முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குடியுரிமை திருத்த மசோதாவின் பிழைகள்



குடியுரிமை திருத்த மசோதாவின் அடிப்படையான பிரச்சனை அதன் தர்க்கம் பிழையானது, அதனாலே உள்நோக்கம் கொண்டது என்பது. மூன்று இஸ்லாமிய நாடுகளை சேர்ந்த அகதிகளில் இஸ்லாமியரை மட்டும் ஏற்றுக் கொள்ள முடியாது, ஆனால் இந்துக்களும் கிறித்துவர்களும் வரலாம், அவர்களுக்கு குடியுரிமை உண்டு என்னும் தர்க்கமே பிழையானது - அகதி அடையாளத்தின் வரைமுறையே, உலகம் முழுக்க, மதம் சார்ந்த ஒடுக்குமுறை அல்ல; அரசினாலோ நாட்டில் நிலவும் வன்முறை சம்பவங்களாலோ வாழும் நிலையற்றுப் போய் அந்நிய நாட்டில் இடம் நாடுபவரே ஒரு அகதி. இப்போது பாஜக அரசு இதை மாற்றி மத அடிப்படையில் வரையறுக்கிறது. எனில் இது உலக நடைமுறைக்கு எதிரானதாகிறது. நாளை இதன் நீட்சியாக சில குறிப்பிட்ட நாடுகளில் உள்ள குறிப்பிட்ட மதத்தினர் நம் நாட்டுக்கு வந்து போவதைக் கூட நாம் தடுப்பதற்கு ஒரு திருத்த மசோதா கொண்டு வரலாம். இதையே வளைகுடா நாட்டு அரசுகள் செய்தால் அங்கு இஸ்லாமியர் மட்டுமே போய் வேலை செய்யும் நிலை ஏற்படும்.


அடுத்து naturalisation (ஐந்து ஆண்டுகள் இந்தியாவில் ஒரு அகதி வாழ்ந்ததைக் காட்டி குடியுரிமைக்கு ஒருவர் விண்ணப்பிக்க சட்டத்தில் உள்ள வழிமுறை) என்பதைக் காட்டி இஸ்லாமிய அகதிகள் இங்கு விண்னப்பிக்கலாம் என இச்சட்ட திருத்தம் ஒரு குறுக்குப் பாதையை சொல்கிறது. இவர்கள் ஐந்து ஆண்டுகள் இங்கு ஏற்கனவே இருந்துள்ளதைக் காட்டி விண்ணப்பிக்கலாம். இந்த திருத்த மசோதா முழுக்க அடுத்து இங்கு வரப்போகும் அகதிகளை முன்னிட்டே இயற்றப்பட்டுள்ளது - எதிர்கால அகதிகளில் இந்துக்களுக்கும் கிறித்துவர்களுக்கும் குறிப்பிட்ட மூன்று இஸ்லாமிய நாடுகளில் தாம் ஒடுக்கப்பட்டதாய் காட்டி விண்ணப்பிக்க இது முழுமையான அனுமதியை கொடுக்கிறது. சரி, இப்படி மத ஒடுக்குமுறையை காட்டி அவர்களை ஏற்றுக் கொள்வது அபத்தமானது என்றாலும், அதை ஏற்றுக் கொள்ளும் பட்சத்திலும் பாலஸ்தீனத்தில் இருந்து ஒரு இஸ்லாமியர் இங்கு அகதி உரிமை வேண்டி வந்தால் என்னவாகும்? அவருக்கு, இப்போது உள்ள திருத்தத்தின் அடிப்படையில், குடியுரிமை மறுக்கப்பட்டே ஆக வேண்டும். ஆனால் ஒரு ஈழத்தமிழர் பௌத்த அரசியல் லாபியின் ஒடுக்குமுறையினால் ஏற்பட்ட உள்நாட்டுப் போரினால் தான் நாட்டைவிட்டு வெளியேற நேர்ந்ததாகக் கூறினால் இந்த சட்ட திருத்தப்படி அதை அரசு ஏற்காது. இங்கு அரசு என்ன பண்ணுகிறதென்றால் மத ஒடுக்குமுறை என்பதையேஇஸ்லாமிய அரசுகள் பிற மதத்தவர் மீது நடத்துகிற ஒன்றுஎன வரையறுத்திருக்கிறது. இது தான் உச்சபட்ச அபத்தம்.

இந்த இந்து, கிறித்துவ புதுக்குடிமக்களுக்கு அரசு ஒரு மாநிலத்தை வாழிடமாக அளித்தால் அது அங்கு ஏற்கனவே உள்ள மக்களிடையே அதிருப்தியை உண்டு பண்ணாதா? கல்வி, வேலை, திருமணம் என பல விசயங்களில் இங்கு மக்களிடையே போட்டி உண்டு. நீங்கள் முஸ்லீம் அல்லாத அகதிகளுக்கு தாராளமாக கதவைத் திறந்து விட்டால் பின்னர் அஸ்ஸாமில் உள்ளது போன்ற பெரும் வெறுப்பரசியலும் துவேசமும் தான் மக்களிடையே புது குடிமக்கள் மீது ஏற்படும்.

