Skip to main content

Posts

Showing posts from May, 2020

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்சனைக்கு மூன்று தீர்வுகள்

உ . பி முதல்வர் யோகி ஆதித்யநாத் தன் மாநிலத்தில் இருந்து வேறு ஊர்களுக்குப் பிழைப்பு தேடிப் போகும் தொழிலாளர்களுக்கு என ஒரு தனி கமிஷன் ஆரம்பித்திருப்பதாக ஒரு செய்தி படித்ததும் இந்த ஆள் ஒரு கின்னரன் , அடுத்த மோடி மஸ்தான் இவர்தான் எனும் முந்தையை எண்ணம் உறுதிப்பட்டது .   உ . பியின் மக்கள் தொகை இருபதரை கோடி . அங்கிருந்து வெளிமாநிலங்களுக்கு புலம்பெயரும் தொழிலாளர்களின் எண்ணிக்கையோ இருபத்தாறு லட்சம் . அந்த மாநிலத்தில் எந்தளவுக்கு வறுமையும் வேலையில்லா திண்டாட்டமும் இருந்தால் இப்படி ஜனத்தொகையில் சுமார் பத்து சதவீதம் பேர் புலம்பெயரும் நிலை ஏற்படும் என யோசியுங்கள் . கொரோனா நாடடங்கின் போது உ . பி . யின் புலம்பெயர் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள் . ஒரு பக்கம் அவர்களால் தமது புகுந்த வீடான புலம்பெயர்ந்த மாநிலங்களில் பட்டினியும் பாதுகாப்பின்மையையும் தாங்கி சமாளிக்க முடியவில்லை . அந்த மாநிலங்கள் வேலையில்லாத போது இவர்களை விலங்குகளை விட கீழாக நடத்திட பிறந்த வீடான உ . பியோ தம் வீட்டுக்குள் அவர...

அரவிந்த டி சில்வா – இலங்கையின் ஜீனியஸ்

“ அரவிந்த டி சில்வா தான் நான் பந்து வீசி உள்ள பேட்ஸ்மேன்களிலேயே மிகவும் சிரமமானவர் . வேகப்பந்தை ஆடுவது அவருக்கு தண்ணீர் குடிப்பது போல ”, என்றார் இந்தியாவின் சிறந்த வேகவீச்சாளர்களில் ஒருவரான ஜவகல் ஸ்ரீனாத் . தொண்ணூறுகளுக்கு பிறகு இலங்கையில் பல அட்டகாசமான பேட்ஸ்மென்கள் தோன்றினார்கள் . ஜெயசூர்யா , ஜெயவர்த்தனே , சங்கக்காரா … இவர்களில் ஆகச்சிறந்தவர் டி சில்வா தான் . இலங்கை கிரிக்கெட்டின் சச்சின் டெண்டுல்கர் அவர் .

உ.பியை “சோனாகாச்சியாக” மாற்றுகிறாரா யோகி ஆதித்யநாத்?

Theprint இணையதளத்தில் வந்துள்ள இந்த கட்டுரை ( https://www.firstpost.com/india/after-suspending-labour-laws-up-okays-migration-commission-adityanath-govts-move-can-leave-workers-at-mercy-of-predatory-capitalists-8420011.html ) ஒரு விசயத்தை தெளிவுபடுத்துகிறது: தற்போது உத்தர பிரதேச /அரசு புலம்பெயர்வு கமிஷன் ஒன்றை அமைத்து அதன் மூலம் தொழிலாளர்கள் தம் மாநிலத்தை விட்டு வெளியேறுவதை தடுப்பதற்கும், உள்ளூரில் உள்ள தொழிலாளர் அடிப்படை நலன்களைப் பாதுகாக்கும் சட்டங்களை ரத்து செய்வதற்கும் இடையில் ஒரு தொடர்பு உள்ளது; ஒரு சதித்திட்டம் இதன் பின்னால் உள்ளது. இனிமேல் குறைவான சம்பளத்துக்கு அதிகமான நேரம் தொழிலாளிகளை அங்கு வேலை வாங்கலாம். மாநில எல்லையை கடக்க முடியாது என்பதால் அவர்கள் புதிய வேலையை வெளியே தேட முடியாது. அவர்கள் அங்கேயே சிறைவைக்கப்படுகிறார்கள். அதிகமான தொழிலாளிகள் ஒரே இடத்தில் வேலை தேடும் போது முதலாளிகள் அதைக்காட்டி ஊதியத்தைக் குறைக்கவும் கூடுதலாய் வேலைவாங்கி பிழியவும் முடியும். அதை எதிர்த்து யாரும் நீதிமன்றத்துக்கு செல்லக் கூடாது என்பதற்காகவே ஆதித்யநாத் தொழிலாளர் உரிமை சட்டங்களை ரத்து செய்கி...

