முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நானே போலீஸ், நானே திருடன்


அண்மையில் ஜார்ஜ் பிளாயிட் எனும் கறுப்பர் அமெரிக்காவில் சந்தேகத்தின் போலீசாரால் சிலரால் பெயரில் சாலையில் கிடத்தி கழுத்து நெரிக்கப்பட்டும் கொல்லப்பட்ட கொடூரமான சம்பவம் பலத்த கண்டனத்தை, எதிர்ப்பை அமெரிக்காவில் ஏற்படுத்த, பெருமளவில் ஒடுக்கப்பட்ட மக்களும் சில வெள்ளையர்களும் கூட போலீஸ் ஒடுக்குமுறைக்கும் இனவாத கலாச்சாரத்துக்கும் எதிராக சாலையில் திரண்டு போராடினர். இந்த போராட்டம் ஒரு நெருப்பாற்றைப் போல அமெரிக்கா எங்கும் சுழித்தோடியது. இதை பயன்படுத்தி மக்கள் டிரம்ப் அரசின் மீதான தமது கோபத்தை முழுக்க வெளிப்படுத்தினார்கள் என நினைக்கிறேன். மக்கள் திரளின் எதிர்ப்புணர்வை சமாளிக்கத் தெரியாமல் அரசு நிர்வாகம் திகைத்து நின்று விட்டது. இப்போது காவல்துறை ஒரு புது உத்தியை கையில் எடுத்துள்ளது: நேற்று ஒரு வினோதமான சேதியைப் படித்தேன் - காவலர்களில் பலர், அதிலும் கணிசமான வெள்ளை காவலர்கள், காவல்துறை ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொள்கிறார்கள் என. இது ஏன்?


இது காவல்துறையின் ஒரு திட்டமிட்ட செயலாக இருக்கவே வாய்ப்பதிகம். இப்போது அதிகார வர்க்கம் - ஒடுக்கப்படும் வர்க்கம் எனும் இருமை உடைந்து விடுகிறது. நீங்கள் எதிரியை கண்டித்த்து போராடும் போது எதிரியே வந்து உங்களுடன் கைகோர்த்து நின்றால் போராட்டம் நீர்த்துப் போய் விடுமல்லவா? ஆனால் இந்தஎதிரிஒருபோதும் தன் அமைப்பின் சீர்கேடுகளை ஏற்கவோ கண்டிக்கவோ மாட்டான். தன் குற்றங்களை அங்கீகரிக்காமலே அது தனக்கு அப்பாலான ஒரு சமூகக்குற்றம் போல பாசாங்கு பண்ணி அவன் தன் கைகளைக் கழுவிக் கொள்வான். இதை ஏற்கனவே நமது .பி.எஸ்ஸின் தமிழக அரசு ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது நுட்பமாக நிகழ்த்தி வெற்றி பெற்றது - ஒரு பக்கம் தொடர்ந்து பல வாரங்கள் போலீசைக் கொண்டு போராட்டத்துக்கு ஆதரவும் பாதுகாப்பும் அளித்து விட்டு ஒருநாள் அதே போலீசினால் போராட்டக்காரர்களை அடித்து துரத்தினார்கள். போலீஸ் உங்கள் மத்தியில் வந்து நின்று ஆதரவு தரும் போது உங்கள் போராட்ட நோக்கம் நீர்த்து விடுகிறது. இப்போது - போலீசும் திருடனும் ஒரே ஆள். ஒருநாள் போலீசின் தோளில் கைபோட்டுக்கொண்டு மத்திய அரசுக்கு எதிராக போராடுகிறீர்கள், மாநில அரசு உங்கள் பக்கம் நிற்பதாக நம்புகிறீர்கள், அடுத்த சில தினங்களில் அதே போலிசால் அடுத்து மண்டை உடைக்கப்படும் போது நாம் இதுவரை யாரை எதிர்த்து யாருடன் நின்றோம் எனக் குழம்புகிறீர்கள். ஒரு மக்கள் எழுச்சி அரசின் ஆதர்வுடன் நடந்து ஒரே நாளில் இல்லாமல் செய்யப்படும் போது அம்மக்கள் போராட்டத்தில் நம்பிக்கை இழக்கிறார்கள்.
மோடிஜி இதை ஒரு பெரும் பிரச்சார உத்தியாக மாற்றியவர் - “நந்தாபடத்தில் சூர்யா தன் அம்மா கையால் விஷம் கலக்கப்பட்ட சோற்றை வாங்கி தின்னும் போது இப்படி கொல்லுவதும் தன் அம்மாவின் பாசமே என எண்ணி கலங்குவார். நம்முடைய ஜி எளிய மக்களை கோவணத்தை உருவி தெருவுக்குத் துரத்தினாலும், எவ்வளவுதான் சோற்றில் விஷம் கலந்தாலும் அவர்களுக்கு அது ஜியின் பரிசுத்தமான பாசமாகவே தெரியும்.
பின்நவீன எதிரி இப்படித்தான் இருப்பான் - அவனை எந்த அடையாளத்துக்குள்ளும் சிக்கி வைக்க முடியாது. விரலை சூண்டினால் சாம்பலாகும் வரத்தைத் தந்து அவ்விரலை நம்மை நோக்கியே சூண்ட வைப்பான்.  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...