இறுதியாக, இந்தஇந்துஅகதிகள் எனும் பெயரில் ஒரு லட்சத்தில் இருந்து பத்து லட்சம் பேர் நாளை வருகிறார்கள் என வைப்போம் - இவர்களை நாம் ஐந்து வருடங்கள் முகாம்களில் வைத்து விட்டு அடுத்து உடனடியாக குடியுரிமை வழங்கப் போகிறோம். இவர்கள் எந்த மாநிலங்களுக்கு அனுப்பப் படுவார்கள்? தேர்தலில் எங்கு பாஜகவுக்கு அதிகமாக ஓட்டு வேண்டுமோ அங்கேயா? எனில், குடியுரிமை திருத்த சட்டமா வாக்காளர்களை புதுசாக பிடித்து வரும் சட்டமா இது? ஒரு ஓட்டு கூட இப்படி வெளிநாட்டினர் ஒருவரை அநீதியாக இங்கு கொணந்து அதன் பொருட்டு இந்த அரசு பெறப் போகிறது என்றால் அதன் தர்க்கம் தான் என்ன
இந்த மக்களை நீங்கள் அகதி முகாமில் இருந்து ஒரு மாநிலத்துக்கு அனுப்புகிறீர்கள். அங்கு அவர்கள் ஒரு குடும்பத்தை அமைத்து வாழ்ந்து வேலை பெற்று அந்த மாநில அரசை கவனித்து ஓட்டளிக்க கணிசமான நேரம் தேவைப்படும். ஆனால் குடியுரிமையுடன் ஒருவருக்கு இப்படி உடனடி வாக்குரிமையும் அளிப்பது என்னவிதமான நியாயம்? என் சொந்த ஊர் குமரி. அங்கு ஒரு மாவட்டத்தில் ஆயிரம் இந்துக்கள் மற்றும் இந்துக்கள் நாளை குடிபெயர்ந்து வாக்குரிமை பெற்று ஓட்டளித்தால் அதை நான் ஒரு போதும் ஏற்க மாட்டேன். ஒருவேளை முகாம்கள் இருந்த ஊரிலே அவர்கள் அமர்த்தப்படுவார்கள் எனில் அதுவும் நியாயமல்ல - அகதி வாழ்வும் குடியுரிமை வாழ்வும் ஒன்றல்ல வாக்குரிமைக்கான தகுதி என்ன என்பது பற்றி பேசாமல் இந்த மசோதா கமுக்கமாக இருக்கிறது. ஒரு அகதி குடியுரிமை பெற்ற பிறகு பத்து / பதினைந்து வருடங்கள் இங்கு வேலை செய்து பங்களித்து விட்டு இங்குள்ள அரசியல் சூழலையும் நன்கு கவனித்து விட்டு அவருக்கு வாக்குரிமை என்றால் அது நியாயம். ஏனென்றால் அந்த கால அளவில் அவர்களை இங்கே குடிமக்களாக்கிய அரசு ஆட்சியில் இருக்காது. அதனால் இப்படி பறித்து நடப்பட்டவர்களைக் கொண்டு அரசாங்கம் பெரிதும் பயனடைய முடியாது.

இது தான் சட்ட திருத்தம் எனும் பேரில் உலக நடைமுறையை மதிக்காமல் குட்டையை குழப்புவதில் உள்ள பிரச்சனை. கடந்த சில ஆண்டுகளில் இந்த அரசு கொண்டு வந்தசீர்திருத்தங்களைப்போன்று இதுவும் நடைமுறை சிக்கல்களை கருதாமல் கலாச்சார அரசியலின் நோக்கில், மேம்போக்கான மாற்றங்களுக்காக, சங்கர் படம் போல பரபரப்பை உண்டு பண்ணி நாட்டையே தம்மை நோக்கித் திருப்புவதற்காக கொண்டு வரப்பட்ட ஒன்று. மேலும் பாஜகவின் தலைமையில் அறிவுரை வழங்க மூத்த தலைவர்கள், அறிஞர்கள் உள்ளிட்ட ஒரு உட்குழு இல்லை என்பதையும் இது காட்டுகிறது, மோடியும் ஷாவும் முடிவெடுக்கிறார்கள்; சட்ட வல்லுநர்கள் அதை வரைவாக எழுதி, பாராளுமன்றத்தில் எந்த விவாதமும் இன்றி, யார் பேச்சையும் கேளாமல் நிறைவேற்றி விடுகிறார்கள். இப்படி அரசியலமைப்பை அரசியல்படுத்துவதன் ஆபத்தை உணர்ந்து தொடர்ந்து பல அறிஞர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், எழுத்தாளர்கள் இதைக் கண்டித்து வருகிறார்கள். இதை தேசவிரோத இடதுசாரி கும்பலின் கூச்சல் என இந்த அரசு புறங்கையால் தட்டி விட்டுப் போய் விடும். அடுத்து இந்த அப்பிராணி மக்கள் அமித் ஷாவையும் பிரதமராக்கி ஐந்தாண்டுகள் ஆள விட்டால் என்னென்ன அபத்தங்கள் சட்டமாகப் போகின்றனவோ என நினைத்து மனம் பதறுகிறது


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...