பிரையன் லாரா – தனி ஒருவன்!

லாராவா சச்சினா ? யார் சிறந்த ஜீனியஸ் ? தொண்ணூறுகளில் இதை விவாதிக்காத ஊடகங்களோ ரசிகர்களோ இல்லை . ரெண்டாயிரத்துக்கு பிறகு சச்சின் நூறு சதங்களும் முப்பதினாயிரத்துக்கு மேல் ரன்களும் அடித்து கிரிக்கெட்டின் கடவுள் ஆகி விட்டார் . ஆனாலும் இன்னமும் நிபுணர்கள் மத்தியில் இச்சர்ச்சை ஓயவில்லை . நாம் இந்த கேள்விக்கான விடையை கடைசியில் காண்போம் .

தமிழ் சினிமாவில் மெக்கபின் [MacGuffin] (3)

இந்த மெக்கபின் என்பது காலங்காலமாக கதைசொல்லலில் உள்ளதே - ஆர்தர் மன்னரின் கதைகளில் தேடப்படும் ஹோலி கிரெயில் இதற்கான துவக்கமாக இருக்கலாம் என்கிறார்கள் . கதையை ஆரம்பிக்க இந்த கிரெயில் பயன்படுகிறது , ஆனால் கதையின் போக்கில் இதை கண்டுபிடிப்பது முக்கியமல்லாமல் ஆகிறது . ஆயிரத்தோரு அரபிய இரவுகளில் ஷெஹரசாத் தன் உயிரைக் காப்பாற்றும் பொருட்டு மன்னருக்கு ஒவ்வொரு இரவும் ஒரு சுவாரஸ்யமான கதையை ஆரம்பித்து அதை முடிக்காமல் பாதியில் விட்டு விடுகிறாள் ; மறுநாள் அக்கதை முடிந்தாலும் மற்றொரு கதை பாதியில் விடப்படுகிறது . இப்படி ஆயிரத்தோரு இரவுகள் அவள் கதை சொல்கிறாள் . கதைக்குள் கதை , அக்கதைக்குள் மற்றொரு கதை எனப் போகும் போது அதைப் படிப்போருக்கு முதல் கதை என்ன , அதன் முடிவு என்ன எனும் கேள்வியே சுவாரஸ்யத்தில் எழாது . அந்த முடிவை அறிய நேரும் போதும் அது முக்கியமாக இருக்காது ; அடுத்த கதையின் முடிவு என்ன என்பதே ஆவலூட்டும் விசயமாக இருக்கும் . இப்படி முழுக்க சொல்லாமல் விடப்படும் கதையின் முடிவு இங்கு மெக்கபின் ஆகிறது . து...

வேலைநீக்கத்தை நியாயப்படுத்தும் முட்டாள்கள்

கொத்துக்கொத்தாய் ஊழியர்களை வேலை நீக்கம் செய்வதை ஆதரித்து எழுதுபவர்களைக் கண்டால் மூஞ்சியில் காறி உமிழத் தோன்றுகிறது ( முடிந்தால் கொரோனா கிருமிகளுடன் சேர்த்து ). நிறுவனத்துக்கு போதிய லாபம் இல்லை என்பதெல்லாம் ஒரு நியாயமான காரணமா சொல்லுங்கள் ? ஒருவருக்கு வேலைத்திறன் இல்லை அல்லது அவர் ஒரு பெரும் குற்றத்தை ( திருட்டு , பாலியல் அத்துமீறல் ) செய்து விட்டார் எனும் காரணங்களுக்காக மட்டுமே ஒருவரை வேலை நீக்கம் செய்ய வேண்டும் எனும் கடுமையான சட்டங்களை அரசு இயற்ற வேண்டும் . ஏதோ ஜெஸ்ஸி கார்த்திக்கை கழற்றி விடுவதைப்போல ஒரு ஊழியரை வீட்டுக்கு அனுப்புவது மனித உழைப்பை மலினப்படுத்தும் செயல் .

