முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிக்பாஸ்: கவின் வாங்கிய அறையும் நவ-தாராளவாத முதலீட்டிய உத்தியும் (1)



கவின் உண்மையில் என்ன பாவம் பண்ணினார் எனத் தெரியவில்லை. (இதற்கு முன்பு ஆரவ் ஓவியா விசயத்தில் என்ன தப்பு பண்ணினார் என்பதும் தான் புரியவில்லை.) கவின் ஆரம்பத்தில் இருந்தே வீட்டிலுள்ள பெண்களுடன் நட்பாக சற்று ஜாலியாக பழகுகிறார். ஆனால் அவர் யாருடனும் நிரந்தரமாக ஒரு காதல் உறவை ஏற்படுத்த விரும்பவில்லை. இது ஒரு பக்கம் பிக்பாஸ் விட்டுப் பெண்களுக்கு பிடித்திருந்தது; இன்னொரு பக்கம் பிடிக்கவில்லை. ஆரம்பத்தில் கவினுக்கு ஒரு ரோமியோ பிம்பம் ஏற்பட இது காரணமாகியது. சதா பெண்களுடனே ஒட்டிக் கொண்டு எல்லாரிடமும் விளையாட்டுத்தனமாக இருந்ததால் அவரால் தொடர்ந்து கேமராவுக்கு தீனி அளிக்கவும் பார்வையாளர் கவனத்தில் இருக்கவும் முடிந்தது. வெளியே பேட்டியளித்த கவினின் நண்பர்கள் இது கவினின் நிஜமான இயல்பு அல்லவே அல்ல - அவர் இயல்பில் மிக கூச்சமானவர், இப்படி இடைவிடாமல் பெண்களுடன் ஜல்லியடிப்பவர் அல்ல எனக் கூறினர். ஒருவேளை கவின் பிக்பாஸ் விளையாட்டில் தன்னை காதலனாக சித்தரித்து நடிக்கிறாரோ என ஐயம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கவின் சீரியஸான காதலனாக முடிவெடுத்து லோஸ்லியாவிடம் நெருங்கினார். இந்த உறவும் எந்தளவுக்கு நிஜமானது எனத் தெரியவில்லை. ஆனால் பார்வையாளர்களுக்கு இதில் ஏதோ ஒரு அவநம்பிக்கையும் கசப்பும் ஏற்பட்டது
ஏன்?

துவக்கத்தில் இருந்தே கவின் மற்றும் லோஸ்லியாவிடம் ஒருவித ஒட்டாமை, தயக்கம், நிலையின்மை தென்பட்டன. ஓவியா வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் ஆரவ் தான் எனும் உறுதியாக இருக்க லோஸ்லியாவோ ஏதோ உலக சினிமாவில் வரும் பாத்திரங்களைப் போல பட்டும் படாமல் காதலித்துக் கொண்டிருந்தார். சேரனை அவர் அப்பா அப்பா என அழைத்து பாசமாக நடந்து கொண்டாலும் இன்னொரு பக்கம் அவரை சுலபத்தில் விட்டுக் கொடுத்து செல்பவராக இருந்தார். கவினும் லோஸ்லியாவும் இணைந்திருக்கும் காட்சிகளில் நாம் எந்த ஒரு அன்னியோன்யத்தையும் பார்க்க வில்லை. மாறாக அன்னியோன்யமாக தெரியக் கூடாது எனும் பதற்றம் தான் தெரிந்தது. ஒருவேளை அவர்களிடையே ஈர்ப்பு இருந்திருந்தாலும் அது உறுதியான உறவாக இல்லை. அது இயல்பு தான். நம்மிடையே எத்தனையோ ஆண்-பெண் உறவுகள் தெளிவாக முடிவெடுக்க இயலாமல் தத்தளிப்பவை தான். அல்லது ஒருவேளை இருவரும் சமயோஜிதமாக பிக்பாஸில் நீடிக்கும் பொருட்டு காதலை அரங்கேற்றியிருக்கலாம்.
 எப்படியோ அவர்களின் உறவாடலில் எந்த தப்பும் இல்லை. கவின் லோஸ்லியாவிடம் அத்துமீறவோ அவரது விருப்பத்தை மீறி துன்புறுத்தவோ இல்லை. லோஸ்லியாவும் எந்த குற்றமும் இழைக்கவில்லை. ஒருவேளை அவர்களின் காதலில் ஒரு செயற்கைத்தனம் தென்பட்டால் அது அவர்களின் தவறு அல்ல - யாரும் அந்த நிகழ்ச்சியை நிஜம் என நம்பி பார்ப்பதில்லை. அது ரியாலிட்டி ஷோவே அன்றி ரியாலிட்டி அல்ல. இங்கு தான் அவர்கள் செய்த தவறு என்ன என நாம் சிந்திக்க வேண்டும்

