வேளாண் மசோதாவின் நன்மைகளை மக்களிடம் பரப்புரை செய்ய வேண்டும் என மோடிஜி தன் கட்சிக்காரர்களிடம் கேட்டுக் கொள்கிறார். உடனே அதை தமிழக அதிமுகவினர் நிறைவேற்றுகிறார்கள். இவ்வளவு கட்சி விசுவாசமா? அவர் உங்களை சொல்லவில்லையே அன்புள்ள அடிமைகளே!
இன்னொரு பக்கம், நமக்கு இத்தகைய சந்தேகங்கள் ஏற்படக் கூடாதெனும் நல்லெண்ணத்தில், டிவி சேனல்கள் தொடர்ந்து ஜவஹர் அலி போன்றோரை அழைத்து அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் கூட்டணியில் விரிசலா, மோதலா என்றெல்லாம் விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். நம் அடிமைகளோ நாங்கள் நீட், வேளாண் மசோதா போன்றவற்றை கடுமையாக எதிர்த்தாலும் அவற்றிலுள்ள நல்ல அம்சங்களை ஆதரிக்கிறோம், ஏனென்றால் நாங்கள் மரியாதைக்குரிய பிரதமர் அவர்களை ரொம்பவே லவ் பண்ணுகிறோம் என கொஞ்சிக் கொஞ்சிப் பேச அதை எதிர்த்தரப்பில் பாஜக சார்பு ஆட்கள் நெகிழ்வுடன், பார்த்திருக்க, ஊடகவியலாளர் கண்ணில் நீருடன் நெஞ்சில் குறும்புடன் "ஆனால் உங்களைப் பார்த்தா நிஜமா லவ் பண்றாமாதிரி தெரியலியே..." என வத்தி வைக்க ஒரே விசு படமாக இருக்கிறது.
இதையெல்லாம் பார்க்கும் போது எனக்கு "காதலில் சொதப்புவது எப்படி?" படம் தான் ஞாபகம் வருகிறது.
On a serious note, அதிமுக அமைச்சர்கள் மற்றும் முதல்வரின் ஒரே பயம் ஜி கடுப்பாக்கி அமலாக்கத் துறையினரை ரெய்டுக்கு அனுப்பி விடுவாரோ என்பதே. கடந்த சில ஆண்டுகளில், அந்தளவுக்கு மலை மலையாக கொள்ளையடித்து சேர்த்து வைத்திருக்கிறார்கள். இந்த ஆட்சி முடிந்து அடுத்து திமுக ஆட்சிக்கு வந்தாலும் தம்மைப் பாதுகாக்கவும், குதிரை பேரம் நடத்தி ஆட்சியைக் கவிழ்க்கவும் அதிமுகவுக்கு ஜியுடனான உறவு தேவைப்படும். ஆனால் ஜி இந்த லவ்வை ❤️ தேர்தலுக்குப் பின் திரும்பக் காட்டுவாரா என்பது சந்தேகம் தான்...
கருத்துகள்