முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிக்பாஸ்- பெண்களை தமிழர் கூடுதலாய் மதிக்கிறோமா? (2)

தமிழ் இலக்கிய கதைகளை எடுத்துக் கொண்டால் கூட நமக்கு இத்தகைய ஆண் சித்திரமே கிடைக்கிறது - இமையம், ஜெ.பி சாணக்யா, லஷ்மி சரவணகுமார், தேவி பாரதி ஆகியோரின் கதைகளில் வரும் ஆண்களைப் பாருங்கள்; அவர்கள் ஆண்மை மறுக்கப்பட்டவர்களாக (Demasculinized), அந்நிலையின் தடுமாற்றங்கள் மிக்கவர்களாக, பெண்களின் அதிகார வீச்சின் முன்பு, துணிச்சலான ஆதிக்கமான செயல்பாடுகள் முன்பு வெம்பி வெதும்புகிறவர்களாகவே இருக்கிறார்கள். நமது ஆண்கள் மீசையை முறுக்கி மிரட்டலாய் தெரிந்தாலும் அவர்களுக்குப் பின்னால் தலைகுனித்து செல்லும் பெண்ணொருத்தி தோன்றினாலும் இந்த மேல்-கீழ் அதிகார பந்தம் மேலோட்டமானதே; ஆழத்தில் இருவருக்கும் இடையிலான அதிகார படிநிலை தலைகீழாகவே இருக்கும். இதை சுட்டவே வடிவேலு மனைவியிடம் அப்படி செம அடி வாங்கும் காட்சியில் நடிக்கிறார்.


இப்போதுபிக்பாஸ்தமிழுக்கு வருவோம். இதில் ஆண்களும் பெண்களும் கிட்டத்தட்ட சம எண்ணிக்கையிலேயே பங்கேற்றார்கள். ஆனால் இப்பருவத்தை பற்றி சிந்திக்கையில் ஆளுமை மிக்க ஆண் பங்கேற்பாளர்கள் என ஸ்நேகன், சக்தி, ஹரீஷ் ஆக்யோர் தாம் நம் நினைவுக்கு வருகிறார்கள். முதல் பருவத்தில் ஆரவ் இறுதியில் வென்றார் என்றாலும் அவரது பிம்பம் பெரிதாக மக்கள் மனதில் பதியவில்லை என்பதே உண்மை. ஓவியா பாதியில் வெளியேறவில்லை என்றால் அவரே எளிதில் முதல் பருவத்தை வென்ற்ருப்பார். மாறாக பெண்களில் ஓவியா, ஜூலி, காயத்ரி, நமீதா, ரைஸா, காஜல், பிந்து மாதவி, சுஜா வருணி என ஒவ்வொருவரும் இந்த ஷோவில் ஆட்டநாயகிகள். அவர்கள் கிட்டத்தட்ட எல்லா நாட்களையும் ஆதிக்கம் செலுத்தினார்கள். போட்டி வலுத்து வீடு ரெண்டாய் பிரியும் நிலை வந்த போதும் பெயர் பெற்ற நடிகைகள் ஒரு அணியாகி அவர்களுக்குக் கீழ் சில ஆண்கள், புகழ் ஏணியில் இரண்டாம் நிலையில் உள்ள பெண் போட்டியாளர்கள் மற்றொரு அணியாகி அவர்களுடன் கூடமாட சில ஆண்கள் என முகாம்கள் அமைந்தன. இரண்டாம் பருவத்தில், ஆண் பங்கேற்பாளர்கள் கூடுதல் வலுவுடன் உறுதியுடன் போட்டியிட்டார்கள். குறிப்பாய் டானியல், மஹத், பாலாஜி ஆகியோர். ஆனால் இப்பருவத்திலும் ஐஸ்வர்யா, யாஷிகா, மும்தாஜ், நித்யா, ரித்விகா, விஜயலஷ்மி ஆகியோர் முடிசூடா