கவினுக்கு ரோமியோ, காதலன் ஆகிய பாத்திரங்களை விடுத்தால் அங்கே செய்வதற்கு என்று ஒரு தனித்த வேலையோ எடுத்துக் கொள்ள அடையாளமோ இல்லை. லோஸ்லியாவுக்கோ ஆரம்பத்தில் அவர் சித்தரித்த சுட்டியான சுயபிம்பம், குழந்தைமை மெல்ல மெல்ல இப்போது மங்கி விட்டது. அவர் ஓவியாயைப் போன்றே காதலில் ஈடுபட்டு ஒருவேளை இறுதியில் கவின் தன்னை கைவிட்டதாக ஒரு நாடகம் போட்டு பிரசித்தமாக, அதிக வாக்குகளைப் பெற உத்தேசித்திருக்கலாம். ஆனால் மக்கள் மத்தியில் அவர்களின் காதலுக்கு கவனம் குறைய பிக்பாஸ் நிர்வாகத்தினர் ஏதேதோ உள்ளுக்குள் முடிவெடுத்து இருவருக்கும் இடையே கோடு கிழிக்க முயன்றனர்.
பிக்பாஸ் கமலஹாசன் வழி லோஸ்லியா மற்றும் கவினுக்கு காதலை மட்டுப்படுத்தும்படி அறிவுரை கூறினார். ஆனால் காதலிப்பதை விட்டு விட்டு எதைத் தான் பண்ணுவது எனப் புரியாமல் அவர்கள் காதலையே தொடர்ந்தனர்
இதை அடுத்து குடும்ப உறவுகளும் நண்பர்களும் வீட்டின் பங்கேற்பாளர்களைப் பார்க்க வந்தனர். லோஸ்லியாவின் அப்பா, அம்மா, தங்கை ஆகியோர் வந்து பழையபடிகேம்ஆடி நல்ல பெயர் வாங்கும்படியும், கவினுடன் உள்ள உறவை துண்டிக்கும்படியும் வற்புறுத்தினார்கள். லோஸ்லியாவின் அப்பா நடந்து கொண்ட விதம் தான் இருப்பதிலேயே அபத்தமாக இருந்தது. அவர் வந்ததும் தன் மகளை கண்டித்தார். “பிச்சை எடுத்து வாழ்ந்தாலும் வாழலாம், மானமில்லாமல் வாழக் கூடாதுஎன்றார். ஆனால் லோஸ்லியாவின் மானங்கெட்ட செயல் தான் என்ன? காதலிப்பதா? சரி அதுவே தவறு என்றால் அவர், எந்த அப்பாவையும் போல, கோபத்தை தன் மகளின் காதலனின் பால் தான் காண்பித்திருக்க வேண்டும். பளாரென கன்னத்தில் ஒரு அறை விட்டிருக்கலாம். (அது சரி என நான் கூறவில்லை, ஆனால் இதுவே உலக நடைமுறை.) சேரனுக்கு கவின் மீது ஏற்படும் கோபமும் பொறாமையும் கூட லோஸ்லியாவின் அப்பாவுக்கு ஏற்படவில்லை என்பது விசித்திரமே. அவர் கவினை அணைத்து பாசமாக பேசி விட்டு, தனக்கு கவின் மீது எந்த வருத்தமும் இல்லை என சொல்லி விட்டு சென்றார். ஒருவேளை அவரது நண்பர்கள் லோஸ்லியாவின் நடவடிக்கைகளை டிவியில் கண்டு அவரை கேலி பண்ணியதாக அவர் சொன்னது உண்மையெனில் அவரால் அப்படி கவினை சுல்பத்தில் மன்னித்திருக்க முடியாது. அந்த காதலும் பாதி பாசாங்கு, தன் மகள் அங்கு நிலைக்க அது தேவைப்பட்டது என அவர் புரிந்து கொண்டுள்ளார் என்பதையே இது காட்டுகிறது
பிக்பாஸில் காதல் என்பது உண்மையும் அல்ல, பொய்யும் அல்ல - அது இடைப்பட்ட ஒன்று. இது தான் லோஸ்லியா அப்பாவின் நடவடிக்கையின் ரகசியம்.
 ஒவ்வொரு அத்தியாயத்திலும் விடாமல் அங்குள்ளோர் உச்சரிக்கும் சொல்கேம்”. அந்த வீடும் அங்குள்ள உறவுகளும் நிஜம் எனத் தோன்றி, உடனே தமது நிலையாமை நினைவுக்கு வந்து மனம் பதறும் போது அவர்கள் தமக்குத் தாமேஇது ஒரு கேம், இதை உணர்வுவயப்படாமலே ஆட வேண்டும்என சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் அப்படி அவர்கள் ஆடத் தொடங்கும் போதே பிக்பாஸ் அவர்கள் போலியாக ஆடக் கூடாது, மனத்தில் பட்டதை சொல்ல வேண்டும், பாவனையின்றி நடந்து கொள்ள வேண்டும் என வற்புறுத்துவார். அப்படியே அவர்கள் பாவனையின்றி காதலித்தாலும் பிக்பாஸ்கேம்ஆடுங்கள், உங்கள் காரியத்தை மட்டுமே பார்த்துக் கொண்டு போட்டி போடுங்கள் என வற்புறுத்துகிறார். இப்போது என்னதான் பண்ணுவது - நடிக்கணுமா நிஜமாக நடந்துக்கணுமா?

