முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இல்லம்மா நான் அதை எழுதல!


Predictive கீபோர்ட் எனப்படும் கணிப்பு மொழி இப்போது ஆங்கிலத்தில் பரவலாகி விட்டது. ஒருநாள் காலையில் நீங்கள் அவசரமாக வாகனத்தில் ஏறி அமரும் போது ஒரு மின்னஞ்சல் வருகிறது: “இன்றைக்கு கூட்டத்தில் நீங்கள் வாசிக்க வேண்டிய ரிப்போர்ட்டை உடனடியாக அனுப்புங்கள், இப்படிக்கு (....)”. நீங்கள்பதில்என அழுத்தியதும் உங்கள் கீபோர்டேஹைஎனப் போட்டு உங்களுக்கு மின்னஞ்சல் பண்ணியவரின் பெயரை ஊகித்து கொண்டு வந்து விடும். நீங்கள் வலது அம்புக்குறியை அழுத்தினால் போதும். அடுத்து நீங்கள்கா...” எனப் போட்டதும் அதுகாலை வணக்கம்என முழுமை செய்து, ஒரு குட் மார்னிங் கூட சொல்லி விடும். அதோடுநலமாக இருக்கிறீர்களா?” என்றும் கேட்கும். (நீங்கள் முகமன் சொல்லும் மனநிலையில் இல்லை அல்லது அந்த குறிப்பிட்ட நபருக்கு முகமன் சொல்ல நீங்கள் பிரியப்பட வில்லை என்றால் அதை தவிர்க்கலாம்.) இப்போது உங்கள் கீபோர்ட் வேகமாய் அந்த மின்னஞ்சலைப் படித்துஉடனடியாக அனுப்புகிறேன்” “I will look into it”, “Alright, right away” என்பது போன்ற பதில்களை உங்களுக்கு பரிந்துரைக்கும். மீண்டும் ஒரு கீயை அழுத்தினால் முடிந்து போகும் (ஒரே சிக்கல் நான் இப்போதுகீயைஎன்றதும் கீபோர்ட் அதைகீதைஎன மாற்றி விட்டது தான். கவனம்!). மொத்தமாகவே நீங்கள் ஒரு எழுத்தை மட்டுமே அழுத்தி இருப்பீர்கள், ஆனால் ஒரு பதில் மின்னஞ்சலே தயாராகி விட்டது. இப்படி எந்திரங்கள் எழுதும் பதில் கடிதாசிகள் இப்போது எல்லா இடங்களிலும் தலைதூக்கி விட்டன. இன்னொரு பக்கம் நீங்கள் உங்கள் கூகிள் உதவியாளரிடம் (செயலி) ஒரு மின்னஞ்சலை வாய்வழியாக சொல்லி அனுப்பி விடலாம்


இந்த பிரெடிக்டிவ் கீபோர்ட் எப்படி வேலை செய்கிறது என படித்துக் கொண்டிருந்தேன். இது நமது கீபோர்டில் நாம் அதிகம் அழுத்துகிற இடங்களை, நமது ஸ்டுரோக்குகளை நினைவில் வைத்துக் கொண்டு அடுத்து நாம் எழுதக் கூடிய சொற்களை ஊகிக்கின்றன. சின்னச் சின்ன எழுத்துப் பிழைகளை உடனடியாக சரி செய்கின்றன. அது மட்டுமல்லாமல் நீங்கள் பதிலனுப்பும் பட்சத்தில் அது அந்த மின்னஞ்சலையும் படித்த அதில் முக்கியமான சொற்களை வைத்து பதிலை சில சாத்தியங்களைக் கொண்டு தேர்கின்றன. இது போக cloudஇல் நாம் முன்பு எழுதிய சொற்கள் சேமிக்கப்படுமெனில் நீங்கள் எந்த கணினி, போனில் எழுதினாலும் கூகுள் அல்லது ஐகிளவுடால் உங்களது மொழியை ஓரளவுக்கு சரியாகவே கணிக்க முடியும் என்கிறார்கள். அதாவது நீங்கள் ட்விட்டரில், பேஸ்புக்கில் எழுதிய வாக்கியங்கள், சொற்களைக் கொண்டும் பொதுவாக பிறர் அதிகம் பயன்படுத்தும் / பிரசித்தமாக உள்ள சொல்லாடல்களை வைத்து SWYPE போன்ற கீபோர்டுகள் உங்களை ஸ்டைலாக சுலபமாக எழுத உதவுகின்றன. .தா., ஒருவர் எதாவது சீண்டலாய் சொல்ல நீங்கள் வழக்கமாய்ம்க்கும்”, “யோவ்”, “த்தாஎன்றெல்லாம் சொல்வீர்கள் என்றால் அதை நீங்கள் நினைக்கும் முன்னரே உங்கள் கீபோர்ட் பரிந்துரைக்கும். இப்போது ஒரு சிக்கல்: இது நீங்கள் எழுதுவதா அல்லது உங்களை எழுதும்படி ஒரு கணினி சொல்லித் தருவதா? இது யாருடைய எதிர்வினை
உங்களுடையது தான். ஏனென்றால் நீங்கள் எழுதியதை வைத்து தான் கணினி ஊகித்து எடுத்துத் தருகிறது. அதே போல பிறர் எழுதும் மொழியும் சொற்தேர்வும் நிஜவாழ்வில் கூட உங்களை பாதிக்கிறவையே. ஆக, கணினி அதையே இங்கும் செய்கிறது. இங்கு ஒரே சிக்கல் எனக்கான வாய்ப்புத்தேர்வுகளை கணினி சுருக்குகிறது என்பது தான். தொடர்ந்து ஒருமாதிரியாகவே பேசி வரும் நான் முழுக்க வேறொரு மொழியை, வேறொரு உணர்வை காட்ட அது அனுமதிக்காமல் என்னை கட்டுப்படுத்துகிறது. இது எதிர்காலத்தில் நம்மில் பலரை மொழியளவில் வளரவிடாமல் தடுக்கும்.
பிரெடிக்டிவ் கீபோர்டின் வளர்ச்சியில் இனி என்னவெல்லாம் நடக்கும்?