ராணிகளாய் ஷோவை வழிநடத்தினர். போட்டி முறுகிய பின்னர் வீடு வடக்குதெற்கு என பிரிந்து பரஸ்பரம் மோதியது. மும்தாஜ், ஐஸ்வர்யா, யாஷிகா ஆகியோர் ஓர் அணி என்றால் இவர்களுக்கு தளபதிகள் போல மஹத் மற்றும் ஷாரிக் செயல்பட்டனர். இன்னொரு பக்கம் தென்னகப் பெண்கள் நித்யா, ரித்விகா, விஜயலஷ்மி, ரம்யா, ஜனனி ஐயர், வைஷ்ணவி ஆகியோர் ஒரு முகாம் அமைத்தனர். இந்த முகாமில் பெயர் அளவுக்குக் கூட ஆண்கள் வழிநடத்தும் ஆலோசனை நல்கும் இடத்தில் இல்லை. நமது பெண்ணியவாதிகள் sisterhood எனச் சொல்வார்களே அவ்வாறு பரஸ்பரம் ஆதரித்து ஆண்களை புறக்கணிக்கும் பெண்ணிய சகோதரிகளின் அமைப்பு ஒன்றைப் போல இந்த பிக்பாஸ் தென்னக பெண்கள் முகாம் செயல்பட்டது. இந்த முகாமில் சேர முடியாத ஆண்கள் (பொன்னம்பலம், பாலாஜி, அனந்த் வைத்தியநாதன்) தனித்தனியாய் பிரிந்து செயல்பட்டனர் - பிக்பாஸ் வீட்டின் வழக்கப்படி இந்த தனி வீரர்கள் வலுவிழந்து விரைவில் துவண்டனர். வெளியேற்றப்பட்டனர். இவர்களில் பாலாஜி மட்டுமே சிறிது காலம் தாக்குப் பிடித்தார்
இப்போது இந்நிலை மலையாள பிக்பாஸ் முதல் பருவத்தில் எப்படி உள்ளது எனப் பார்ப்போம்.
பங்கேற்பாளர்களைப் பொறுத்தமட்டில், ஆண்களிலும் பெண்களிலும் இரண்டு பிரபல நட்சத்திரங்களை உள்ளே கொண்டு வந்தார்கள். அனூப் சந்திரனும் அரிஸ்டோ சுரேஷும் ஒரு பக்கம் என்றால், ஸ்வேதா மேனன் மற்றும் ரஞ்சினி இன்னொரு பக்கம். ஸ்வேதா விரைவில் வெளியேறினாலும் அவர் இருந்த வரையில் பெரும்பாலும் தலைவியாகவே நேரடியாகவும் மறைமுகமாகவும் செயல்பட்டார். அவர் போன பிறகு ரஞ்சினி தனது அரசியல் மற்றும் ஆர்ப்பாட்ட அடாவடி சுபாவம் மூலமாக தொடர்ந்து வீட்டின் போக்கில் தாக்கம் செலுத்துபவராக இருந்தார். ஆரம்பத்தில், பெண்களில் தியா, ஹீமா, ஶ்ரீலஷ்மி, அஞ்சலி, அதிதி, அர்ச்சனா ஆகியோர் ஸ்வேதா மற்றும் ரஞ்சினியின் கீழ் இருந்து செயல்பட்டனர். ஒரு கட்டத்தில் மெல்ல மெல்ல வீட்டின் அதிகார படிநிலையில் இருந்து ஸ்வேதாவும் ரஞ்சினியும் வழுக்கிட நிலைமை மாறியது. ஸ்வேதா ஆரம்பத்தில் எல்லாரது விருப்பத்துக்குரிய தலைவியாக, “தாயாக”, இருந்தாலும், பின்னர் மிதமிஞ்சி அனைவரையும் கட்டுப்படுத்துகிறவராய் ஆனார். இந்த முனைப்பு அவரை தனக்கு உடன்படாதவர்களை கண்காணித்து கண்டிப்பவராய், ஒடுக்குகிறவராய், அவர்களைப் பற்றி