இங்கு தான் நாம் ஒரு நுணுக்கத்தை கவனிக்க வேண்டும். பிக்பாஸ் என்பது ஒரு கேம் ஷோ மட்டும் அல்ல. விளையாட்டு என்பது ஆட்டக்காரர்கள் கருத்தூக்கத்துடன் ஆடுவது. விளையாட்டில் நிஜம் இல்லை என்பதால் பார்வையாளர்களுக்கு அந்தரங்கத்த எட்டிப் பார்க்கும் சுவாரஸ்யம் இராது. பிக்பாஸ் என்பது வெறும் ரியாலிட்டி மட்டுமே என்றால் அலுப்பாகி விடும் - நிஜத்தை தான் அவர்கள் அனுதினமும் தம் வீட்டுக்குள்ளே பார்க்கிறார்கள். பிக்பாஸின் நிஜமான சுவாரஸ்யம் அது ஒரு வதைக்கூடம் என்பதில் உள்ளது. இந்த வதை என்பது நேரடியாக துன்புறுத்துவது அல்ல - பல்வேறு அபத்தமான கட்டுப்பாடுகளை விதித்து பங்கேற்பாளர்களை மெல்ல மெல்ல துன்புறுத்துவது; சொந்த பந்தங்கள், கணவன், மனைவி, (முக்கியமாக) குழந்தையுடன் இருந்து அவர்களை பிரித்து, அவர்களை தம் உற்றார், குடும்பத்தினர் பற்றி புலம்ப செய்து, Freeze சொல்லி குடும்பத்தினரை உள்ளே விட்டு பங்கேற்பாளர்களை அழுது துடிக்க வைப்பது. சிறையில் தள்ளி, கடுமையான டாஸ்குகளில் வதைபட்டு, நீச்சல் குளத்தில் தள்ளப்பட்டு, தலையில் குப்பை கொட்டப்பட்டு, சிறையில் தள்ளப்பட்டு, கண்டவர்களால் வசைபாடப்பட்டு அவர்கள் தவிப்பதை பார்ப்பதே பிக்பாஸின் சாடிஸ கிளர்ச்சி.


இதனால் தான் பிக்பாஸில் இருவர் லேசாக நெருங்கும் போதே அவர்களை இணையும் வரை காத்திருந்து மெல்ல மெல்ல அவர்களை பிரித்து வைத்து அல்லது அவர்களின் காதலுக்கு பல்வேறு இடர்களை அளித்து, அதைக் காணும் பார்வையாளர்களுக்கு ஒரு செயற்கையான திகிலை, பரபரப்பை கொடுப்பது. ஓவியாவில் இருந்து லோஸ்லியா வரை பிக்பாஸ் பின்பற்றும் திரைக்கதை உத்தி இது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...