முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெண்களும் “பெண்களும்”




பிக்பாஸ் நிகழ்ச்சி செய்கிற ஒரே நல்ல காரியம் பெண்கள் எல்லாரும் சிறப்பாக சமைக்கிற குடும்பப் பாங்கினிகள் எனும் பிம்பத்தை உடைப்பதுதான் - அனிதா தனக்கு காபி, டீ போட வராது எனச் சொல்வதைப் பார்க்க ‘மகிழ்ச்சியாக’ இருந்தது. குக் வித் கோமாளியில் பங்கேற்ற ரம்யா கூட பிக்பாஸ் வந்த பின் ‘சமையலா? அதைக் கத்துக்க நான் இங்க வரல’ எனச் சொல்லி அம்பலப்பட்டுப் போனார். ஏனென்றால் இதே விஜய் டிவியின் தொடர்களில் குடும்பப் பாங்கினிகள் குறித்த சித்திரம் முழுக்க வேறாக இருக்கும்.

 நவீனப் பெண்களில் பத்தில் ஏழு பேருக்கு சமைக்கத் தெரியாது என்பது என் ஊகம். (பிக்பாஸ் பெண் பங்கேற்பாளர்கள் இதை பிரதிநுத்துவம் செய்கிறார்கள்.) சின்ன வயதில் அம்மா சமையல். அதன் பிறகு கல்லூரியில் விடுதி மெஸ், வெளியே தட்டுக்கடை இல்லையென்றால் ஸ்விக்கி, கூடவே இருக்கிறது மேகி நூடுல்ஸ். வேலைக்குப் போக ஆரம்பித்ததும் இப்படி வெளியே வாங்கி சாப்பிட ஒரு நியாயம் கிடைத்து விடும். போகப் போக அதுவே வசதியாக ஜாலியாக இருக்க பழகி விடுவார்கள். திருமணத்துக்குப் பிறகு ஒன்று தட்டுத்தடுமாறி கற்றுக் கொள்வார்கள், அவர்களில் சிலருக்கு இயல்பாகவே சமையலில் ஒரு சிலாக்கியம், கைப்புண்ணியம் இருக்கும். அவர்கள் அதை ரசிக்கத் தொடங்கி நிபுணர்களே ஆகி விடுவார்கள். குறைந்தது சராசரியாகவாவது சமைப்பார்கள். இன்னும் சிலர் இதெல்லாம் சரிப்படாது என கணவனும் மனைவியும் மூன்று வேளையும் வெளியே சாப்பிடுகிற அல்லது துரித உணவுகளை மைக்ரோ வேவில் வைத்து தயார் பண்ணி சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வார்கள். நான் முன்பு வேலை பார்த்த இடங்களில் திருமணமான பெண்கள் கொண்டு வரும் டப்பாவை வாங்கி சுவைத்திருக்கிறேன். பத்தில் ஒருவருக்கு மட்டுமே குறைந்தபட்ச சுவையுடன் சமைக்கக் தெரிந்திருக்கும். இவர்கள் சமைப்பதை கண்ணை மூடித் தின்பவர்கள் வாழ்நாள் சாதனையாளர்கள் என நினைப்பேன். அவர்களுக்கும் சமையலில் அக்கறை இருக்காது. வற்புறுத்தலால் ஏதோ பல் தேய்ப்பது போல சமையலில் ஈடுபடுவார்கள். 

இன்னொரு பக்கம் இன்றைய இளையதலைமுறையில் ஆண்கள் சமையலில் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்கிறார்கள். நான்கைந்து மாணவர்கள் சேர்ந்து வாடகை வீடு எடுத்தாலே முதல் வேலையாக கேஸ் அடுத்து வாங்கி ஒழுங்காக சமைத்து, ரொட்டேஷனில் ஒருவர் காய் நறுக்குவது, ஒருவர் பாத்திரம் கழுவுவது எனப் பார்த்துக் கொள்வதைக் காண்கிறேன். பாலினத்தைப் பொறுத்தமட்டில், இப்படி ஒரு தலைகீழாக்கம் சமையலில் நடப்பதை கவனிக்கிறேன். 

ஆனால் இந்த எதார்த்த வெளிப்படாதபடி ஊடகங்களில் ஒரு தேய்வழக்கு, ஒற்றைபட்டையான கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது. புகை பிடித்தல் ஒரு உதாரணம்.

மலையாள பிக்பாஸில் பெண் பங்கேற்பாளர்கள் புகைபிடிப்பதைக் காட்டினார்கள். தமிழ் பிக்பாஸைப் பொறுத்தவரையில் பெண்கள் ஸ்மோக்கிங் அறைக்குள் இருந்து பேசும் குரலை மட்டும் ‘காட்டுகிறார்கள்’. அதையும் வெளிப்படையாக காட்ட வேண்டும் எனக் கோருகிறேன் - தமிழ்ப் பண்பாட்டுக்கு ஒவ்வாத விசயங்களான பரஸ்பரம் மடியில் படுத்துக் கொள்வது, சதா உரசுவது, தடவுவதைக் காட்டலாம் என்றால் இதையும் காட்டலாம் தானே. கிராமத்து நிலைமை தெரியவில்ல , ஆனால் சிறுநகரங்களில், நகரங்களில் பெண்கள் வாய்ப்பு அமையும் போதெல்லாம் புகைக்கிறார்கள். மது அருந்துகிறார்கள். சென்னையில் இதை சற்று மறைவாக பண்ணினால், பெங்களூரில் சாலையில் நின்று கப்பு கப்பென கண் முன்னாலே பல நூறு பெண்கள் அடிக்கிறார்கள்.

 இதில் எந்த ஆச்சரியமும் இல்லை - கடவுள் அவர்களுக்கு ஆண்களுக்கான அதே மூளையைத் தான் கொடுத்திருக்கிறார். நாம் புகை, சாராயத்தை பாலியல் ஒழுக்கத்துடன் ஈடு செய்வதால் அதைப் பற்றி ஊடகங்களில் பேசுவதில்லை. ஒரு “தமிழ்ப் பெண்ணாவது” நமது சினிமாக்களில், சீரியல்களில் இதை செய்கிறார்களா? தமிழ் சமூகம் தன் பாசாங்கில் இருந்து விடுபட்டு ஒவ்வொரு பிம்பமாக உடைக்க வேண்டும். எதார்த்ததை தவிர்க்காமல் பரிசீலிக்க வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...