பொய்யும் புரட்டும் கூறுகிறவராக்கினது. அவரது பொய்களை பிக்பாஸ் அம்பலப்படுத்திட, அவர் வெளியேறுவது உறுதியானது. அவரது வெளியேற்றம் ரஞ்சினியை பலவீனப்படுத்தியது. இப்போது ரஞ்சினி பெண்களில் கணிசமானோரை தன் வசம் வைத்திருந்தபடியே அதிகம் எந்த பிரச்சனைகளிலும் பட்டுக் கொள்ளாதவராய் அமைதியானவராய் இருக்க முயன்றார். ஆனால் அவரது இயல்புக்கு நீண்ட காலம் இது இயலவில்லை. அவரது அதிகாரத் தளம் ஆட்டம் காண்பதை உணர்ந்த பிற பெண்கள் சின்னச் சின்ன அணிகளாய் பிரிந்து மறைமுகமாய் செயல்பட்டார்கள். ஸ்வேதாவின் ஆதிக்க காலம் தொட்டு அனூப், சாபு மோன், பஷீர், ஷியாஸ் ஆகியோர் அவரை வெளிப்படையாய் எதிர்க்கிறார்கள். ஆக, துவக்கம் முதலே மலையாள பிக்பாஸ் வீடு ஸ்வேதா / ரஞ்சினியின் தலைமையில் ஒரு பெண்கள் அணி, அனூப் / சாபு மோன் தலைமையில் ஒரு ஆண்கள் அணியுமாய் பிரிந்தது. ஸ்வேதா வெளியேறி, ரஞ்சினி தனிமையில் பலவீனமான பின்னர், ஆண்களின் முகாம் அவ்வாறே உறுதியாய் தொடந்தது

இப்போது பெர்ளி சுரேஷ் மற்றும் ஶ்ரீனிஷை தன்னுடன் சேர்த்துக் கொண்டு தனி அணியாகிறார். அவரது சுட்டித்தனம், பாடி ஆடும் பாங்கு, குழந்தைமை, சுமாரான ஆனால் மனதைப் பறிக்கும் அழகு பார்வையாளர்களை வெகுவாய் கவர, பிற பெண்கள் மத்தியில் அவர் மீது கடும் பொறாமை தோன்றுகிறது.


இன்னொரு பக்கம், மோகன்லால் ஒரு அத்தியாயத்தில் சுரேஷை புகழ்ந்து பேச, அவரது பாட்டுப் பாடும் திறன் அவரை வெற்றியை நோக்கி நகர்த்தும் என ஊகிக்கும் பெண்கள் பலரும் அவருக்கு நெருக்கமாகிறார்கள். (அவரது குழந்தைத்தனமான கல்மிஷமில்லாத இயல்பு இதற்கு உதவுகிறது.) இப்போது பெர்ளி சுரேஷிடம் நெருங்கி நிறைய நேரம் பாட்டுப்பாடியும் உரையாடியும் கழிக்க, சுரேஷ் அவளை காதலிக்க துவங்குகிறார். எல்லா சிக்கல்களிலும் சச்சரவுகளிலும் அவர் வெளிப்படையாய் பெர்ளியை ஆதரிக்கிறார். பிற பெண்களிடம் இருந்து ஒரு கால்பந்தைப் போல சுரேஷை உதைத்து தன் பக்கம் கொண்டு சென்று விட்டார் பெர்ளி. இதோடு காண அழகான ஸ்ரீனிஷை வேறு பெர்ளி தன் ஜேப்பில் இட்டுக் கொண்டு போகிறார். இப்படி தனியாக இரு முக்கிய ஆண்களை பெர்ளி தன் வசப்படுத்தியதை உணரும் பிற பெண்கள் மிகவும் கடுப்பாகி, துவேசத்தில் அவளை தொடர்ந்து தூற்றுகிறார்கள், தனிமைப்படுத்துகிறார்கள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...