இந்த predictive coding உடன் லாஜிக்கும் ஒழுங்காய் சேரும் பட்சத்தில், எதிர்காலத்தில், இதன் சாத்தியங்கள் எல்லையற்றவை. இந்த கணித்தலை எந்திரம் நீங்கள் பேஸ்புக்கில் ஒரு ஸ்டேட்டஸ் போடும் போதும் செய்யும். ஒருவேளை அதிக விருப்பக்குறிகள் பெறும்படி நம்மை எழுத அது தூண்டும் / வழிவகுக்கும். சொந்தமாய் எழுதுவதை விட கணினியின் ஊகத்தின் படி எழுதுவதே வசதி மற்றும் பயனுள்ளது எனும் முடிவுக்கு நாம் வரலாம்.

இன்றைக்கு பரபரப்பாக பேசப்படும் ஒரு சம்பவம் / விசயம் பற்றி ஒரு கட்டுரை எழுத வேண்டுமா? கூகுளிடம் அது சம்மந்தமாக ஏகப்பட்ட தகவல்கள் குவிந்துள்ளன. Cloudஇல் இது சம்மந்தமாய் எழுதப்பட்டவற்றில் பயன்படுத்தப்பட்ட பொதுவான சொற்களின் பட்டியலும், பிரசித்த தரவரிசைப்படி, உள்ளது. இதோடு உங்களுடைய வழக்கமான சொற்தேர்வையும் மனத்திற் கொண்டு கீபோர்டே உங்கள் கட்டுரைத் தலைப்பை நீங்கள் ஒரு சொல்லை எழுதியதும் நிறைவு செய்யும். “பாஜகவின்...” என்றதுமேதேர்தல் பரப்புரைகள் சொல்வதென்ன?” / “தேர்தல் வியூகம் இதுவா?” / “இந்துத்துவா அரசியலின் கேடுகெட்ட ...” இப்படி அது உங்களை வழிநடத்தும். சரி தலைப்பை இப்படி நீங்கள் ஓகே செய்த பின் முதல் வாக்கியத்தையும் அது உங்கள் ஸ்டைலின் படி / எது நல்ல துவக்க வரியாக இருக்குமென அது நினைக்கிறதோ அந்த பாணியில் ஆரம்பிக்கத் தூண்டும். இது சிலருக்கு எரிச்சலாக இருந்தாலும், பத்திரிகை எழுத்தாளர்களுக்கு இது மிகவும் பயனுள்ள ஒன்றாக இருக்கும் என நினைக்கிறேன். பிளாகிலும் பேஸ்புக்கிலும் அன்றாட அரசியல் சமூக சேதிகளைப் பற்றி கருத்துரைக்கிறவர்களுக்கும் இது பயன்படும். இது நடந்தால் எதிர்காலத்தில் பல்வேறு மொழிகளில் பரபப்பான விசயங்கள் பற்றி எழுதப்படுகிற கட்டுரைகளின் எண்ணிக்கை நூறு மடங்கு பெருகும். தகவல்பூர்வமான கட்டுரைகளை எழுதும் மொண்ணையான பணியை கணினியே எடுத்துக் கொள்ளும். திறமையாளர்கள் தனித்துவமான நோக்குடன் விமர்சனக் கட்டுரைகளை மட்டுமே எழுத முடியலாம் (அல்லது அங்கும் கூட ப்ரெடிக்டிவ் கீபோர்டுகள் நம் கையைப் பிடித்து எழுதலாம்).


தமிழில் ஜீமெயிலிலும் பேஸ்புக்கிலும் சாட்டிலும் இந்த ப்ரெடிக்டிவ் கீபோர்ட் வாக்கியங்களை பரிந்துரைக்கும் நாளுக்காக காத்திருக்கிறேன். இரவில் தோழிகளிடம் உரையாடும் போது இந்த கீபோர்டுகள் என்னென்ன சேட்டை பண்ணுமோ. “இல்ல அந்த வாக்கியத்தை நான் சொல்லலங்க, தப்பா ப்ரெடிக்ட் ஆயிடுச்சு.” என எத்தனை பேரிடம் கெஞ்சுவீர்களோ!

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
It's like kids learning words from their parents...and using it at improper places.
Ironically, the Predictive AI improves its learning whereas humans will reduce their's brain's usage. (யோசிக்கவே மாட்டாங்க)

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...