நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனின் இன்றைய அறிக்கை அரசு வரும் ஐந்தாண்டுகளில் 102 லட்சம் கோடி ரூபாயை உள்கட்டமைப்பு பணிகளுக்காக செலவழிக்கப் போவதாய் சொல்கிறது . நம்ப முடியவில்லையே ! வழக்கமாக பெரும்பகுதி பணத்தை ராணுவம் , தடுப்பு முகாம் எனத் தானே செலவழிப்பார்கள் . இது ஒரு நல்ல திருப்பமே . இந்த முதலீடு எளிய மக்களுக்கு நிறைய வேலை வாய்ப்பை உண்டு பண்ணித் தர வேண்டும் . ஆனால் விபரமாய் பார்க்கும் போது சொற்பமான தொகை மட்டுமே விவசாயத்துக்குப் போவது இந்த அரசு இன்னமும் நமது பொருளாதார சீரழிவின் ஆதாரக் காரணத்தை புரிந்து கொள்ள வில்லை என்பதைக் காட்டுகிறது . விவசாயத்திற்கும் ஆரம்பநிலை தொழில்முனைவோருக்கும் இலவசமாய் மின்சாரமும் கட்டமைப்பு வசதிகளையும் பண்ணித் தர வேண்டும் . கல்விக்கும் கூடுதலாய் பணம் செலவழிக்க வேண்டும் .