முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வேலை நீக்கங்களின் பின்னுள்ள ஆபாசம்


நான் இதுபோன்ற வேலைநீக்க அநீதிகளை நேரில் சந்தித்திருக்கிறேன் என்பதாலே முதலாளி-தொழிலாளி என வரும் போது நான் தொழிலாளர்களின் பக்கமே நிற்பேன். .தா., பைலட் புரோஜெக்டுகளைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒரு மேலாளரின் கீழ் ரெண்டு மூன்று புரோஜெக்டுகள் ஓடுகின்றன என்றால் அவர் தற்காலிகமாக மூன்று அணிகளை வேலைக்கு எடுப்பார். ஆனால் அவர்களிடம் வேலை தற்காலிகம் என சொல்ல மாட்டார். எதிர்பார்த்தது போல புரோஜெக்ட் அமைய வில்லை என்றால் வேலைக்கு எடுத்தவர்களை ஒருநாள் அழைத்து வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். இப்படித்தான் நடக்கும் எனத் தெரிந்திருந்தால் அவர்கள் உருப்படியான ஏதாவது வேலைக்கு சென்றிருப்பார்கள் தானே? இதற்கும் ஜேப்படித் திருட்டுக்கும் என்ன வித்தியாசம்


என் நண்பர் ஒருவர் ஒரு வினோதமான நோக்கத்திற்காக ஒரு பத்திரிகையில் வேலைக்கு உதவி ஆசிரியராக எடுக்கப்பட்டார். அங்கு தலைமை ஆசிரியராக இருந்த பெண்மணிக்கும் பத்திரிகை நிறுவனருக்கும் பனிப்போர். இந்த பெண்மணி நிறுவனரின் மனைவியிடம் சென்று அவருக்கும் அங்கு வேலை செய்யும் சில இளம்பெண்களுக்கும் தவறான உறவு என கதையை புனைந்து விட்டார். நிறுவனருக்கு வீட்டில் செம அடி. அந்த இளம்பெண்களைகண்காணிப்பதற்காகஅந்த ஆசிரியர் வேலையில் நீடிக்க வேண்டும் என மனைவி விதித்த நிபந்தனையை நிறுவனர் ஏற்றுக்கொண்டார். ஆனால் முதலாளியோ இந்த பெண்மணிக்கு செக் வைப்பதற்காக புதிதாக ஒரு ஆளை - என் நண்பரை - உதவி ஆசிரியராக நியமித்தார். நியமிக்கும் போதே இன்னும் ஒரே மாதத்தில் நீங்களே ஆசிரியராகி விடுவீர்கள், அந்த பெண்மணியை பதவி நீக்கம் செய்துவிடுவேன் என உத்தரவாதம் கொடுத்திருக்கிறார். இந்த இழுபறி சில மாதங்களாக நடக்க, அவரது அகங்காரம் சீண்டப்பட, முதலாளி இந்த ஆசிரியரை வேலை நீக்கம் செய்யும் முடிவை எடுக்கிறார். இதை மோப்பம் பிடித்தறிந்த அந்த பெண்மணியோ இரவோடு இரவாக முதலாளியின் வீட்டுக்கு சென்று அவரது மனைவியிடம் சென்று பேசி கடுமையாக அழுத்தம் கொடுத்து தன் பதவியைக் காப்பாற்றி, தன்னிடத்தில் வர வேண்டியவரை வேலை நீக்கம் செய்ய வைத்து விட்டார். இப்படி குடும்ப சச்சரவின் பொருட்டு ஒருவருக்கு வேலை தரப்பட்டு அவ்வேலையும் அதே காரணத்துக்காக பிடுங்கவும் பட்டது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.