முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காதலர்களுக்கு பத்து பரிந்துரைகள் (1)



எச்சரிக்கை: இது ஆண்களுக்கான கட்டுரை!

காதலிப்பவர்களுக்கு இத்தகைய சேதிகளையெல்லாம் படிக்க நேரமிருக்காது எனத் தெரிந்தே தான் இதை எழுகிறேன்

1) இது மிக முக்கியமானது என்பதாலே முதலில் சொல்கிறேன் - அழகிகளை ரசியுங்கள், ஆனால் காதலிக்காதீர்கள். காதலுக்கு முதன்மையான விரோதி அழகு தான். ஏனென்றால் அழகு ஒரு சமநிலையின்மையை ஏற்படுத்தி உங்களை நேசத்துக்காக பிச்சையெடுக்க வைக்கும். பிச்சைக்காரர்கள் ஒருநாளும் காதலர்கள் ஆக முடியாது.
 அடுத்து, அவளது அழகிய தோற்றம் அவளை அறிய விடாமல் உங்களைத் தடுக்கும், அவளுக்கு அகந்தையை அளிக்கும், அந்த அகந்தையை நீங்கள் சதா கெஞ்சியும் கொஞ்சியும் பலமடங்காக பெருக்குவீர்கள். இப்போது அப்பெண் உங்களை நேசிக்காமல் நீங்கள் நேசிக்கும் தன்னை நேசிக்கத் தொடங்குவாள். பிறகு உங்கள் காதலை யாருமே காப்பாற்ற முடியாது. Dialogues நூலில் சாக்ரடீஸ் ஒரு இளைஞருக்கு அளிக்கும் அடிப்படையான அறிவுரை நீ யாரைக் காதலிக்கிறாயோ அவரை ஒருபோதும் மிதமிஞ்சி புகழாதே என்பது. ஆனால் இதெல்லாம் சொல்ல எளிது - ஒரு பேரழகி நம் முன் வந்தால் எல்லா தீர்மானங்களும் தலைகீழாக கவிழ்ந்து விடும்

அழகு என்பது உடல் வேட்கை தீர்ப்பதற்கான ஒரு தோரணவாயில். ஒரு பெண்ணை நீங்கள் அடைந்ததும் அவள் மீது ஆர்வம் இழக்கும் படியே இயற்கை உங்களைப் படைத்திருக்கிறது; அதனாலே அழகு போகப் போக குறைகிறது; அழகு அப்படி குறைய முடியாது அல்லவா, ஆனால் நமக்கு அப்படித் தோன்றும் வரை இயற்கை ஹார்மோன்களை சுரக்க செய்கிறது. அது நம் பார்வையை மழுங்கடிக்கிறது. ஆனால் காதல் அழகினால் தூண்டப்படும் என்றாலும் அது அழகில் உருவெடுப்பதில்லை. அதற்கு அழகு அவசியமும் அல்ல

காதல் மொழிவயப்பட்டது. அது பேச்சில் வளர்ந்து உடல் இணக்கத்தில் தீவிரம் கொள்வது

2) காதலிக்கும் பொது அந்த உறவாடலைத் தவிர வேறெதுவும் முக்கியமல்ல. காதலியை மகிழ்ச்சியாக்குவது உங்களுக்கு அது மகிழ்ச்சி தரும் பொருட்டு மட்டுமே நிகழ வேண்டும். தியாகத்துக்கு காதலில் எந்த இடமும் இல்லை. உங்கள் காதலிக்காக நீங்கள் சொந்த பணத்தை ஏராளமாக செலவழிக்க அவசியம் இல்லை; அவளுக்காக யாரையும் விட்டுத் தர அவசியமில்லை. அவளும் உங்களுக்காக தனக்குப் பிடிக்காத எதையும் செய்ய வேண்டியதில்லை. அப்படி செய்தால் அது காதலுக்கே பாதகமாகும்.
நீங்கள் தியாகம் பண்ணும் போது காதலில் ஒரு ஏற்றத்தாழ்வு வந்து விடுகிறது. நீங்கள் எதையோ ஒன்றை விட்டுக் கொடுத்து அந்த தன்னுணர்வுடனே இருக்கிறீர்கள் எனில் அதற்காக காதலியோ காதலனோ உங்களிடம் கடன்பட்டிருக்க வேண்டும் என எதிர்பார்ப்பீர்கள். இது கசப்பையும் ஏமாற்றத்தையும் கொண்டு வரும்

