முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்திய ஒருநாள் அணியின் சவால்கள் - கீப்பிங் மற்றும் ஆல்ரவுண்டர்கள்

ஸ்டம்புக்கு முன்னால் பந்தைப் பிடித்த அபத்தம்

சமீபமாக பண்டின் விக்கெட் கீப்பிங் மிக மட்டமாக இருக்கிறது - அதுவும் இன்று நடந்த மே.இ தீவுகளுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் ஆட்டத்தில் அவர் விட்ட மூன்று விக்கெட்டுகள் தாம் இந்த 315 ஸ்கோருக்கு காரணமாகியது. அதுவும் சில பந்துகளின் போது அவர் பந்து செல்லும் திசைக்கு நேர் எதிர் திசை நோக்கி நகர்வது காண வேடிக்கையாக இருந்தது; ஒரு ஆட்டத்தில் பந்தை அவர் ஸ்டம்புக்கு முன்னால் வந்து பிடிக்க நடுவர் அதை நோ பாலாக அறிவித்தார். அதைக் கண்டு உலகமே சிரித்தது. பண்ட் ஒரு இயல்பான கீப்பரும் அல்ல; பந்தை கவனித்து அதன் திசையை கணித்து கால்களை நகர்த்தி முன்னேறுவது அவருக்கு வராது. நின்ற நிலையிலே கைகளைக் கொண்டு பிடிப்பதே அவரது பாணி. தட்டையான ஆடுதளங்களில் சாதாரண பந்து வீச்சுக்கு எதிராக இது எடுபடும் என்றால் சிக்கலான ஆடுதளங்களில் பந்து திரும்பிட ஸ்விங் ஆக அவர் பிரண்ட்ஸ் படத்தில் வடிவேலுவின் ஆட்கள் பங்களாவில் பொருட்களைப் போட்டு உடைப்பதைப் போல கன்னாபின்னாவென கீப்பிங் பண்ணுகிறார் - கை வடக்கே போனால் கால் தெற்கே பறக்கிறது. எப்போது முகத்தில் ஒரு அசட்டு சிரிப்பு வேறு. இப்போதைக்கு உலகின் மிக மட்டமான கீப்பர் பண்ட் தான். அவரை பேட்ஸ்மேனாக மட்டுமே ஆட வைப்பதே நம் அணியின் ஆரோக்கியத்துக்கு நல்லது.

 பண்டின் குறைகள் தொழில்நுட்பம் சார்ந்தது என்பதால் அவர் தனது கீப்பிங் பழுதுகளை சரி செய்ய பல மாதங்களோ சில வருடங்களோ கூட ஆகலாம். பண்டுக்குப் பதிலாக தோனியை கீப்பராக்கலாம்; ஆனால் அது ஒரு தற்காலிகத் தீர்வு மட்டும் தான். சாம்சனை முயலலாம், ஆனால் அவரும் கூட நல்ல கீப்பரல்ல. கெ.எல் ராகுலும் அப்படியே. இன்றைய ஒருநாள் ஆட்டத்தில் விக்கெட்டுகளே ஆட்டத்தின் போக்கை தீர்மானிக்கும் என்பதால் கீப்பிங் மிகவும் முக்கியமாகிறது. ஆகையால் அடுத்து ஒரு தோனி தோன்றும் வரை ஒரு நல்ல கீப்பர் சுமாரான பேட்ஸ்மேனாக இருந்தாலும் அவரை ஆட வைப்பதே தோதானது (கெ.எஸ் பரத்தை முயலலாம்). அடுத்து, கேதார் ஜாதவ் உடனடியாய் ஓய்வுபெறுவதே அவருக்கும் இந்த உலகுக்கும் நல்லது.

அடுத்து பவுலிங். பும்ராவும் பாண்டேவும் திரும்ப வந்த பின் இந்தியாவின் பவுலிங் நேர்த்தி கூடும் என்றாலும் மைய ஓவர்களில் விக்கெட்டுகள் வீழ்த்தும் திறனை நாம் இழந்து விட்டோம். அதை மீட்க சாஹல் மற்றும் குல்தீப்பை இணைந்து ஆட வைக்க வேண்டும். இரண்டு ஆல்ரவுண்டர்கள் (பாண்டே, ஜடேஜா), இரண்டு கால்சுழலர்கள், இரண்டு வேகவீச்சாளர்கள் என்பதே சரியான பந்து வீச்சுக் கூச்சணியாக இருக்கும். கீப்பரையும் சேர்த்து ஐந்து பேட்ஸ்மேன்களையே ஆட முடியும். அந்த பட்சத்தில் பண்டின் இடத்தில் சாம்சனை ஆட வைக்கலாம். அல்லது ஒரு கால்சுழலரின் இடத்தில் ஒரு கீப்பரை கொண்டு வர வேண்டும். வேகவீச்சாளர்களுக்கான ஆடுதளம் என்றால் மூன்று வேகவீச்சாளர்கள் + பாண்டியா + ஜடேஜா என எண் எட்டு வரை பேட்டிங் வரிசையுடன் இறங்கலாம். தட்டையான ஆடுதளம் என்றால் ஒரு பேட்ஸ்மேன் + வேகவீச்சாளரைக் குறைத்து இரு கால்சுழலர்களை கொண்டு வரலாம்; ஆறு பவுலர்களுடன் ஆடலாம். என் 5-8 வரை கீழ்மத்திய வரிசையினர் அதிகமாய் ரன்கள் அடிப்பது அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமாக இருக்கும். அப்போது கீப்பர் எனும் புதிரை அவிழ்ப்பதே கோலிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.