வேலை நீக்கங்களின் பின்னுள்ள ஆபாசம்

நான் இதுபோன்ற வேலைநீக்க அநீதிகளை நேரில் சந்தித்திருக்கிறேன் என்பதாலே முதலாளி - தொழிலாளி என வரும் போது நான் தொழிலாளர்களின் பக்கமே நிற்பேன் . உ . தா ., பைலட் புரோஜெக்டுகளைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் . ஒரு மேலாளரின் கீழ் ரெண்டு மூன்று புரோஜெக்டுகள் ஓடுகின்றன என்றால் அவர் தற்காலிகமாக மூன்று அணிகளை வேலைக்கு எடுப்பார் . ஆனால் அவர்களிடம் வேலை தற்காலிகம் என சொல்ல மாட்டார் . எதிர்பார்த்தது போல புரோஜெக்ட் அமைய வில்லை என்றால் வேலைக்கு எடுத்தவர்களை ஒருநாள் அழைத்து வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள் . இப்படித்தான் நடக்கும் எனத் தெரிந்திருந்தால் அவர்கள் உருப்படியான ஏதாவது வேலைக்கு சென்றிருப்பார்கள் தானே ? இதற்கும் ஜேப்படித் திருட்டுக்கும் என்ன வித்தியாசம் ? 

ராகுல் திராவிட் – ஸ்டைல் ஸ்டைல் தான்! (கிரிக்கெட்டோகிரபி 2)

164 டெஸ்ட் ஆட்டங்களில் 13, 288 ரன்கள் . 36 சதங்கள் . 63 அரை சதங்கள் . ஆட்ட சராசரி 52.31. இந்த நம்ப முடியாத சாதனை மட்டுமே திராவிடா என்று கேட்டால் இல்லை . 96 இல் துவங்கி 2012 வரை எண்ணற்ற முறை வெளிநாட்டு மண்ணில் அசுர வேக பவுலர்களிடம் இருந்தும் முரளிதரண் , வார்ன் போன்ற ஸ்பின்னர்களிடம் இருந்தும் இந்திய பேட்டிங் வரிசையின் பிற வீரர்களை பாதுகாத்திருக்கிறார் . ஒருவேளை திராவிட் இல்லாவிட்டால் ல்ஷ்மணால் கொல்கொத்தாவில் தனது சாதனை இன்னிங்ஸான 281 அடித்திருக்க முடியாது . திராவிட் எனும் சாரதி இல்லாமல் மேற்கிந்திய தீவுகளிலும் ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்கா இங்கிலாந்திலும் சச்சின் அசாத்தியமாய் பவுலர்களை துவம்சம் செய்திருக்க முடியாது .

திரைக்கதையில் கிளைமேக்ஸை எப்படி அமைக்க வேண்டும்?

