார் ராஜன் குறை. அப்படி எனில் அந்த முதல் தலைவரின் வெற்றியை (ஒரு அண்ணாவை, கலைஞரை, காமராஜரை, திருமாவை) எப்படி புரிந்து கொள்வது? வாரிசு அல்லாத நிலையில் இவர்களால் ஒரு கட்சியின் தலைவராகி, கட்சிக்குள் அதிகார சமநிலையை உருவாக்க முடியும் எனில் அடுத்த தலைமுறையில் தோன்றும் ஒரு வாரிசு அல்லாத தலைவரால் ஏன் முடியக் கூடாது?

ஆனால் பெரும்பாலான நேரங்களில் இது சாத்தியமாவதில்லை. ஏனென்றால் ஒரு தலைவர் தன் ஆட்சிக்காலத்தில் தன் குடும்பத்தை அல்லது குடும்பம் இல்லாத பட்சத்தில் ஒரு உட்குழுவை தனக்கு அடுத்தபடியான அதிகார மையமாக உருவாக்கி விடுகிறார். இந்த மையங்களை எதிர்ப்பவர்கள் கட்சிக்குள் நிலைக்க முடியாது என்பதால் நியாயமான போட்டியாளர்கள் எந்த வாரிசுக்கும் கட்சிக்குள் தோன்றுவதில்லை. ஒரு தலைவர் போட்டிக்கான ஒரு ஜனநாயக பூர்வமான சூழல் எந்த கட்சிக்குள் இருக்கிறது? எந்த கட்சியிலாவது ஒரு தலைவர் ஐந்தாண்டுகள் ஆண்டு பின்னர் தன் பதவியை விலகி கட்சியில் தொண்டராக செயல்பட்டு அடுத்தவர்களை அரைநூற்றாண்டு ஆள அனுமதித்து விட்டு அதன் பிறகு அவரது மகன் போட்டியிட்டு தலைவாக முடிந்ததுண்டா? அப்படி நடந்தால் அது மக்கள் தம் இயல்பிலேயே வாரிசுகளை மட்டுமே ஆதரிக்கும் இயல்புக்கான உத்தரவாதம் எனச் சொல்லி விடலாம்


என்னுடைய வாதம் வாரிசுகளுக்கு மக்களிடையே ஆதரவு இல்லை என்பதல்ல. உண்டு. ஆனால் வாரிசு அல்லாத தலைவர்களுக்கும் மக்கள் ஆதரவு உண்டு. எம்.ஜி.ஆர் யாருக்கு வாரிசாக வந்தார்? கேஜ்ரிவால் யாருடைய வாரிசு? எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்து வெளியேறி புதுக்கட்சி ஆரம்பிக்கும் நிலை ஏன் ஏற்பட்டது? இங்கு நாம் அதிகார சமக்குலைவு பற்றி பேச வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...