இந்திய அரசியலமைப்பில் இருந்து மதசார்பின்மை, சோஷலிசம் ஆகிய வார்த்தைகளை நீக்க வேண்டும் எனும் வழக்கை கொடுத்திருக்கும் விஷ்ணு ஷங்கர் ஜெயின் என்பவர் வேறு யாருமில்லை, விஷ்வ ஹிந்து பரிஷத்தின் வழக்குரைஞரே. ஆக, இதை பாஜகவின் கோரிக்கையாகவே பார்க்கலாம். விரைவில், இப்போதுள்ள நாடடங்கை ஒரு சாக்காக பயன்படுத்தி, எந்த விவாதமும் இன்றி, பாஜக அரசு இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு என்பதை இந்தியா இந்து மத சார்பான நாடு என சட்டபூர்வமாகவே மாற்றி, அதை அடுத்து குடியுரிமை திருத்த மசோதா வழி இதை ஒரு இந்துக்களுக்கு மட்டுமான நாடு என்றே அறிவிக்கப் போகிறார்கள். ஜியின் இந்த ஆட்சி முடியும் முன் அவர் தனது மிகப்பெரிய ‘சாதனையாக’ இதையே முன்வைக்கப் போகிறார். அடுத்தடுத்த ஆண்டுகளில் தேசிய கீதம், தேசத்தந்தை என ஒவ்வொன்றையும் மாற்றப் போகிறார்கள். நம்மில் யாராவது கோமாவில் விழுந்து ஆறு வருடங்களுக்குப் பிறகு விழித்தெழுந்தால் இந்த நாட்டை அடையாளம் காணவே முடியாது. இந்நாடு அந்தளவுக்கு மாறி இருக்கும். கோமாவில் விழுந்த போது இந்தியாவாக இருந்த நாடு இப்போது “ஹிந்துஸ்தான்” ஆகியிருக்கும். கோமாவில் விழுந்த போது இந்தியனாக இருந்தவன் இப்போது “ஹிந்துவாக” இருப்பான். நீங்கள் இந்துவாக இருந்தாலும் இல்லாவிடிலும், முற்போக்காளராக இருந்தாலும், நாத்திகராக இருந்தாலும் ‘ஹிந்துவாகவே’ இருந்தாக வேண்டும்.
இப்போதைக்கு ‘இந்தியனாக’ இருக்கிறோம் என்பதில் மகிழ்ச்சி அடைவோம். ஒவ்வொரு நாளையும் முழுமையாக அனுபவிப்போம். ஏனென்றால் இது நீடிக்காது. நான் ஒருநாள் ‘இந்தியனாக’ இருந்தேன் என நம் பேரப்பிள்ளைகளிடம் சொல்லிக் கொள்ளலாம்.

கருத்துகள்