முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அயோத்தி தீர்ப்பும் நீதியும்

நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கலாமா? அதுவும் புராணக்கதைகளை ஆதாரமாகக்கொண்டு தீர்ப்பளிக்கலாமா? கூடாது. இவ்வழக்கில் புராணப் பிரதிகளில் ராமர் பிறந்த இடம் அயோத்தி என சொல்லப்படுகிறது; இதுவே மக்களின் நம்பிக்கை என தீர்ப்பின் இணைப்பில் நீதிபதிகள் கூறி உள்ளார்கள். இப்படி ஒரு அபத்தமான கூற்று வேறு எந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பிலும் கூறப்பட்டு நான் கண்டதில்லை. நாளை பல ஆபத்தான சமூகப் போக்குகள் தோன்ற, ஒரு வேளை வழக்குகளில் பிற்போக்கான தீர்ப்புகள் வழங்கப்பட இது வழி வகுக்கலாம்; முன்னுதாரணமாகலாம். ஒரு உதாரணத்திற்கு ராமாயணத்தில் சீதையின் கற்பு குறித்து ஊர் மக்கள் கேள்வி எழுப்பும் போது ராமர் அவளை தீக்குள் புகுந்து வெளிப்பட்டு தன்னை நிரூபிக்கக் கேட்கிறார். நாளை இந்த நடைமுறையை ஒரு குறிப்பிட்ட சமுதாயம் நடைமுறைப்படுத்தினால் அதை நாம் இதே போல ராமாயணத்தின் அடிப்படையில், ஒரு நம்பிக்கை எனும் பட்சத்தில், நியாயப்படுத்தலாமா? மகாபாரதப் போர் ஏன் நடக்கிறது? பாண்டவர்களின் மனைவியை கௌரவர்கள் அவமதித்ததால். இது புராணக்கதை. இதை இந்தியா முழுக்க இந்துக்கள் நம்பி ஏற்கிறார்கள். இதே போல ஒருவர் தன் மனைவியை அவமதித்தவரைக் கொன்றுவிட்டு மகாபாரத அடிப்படையில் தன் செயல் குற்றமில்லை எனச் சொன்னால் அதை நீதிமன்றம் ஏற்குமா? தீண்டாமை நமது சட்டப்படி ஒரு குற்றம். ஆனால் புராணக் கதைகளின் தீண்டாமை குற்றமல்ல. கர்ணன் ஒரு பிராமணன் அல்ல எனத் தெரியவரும் போது அவனது குருவான பரசுராமன் அவரை சாபமிட்டு வெளியேற்றுகிறார். பின்னர் கர்ணன் ஒரு தேரோட்டியின் மகன் எனத் தெரியவரும் போது அர்ஜுனன் அவனுடன் போட்டியிட மறுக்கிறான். அன்றைய சமூகத்தில் ஒருவர் தன் சாதி எல்லையைக் கடந்து கல்வி கற்கவோ போட்டியிடவோ அனுமதி இல்லை. இதை நமது மரபு, நம்பிக்கை எனக்கோரும் ஒரு ஆசிரியர் இன்று தன் மாணவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தினராக இருக்கக்கூடாது எனச் சொல்லி வகுப்பில் இருந்து மாணவரை வெளியேற்றினால் என்னவாகும்?

தன்சகமாணவருடன்இதேபோலசாதிஅடிப்படையில்தேர்வுஎழுதமுடியாதுஎனஒருமேல்சாதிமாணவர்பிரச்சனைசெய்தால்என்னவாகும்? அடிப்படை உரிமையா நம்பிகையா என வரும்போது நீதிமன்றத்தின் நிலைப்பாடு எப்படி இருக்கும்? இந்தியாவில்எல்லாருக்கும்தம்மதத்தைபின்பற்றஉரிமைஉண்டுஎனஅரசியலமைப்புகூறுகிறது. சுமார் ஐந்து நூற்றாண்டுகளாக அயோத்தியில் பாபர் மசூதியில் அப்படியாக இஸ்லாமியர் வழிபட்டு வருகிறார்கள். ஒரு தரப்பினர் தம்மதத்தை பின்பற்றும் இந்த உரிமையைத்தான் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இருந்தே இந்துத்துவ அமைப்பினர் எதிர்த்து வருகிறார்கள். பிரிட்டிஷ் அரசாங்கம் தொடர்ந்து இந்த உரிமையை பாதுகாத்தும், இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு ஆட்சியாளர்கள் மற்றும் நீதி அமைப்புகள் இந்த உரிமையை தொடர்ந்து மறுத்தும் வந்துள்ளன. எதிர்காலத்தில், “சமூகஅமைதியை” காப்பாற்றும் பொருட்டும், மரபான நம்பிக்கைகளின் அடிப்படையிலும் சாதி அமைப்பை, வர்ணாசிரமத்தை நமது நீதிமன்றங்கள் ஆதரித்து தீர்ப்பளிக்காது எனக் கூறமுடியுமா?
மேலும் படிக்க
https://uyirmmai.com/செய்திகள்/அரசியல்/அயோத்தி-தீர்ப்பும்-நீதிய/?fbclid=IwAR0cmeXLbAb5TWrUOOyXGWKDp85ekaF6BVw76RcyZP5rr8PKRYynFjYJVaY

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...