ஒவ்வொரு படத்துக்கும் அதற்கான ஒரு நன்னெறி, விழுமியம், உள்ளது. சில படங்கள் இந்த விழுமியத்தை நேரடியாக தலைப்பிலே கொண்டிருக்கும். எம்.ஜி.ஆரின் “திருடாதேவின்” விழுமியம் எந்த சந்தர்பத்திலும் திருடக்கூடாது என்பது, காசை மட்டுமல்ல, தான் எடுத்து வளர்த்த குழந்தையை கூட, பாசம் காரணமாய், சொந்த பெற்றோரிடம் இருந்து பறித்து விடக்கூடாது என்பது. மிஷ்கினின் “அஞ்சாதேவும்” இப்படியான தலைப்பு அமைந்த படமே. இப்படி எந்த படத்திலும் ஒரு பாத்திரமோ / பார்வையாளனோ இறுதியில் கற்றுணர்வதற்கான ஒரு பாடம் இருக்கும். ஆனால் இது தலைப்பு, கதையமைப்பு, இறுதியில் கிளைமேக்ஸ் என சீராக வெளிப்படும் போதே அப்படம் ரசிக்கப்படும். யாரும் “திருடாதே” / “அஞ்சாதே”வை திருடக்கூடாது, துணிச்சலாக இருத்தல் வேண்டும் என போதிக்கிற படமாகப் பார்க்கவில்லை. ஏனெனில் இந்தக் கருத்தை ஒரு சிக்கலான கதைக்களத்தில் வைத்து உணர்ச்சிகரமாய் இப்படங்கள் சித்தரித்த போது நாம் ஒரு மாபெரும் விசயத்தை எதிர்கொண்ட திகைப்பை, உணர்ச்சி மேலிடலை அடைந்தோம். இப்படி ஒரு கருத்தை கதையாக்கி அதை ரசிக்க வைக்க திரைக்கதை அமைப்பில் கிளைமேக்ஸும் மிகவும் முக்கியம். அது கதையின் மையப் பிரச்சனைக்...

“புலம்பெயர் தொழிலாளர் பிரச்சனைக்கான மூன்று தீர்வுகள்” (1)

உயிர்மை இணையதளத்தில் பிரசுரமாக உள்ள “புலம்பெயர் தொழிலாளர் பிரச்சனைக்கான மூன்று தீர்வுகள்” கட்டுரையிலிருந்து: “இந்த முறைசாரா புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சனைக்கு எனக்கு மூன்று தீர்வுகள் தோன்றுகின்றன. எந்த பாஜக தலைவரும் ஏற்க விரும்பாத தீர்வுகள்: 1) புலம்பெயர் தொழிலாளர்களுக்கு என ஒவ்வொரு மாநிலத்திலும் (எந்த கட்சியையும் சாராத) ஒரு தொழிற்சங்கம் தொழிலாளிகளைக் கொண்டு தேர்தல் நடத்தி அமைப்பது. தொழிற்சங்கத்தில் இங்கு வரும் ஒவ்வொரு தொழிலாளியும் பதிவு செய்ய வேண்டும் என சட்டமியற்றுவது.

தமிழ் சினிமாவில் மெக்கபின் [MacGuffin] (2)

ஹிட்ச்காக் நான் மேலே சொல்லி உள்ளவை படத்தின் முக்கிய சம்பவங்கள் மற்றும் திருப்புமுனைகள் . இதைக் காதல் கதையென்றோ , துப்பறியும் கதையென்றோ ஒரு குற்றம் எப்படி நடக்கிறது என்பதைச் சொல்லும் படம் என்றோ நீங்கள் சொல்லலாம் . ஆனால் அது இப்படத்தின் வகைமை மட்டுமே . கதை அல்ல . இப்படம் இப்படி ஆரம்பித்து இப்படி முடிகிறது என நீங்கள் விவரிக்கலாம் . ஆனால் நிஜத்தில் காட்சிபூர்வமாக இந்த படம் நம்மை அவ்வாறு ஒரு கதையாக வந்து சேர்வதில்லை . ஒரு பெண்ணிடம் எப்படி நாயகன் ஏமாறுகிறான் , அவளை எப்படி மனதார நேசித்து மீண்டும் அவளை அடைந்து , இறுதியில் எப்படி இழக்கிறான் , எப்படி நீதியை நிலைநாட்டுகிறான் என்பது கதையின் களமாக இருக்கலாம் , ஆனால் அதுவும் இப்படம் அல்ல . இந்த படம் எதைப்பற்றியது ? வெர்ட்டிகோ எனும் பிரச்சனையை எப்படி நாயகன் கடந்து நலமாகிறான் என நீங்கள் சொன்னால் அது அபத்தமாகத் தோன்றினாலும் அதுவே ஓரளவுக்கு துல்லியமான ஒற்றை வரியாக இருக்கும் . ஆனால் யாருமே அதற்காக இப்படத்தைப் பார்க்கவில்லை என்பதால் அந்த பதிலையும் நிராகரி...