3) எப்போதும் காதலி கேட்பதை உடனே செய்து தராமல் முடியாது என மறுக்க பழகுங்கள். அவள் உங்கள் சேவைகளை எளிதாக சாதாரணமாக எடுத்துக் கொள்ள அனுமதிக்காதீர்கள். நீங்கள் உங்கள் செயலாலே மதிப்பிடப்படுவீர்கள். கேட்கிறதை எல்லாம் எடுத்துக் கொடுக்கும் ஆள் நீங்கள் எனில் நீங்கள்  மலிவான ஒரு நபர் எனும் மதிப்பீடு சுலபத்தில் அவளுக்கு வந்து விடும். (காதலிகளுக்கும் இது பொருந்தும்.) காதலில்முடியாதுஎனும் சொல் இனிமையானது; அதை சரியான படி பல சந்தர்பங்களில் பயன்படுத்தக் கற்றுக் கொள்ளுங்கள்.
4) சும்மா பாராட்டிக் கொண்டு மட்டும் இராமல் குறைகூறக் கற்றுக் கொள்ளுங்கள். காதலியிடம் குறைகாணும் போதே அவளுக்கு உங்கள் மீதான அக்கறையும் பிரியமும் பலமடங்காகிறது. ஆனால் எல்லாவற்றுக்கும் குறை காண வேண்டாம். பெரிய விசயங்களை பாராட்டுங்கள், ஆனால் சின்னச் சின்ன செய்கைகளில் விமர்சனம் வையுங்கள், அதை தர்க்கரீதியாக கண்ணியமாக அல்லாமல் கோபாவேசமாக செய்யுங்கள். உணர்ச்சியின் மொழியில் வெளிப்படும் குற்றஞ்சாட்டல்கள் அழகிய காதல் தருணங்களாக பரிணமிக்க வாய்ப்பு அதிகம். அவள் அணிந்து வரும் நளினமான ஆடையை பொதுவாக பாராட்டுங்கள், ஆனால் ஒரு சின்ன குறையை சுட்டி அதற்காக கோபத்துடன் கடிந்து கொள்ளுங்கள். அவளுக்கு சற்று வருத்தம் ஏற்பட்டு கண்ணில் நீர் வரும்படிக்கு. அடுத்து அவளாகவே உங்களை சமாதானப்படுத்துவாள். ஆமாம், நீங்கள் அவளை சமாதானப்படுத்தினால் அது சரணாகதி. அவளாகவே உங்களை ஆறுதல்படுத்தினால் அங்கு காதல் தேன் சொட்டும்; அங்கு அவள் தன் அழகை உங்களிடத்து பரிபூரணமாக உணர்வாள். அங்கு அவள் உங்கள் அன்பை, அவள் மீதான அர்ப்பணிப்பை மறைமுகமாய் தன்னுடைய ஆறுதல்மொழி வழியாக அறிவாள். “எனக்காக எவ்வளவு கோபப்படுகிறான் பார்என அபத்தமாக ஆனால் அழகாக உங்கள் காதலி நினைப்பாள்
அதனால் கோபப்படுங்கள். உங்களுக்காக அவள் பிரியாணி செய்து பரிமாறினால் அதை முழுமையாக பாராட்டாதீர்கள். அப்படி பாராட்டினால் அவளுக்கு அது ஒருவித கசப்பை தரும். அவள் என்ன முனியாண்டி விலாஸ் சர்வராபிரியாணீ பிரமாதம்என சொல்லி டிப்ஸ் தருவதற்கு. அவளுக்கு அது பிரியாணி மட்டுமல்ல, தன்னுடைய இச்சை திளைக்கும் தேகத்தின் நீட்சி. அவளிடம்சிறப்புஎனப் பாராட்டும் போதுஇது போதும்என அவள் மீது, அவளுடல் மீது வைக்கும் ஒரு மதிப்பீடாகிறது. ஆனால்இது போதாது, இதை விட நன்றாக நீ செய்திருக்க வேண்டும்என கோபத்தைக் கொட்டும் போது, அப்போது அவள் மனம் புண்பட்டு கோபத்தில் திரும்ப உங்களிடத்து சீறும் போது, கண்ணீரைக் கொட்டும் போது அவள் மீதான உங்களுடைய இச்சையை சுலபத்தில் திருப்திப்படுத்த முடியாது என தன் ஆழ்மனத்தில் உணர்ந்து கொள்கிறாள்
ஆனால், கவனம்: அவளிடத்து நீங்கள் நேரடியாக அதிருப்தியைக் காட்டினால் அது காதல் முறிவுக்கு இட்டுச் செல்லும்
ஆகையால் அவளது வேலையில், செய்கைகளில் தொடர்ந்து அதிருப்தியை வெளிப்படுத்துங்கள். அதை ஆவேசமாக உண்மையாக செய்யுங்கள். சின்ன சின்ன விசயங்களால் நீங்கள் ஆழமாக புண்படுவதாகக் காட்டுங்கள். அப்போது தனதுகட்டற்ற தன்மையை, தனது எல்லையற்ற அழகை, அள்ளத் தீராத அன்பை இவன் உணர்கிறான்என அவள் புரிந்து கொள்வாள்.

5)  தீர்மானங்கள் இல்லாமல் இருங்கள் - இது உண்மைக் காதல், இது சாஸ்வதமான காதல், இவளிடம் இருந்து அணுவளவும் பிரியாதிருப்பேன் என்றெல்லாம் நினைக்காதீர்கள். ஒவ்வொரு நாளையும் கடைசி நாளாகக் காணுங்கள். அப்போதே காதல் உயிர்ப்புடன் இருக்கும். பெரிய ஏமாற்றங்கள் இன்றி வாழ முடியும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...