Skip to main content

பிக்பாஸ்- பெண்களை தமிழர் கூடுதலாய் மதிக்கிறோமா? (3)

மலையாள பிக்பாஸில் பங்கேற்ற ஆண்களில் சுரேஷை விட அதிக வெற்றி வாய்ப்புள்ள ஒரு பிரகாச நட்சத்திரம் சாபுமோன். இதை உள்ளார்ந்து உணரும் பெண்களில் இருவர் அவரது அருகாமைக்காக போராடுகிறார்கள் - ஒருவர் ரஞ்சினி, மற்றொருவர் ஹீமா. ஹீமா சாபுவின் காதில் சென்று லவ் யூசொல்லி பின்னர் அதை மோகன்லாலிடம் பகிங்கரப்படுத்துகிறார். இதுவும் போதாதென்று அவர் கிடைத்த சந்தர்பங்களில் எல்லாம் பிற பெண்களிடம் தனக்கு சாபு மீதுள்ள ஈர்ப்பை காட்டுகிறார். ஹீமாவின் காதல் போலியானது, அவரை ஆட்கொண்டு தனது உடமையாக்கும் தன்னல நோக்கு கொண்டது என புரிந்து கொள்ளும் சாபு அவரை நிராகரிக்கிறார்; ஒருமுறை அவரை தன் காலில் மிதித்த சாணியுடன் ஒப்பிடுகிறார். இதனால் காயப்படும் ஹீமா சாபுவை கிடைத்த சந்தர்பங்களில் எல்லாம் எதிர்க்க முயல்கிறார்

சாபுவும் சுரேஷும் பெண்களிடம் பெறும் இந்த கவனமானது இந்த பிக்பாஸ் வீட்டுக்குள் மட்டுமே பிரசித்தமானது; இதை விட்டு வெளியேறினால் சாபுவை இவர்கள் சீண்ட மாட்டார்கள். வெளியே அவர் ஒரு பெரிய நட்சத்திரம் அல்ல; மேலும் அவர் மணமானவர். சுரேஷும் வயதானவர்; பிரபலம் என்றாலும் பெரிய நட்சத்திரம் அல்ல. ஆனால் பெண்கள் மத்தியில் இந்த ஆண்கள், இந்த alpha males, பெற்ற முக்கியத்துவமும் மதிப்பும் வீட்டின் அரசியலுக்குள் கட்டமைக்கப்பட்டது. முதல் சில வாரங்களுக்குப் பிறகு இப்பெண்கள் இயல்பாகவே பலவீனமாய் உணர்ந்து ஆண்களின் ஆதரவை நாடுகிறார்கள். அதன் பிறகு மொத்த வீடும் ஒன்றிரண்டு ஆண்களின் தலைமையின் கீழ் வருகிறது.

இங்கு இன்னொரு விசயத்தையும் கவனிக்க வேண்டும் - வீட்டுத் தலைவரின் பெயர் மலையாள பிக்பாஸில் காரணவர். இது பாரம்பரிய நாயர் கூட்டுக்குடும்ப வீடான தறவாட்டின் ஆண் தலைவரது பெயர். உச்சபட்ச அதிகாரத்தைக் கொண்ட ஒரு சர்வாதிகாரி தலைவரே காரணவர்; இந்த பதவிப் பெயருக்குப் பின்னே ஆணாதிக்கம் நுணுக்கமாய் பின்னப்பட்டுள்ளது. ஆக ஒரு ஆணையோ பெண்ணையோ காரணவராய் பிக்பாஸ் வீட்டில் நியமிக்கும் பிக்பாஸ்  ஒற்றை ஆண் அதிகாரத்துக்குக் கீழ் பலர் தலைகுனிந்து பணிந்து வாழும் நிலப்பிரத்துவ சூழலை நமக்கு நினைவுபடுத்தி, ஆணுக்குக் கீழ் பெண் வாழ வேண்டிய நிலையை மறைமுகமாய் வலியுறுத்துகிறார். இதுவே கேரள கலாச்சாரத்துக்கும் ஒத்து வருவதால் இந்த வீட்டில் ஆண்-பெண் உறவாடல் சற்று பிற்போக்காகவே உள்ளது

மாறாக இத்தகைய ஆண் சார்பை பெண் பங்கேற்பாளர்களிடம் நீங்கள் தமிழ் பிக்பாஸில் காணவே முடியாது. வடநாட்டவர் பங்கேற்றாலும் கூட தமிழ் மண்ணில் நடக்கும் விளையாட்டு என்பதால் பெண்ணுக்கு கூடுதல் மரியாதை அளிக்கும் தமிழ்ப் பண்பாடே இந்த ஆட்டத்தின் அறமானது. .தா., மும்தாஜ் போன்ற ஒரு குலுக்கு நடிகை பற்றின ஆபாசமான குறிப்புகளை, சமிக்ஞைகளை, அவதானிப்புகளை ஆண் பங்கேற்பாளர்கள் ஒருமுறை கூட வெளிப்படுத்தவில்லை. மாறாக மும்தாஜ் தன் கவர்ச்சி பிம்பத்தில் இருந்து கழன்று கொண்டு ஒரு தாய் பிம்பத்தை வெற்றிகரமாய் ஏற்றுக் கொண்டார். ஆனால் மலையாள பிக்பாஸில் மும்தாஜுக்கு இணையான கிளாமர் நடிகையான ஸ்வேதா, அவர் என்ன தான் வீட்டின் தாயாக துவக்கத்தில் பாராட்டப்பட்டாலும், அனூப்பிடம் இருந்து தொடர்ந்து ஆபாசப் தாக்குதல்களுக்கு உள்ளானார். இதன் பொருள் தமிழர்கள் பெண்களை மிகுந்த மரியாதையுடன் எப்போதுமே நடத்துகிறார்கள் என்றல்ல; மாறாக பெண்களை ஆபாசமாய் சித்தரித்து பொதுவெளியில் கிண்டலடிப்பது தமிழ் மனத்துக்கு ஏற்கத்தக்கதல்ல என்பதே.

நான் பார்த்த வரையில் இந்தி பிக்பாஸின் பன்னிரெண்டாவது பருவத்திலும் கேரள பிக்பாஸின் பாணி தான் பின்பற்றப்படுகிறது. பெண்கள் ஆண்களுடன் ஒரு ஜோடியாக அங்கு தம்மை பாவிக்க வேண்டும். ஆணை பின்பற்றி அவனை கருத்தளவில் திருப்தி செய்கிறவளாக ஒரு பெண் போட்டியாளர் அங்கு இருக்க வேண்டும். தமிழ் பிக்பாஸ் ஒப்பிடுகையில் மிக வித்தியாசமானது.


பொதுவாக, தமிழர்களின் பிற்போக்கான நுண்ணுணர்வற்ற ஆணாதிக்கத்தை கண்டித்து நிராகரிக்கும் என் தோழி இந்த விசயத்தில் மட்டும் தமிழர்களின் பண்பாட்டின் ஆழத்தில் உள்ள சிறிய நன்மையை, முற்போக்கை, முதன்முதலாய் பாராட்டினார். தமிழகத்தில் பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த அவரது கனவின் சிறுதுளி இந்த ரியாலிட்டி ஷோ எனலாம்.

நன்றி: உயிர்மை, ஜூன் 2019

Comments

நல்ல கட்டுரை...
சிறப்பான பார்வை.

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...