முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஹைதராபாத் vs பஞ்சாப் அக்டோபர் 8, 2020 - குறிப்புகள்



முதலில் மட்டையாடிய ஹைதராபாத் 201 ஓட்டங்களை இலக்காக வைத்ததுஅடுத்தாடிய பஞ்சாப் 133க்கு ஆல்அவுட் ஆனது,


எப்படி ஹைதராபாத் அவ்வளவு பெரிய ஸ்கோர் அடித்தார்கள்?


  1. 160 துவக்க கூட்டணி
  2. பஞ்சாபின் மிதவேக வீச்சாளர்கள் மற்றும் சுழலர்கள் மோசமான லைனை வீசியதுஒருவித பயத்துடன்குழப்பத்துடன் பந்து வீசியது.
  3. பேர்ஸ்டோவின் அதிரடியான அணுகுமுறைதனக்கான இடங்களை தேர்ந்தெடுத்து அவர் அடித்ததுவார்னர் தன் டைமிங் இன்மையை புரிந்து கொண்டு பொறுமையாக பேர்ஸ்டோவுக்கு துணைசெய்தது.

பஞ்சாப் எப்படி மீண்டார்கள்?


ஹைதராபாத் முதல் விக்கெட் வீழ்ந்த பின்னர் பஞ்சாப் வீச்சாளர்கள் தன்னம்பிக்கை பெற்று சுதாரித்தார்கள்நேராக சரியான நீளத்தில் வீசினார்கள்குறிப்பாகரவி பிஷ்னாயின் இறுதி இரு ஓவர்கள் மற்றும் அர்ஷ்தீப்சிங்கின் யார்க்கர்கள்இருவரும் இணைந்து ஓட்டங்களை வறள வைத்து விக்கெட்டுகளை எடுத்து ஓரளவுக்குகாப்பாற்றினார்கள்முஜீபும் சுமாராக வீசினார்கார்ட்டரெல் மற்றும் ஷாமி அணியை கைவிட்டார்கள்ஒருவேளை அவர்களும் சுதாரித்திருந்தால் 170-180க்கு கட்டுப்படுத்தியிருக்கலாம்.


பஞ்சாப்பின் மட்டையாட்டம் எப்படி இருந்தது?


மயங்க் அகர்வால் நன்றாக ஆடினாலும் ராகுலின் பதற்றம் இன்று அவர்களை பின்னுக்கு தள்ளியது - முதலில்மயங்கை ரன் அவுட் ஆக்கினார்அடுத்து பவர் ஹிட்டராக சிம்ரனை முதல் ஆட்டத்தில் இறக்கி விட்டதுஎடுபடவில்லைஆனால் அவரது presence, ஆக்ரோஷமான இருப்புதன்னம்பிக்கைதுடிப்பு எனக்குபிடித்திருக்கிறது


சிம்ரனுக்குப் பிறகு வந்த பூரன் உடனே பவுண்டரிகள்சிக்ஸர்கள் என விளாசி பிரமாதமாக ஆடினார்ஆனால்ராகுல் இதையெல்லாம் உணராததைப் போல மற்றொரு உலகத்தில் இருந்தார்தொடர்ந்து இரு சிக்ஸர்களைபூரம் அடித்த ஓவரிலேயே தேவையில்லாமல் தூக்கி அடித்து வெளியேறினார்மாறாக ஒற்றைஇரட்டைஓட்டங்களில் கவனம் செலுத்தி அவர் பூரனுடனான கூட்டணியை வலுப்படுத்தி இருந்தால் பஞ்சாப் இன்றுவென்றிருக்கும்அடுத்தடுத்து வந்த மேக்ஸ்வெல்மந்தீப்முஜீப் போன்றவர்களும் இந்த அடிப்படையானநடைமுறை புரிதல் இல்லாமலே ஆடி பூரனின் வேகத்துக்கு தடையிட்டனர்இதையும் ஒரு “ராகுல் விளைவு” எனப் பார்க்கலாமா?


மேக்ஸ்வெல்லை தொடர்ந்து மத்திய வரிசையில் ஆட வைப்பது பஞ்சாபுக்கு உதவவில்லை - மிக மோசமானஆட்டநிலையில் அவர் இருக்கிறார்வரும் போட்டிகளில் அவர் இறுதி மூன்று ஓவர்களை மட்டுமே ஆடவேண்டும்அல்லது அவரிடத்தில்  கெயிலை களமிறக்கி ராகுலை 5வது எண்ணில் ஆடச் செய்ய வேண்டும்


ஹைதராபாத்தின் பந்து வீச்சு எப்படி இருந்தது?


ராகுலுக்கு அவர்கள் மிக நன்றாக வீசினார்கள் - நேராக உள்வரும் பந்துகளை சரியான நீளத்தில் வீசினார்கள்


over the wicketஇல் வந்து அவர்களது இடதுகை வேகவீச்சாளர்கள் வீசியதுஅதுவும் பெரிதாய் அடிக்கஇடம்கொடுக்காமல் நேராக வீசியது உதவியதுவரும் ஆட்டங்களில் இந்த யுக்தியை பிற வீச்சாளர்களும் ரூம்கொடுத்து அடித்தாடுகிற மட்டையாளர்களுக்கு பயன்படுத்தலாம்


ஹைதராபாத் வெல்ல வேறெது உதவியது?


களத்தடுப்பு - இரண்டு ரன் அவுட்டுகள்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...