முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நிலைகள் குறித்த விசாரணை - 5

5.

“These give rise to those,

So these are called conditions.

As long as those do not come from these,

 why are these non-conditions?”


இவை அவற்றை தோற்றுவிக்கின்றன,

அதனால் இவை நிலைகளாய் அறியப்படுகின்றன [என்கிறார்கள்].

அவை இவற்றில் இருந்து அவை தோன்றாத வரையில்,

இவை ஏன் -நிலைகள் அல்ல?”





 இந்த ஸ்லோகம் நிச்சயம் குழப்பமானதாகத் தெரியும் படி எழுதப்பட்டிருக்கிறது. இருந்தாலும்

இது ஒரு சுவாரஸ்யமான வாதம், ஒருவித தலைகீழ் பின்னோக்கு வாதம். முதல் இரு வரிகள் நாகார்ஜுனரின் எதிரணியினர் எழுப்புவன - “ஒரு விசயத்தை அதன் நிலைகள் தோற்றுவிக்கின்றன, அதனாலே அவை நிலைகள்என அவர்கள் சொல்லுகிறார்கள். ஆமாம், அதுக்கென்ன என நீங்கள் நினைக்கலாம். ஆனால் உற்று நோக்கினாலே இதிலுள்ள விஷமத்தனம் புரியும் - ஒன்று மற்றொன்றின் நிலையாக இருப்பதானாலே அது தன்னளவில் சாராம்சமானநிலைஆவதில்லை. ஹைடெக்கர் இருத்தல் (being) பற்றி சொல்லும் போது சுத்தியலை உதாரணமாகக் காட்டுகிறார். சுத்தியலால் ஒருவன் ஆணியை சுவற்றில் அடிக்கிறான். அந்த தருணத்தில் சுத்தியல், அதைக் கைக்கொண்டிருக்கும் அவன், அவனது கரம், அடிக்கப்படும் ஆணி, அது இறங்கும் சுவர் எல்லாம் ஒரே புள்ளியில் இணைகின்றன. இவற்றில் ஏதோ ஒன்று தனித்து பார்க்கப்பட்டால் சுத்தியலால் அறைவதே சாத்தியமில்லை. சுத்தியல் அப்போது அவனது கரத்தின் நீட்சியாக, ஆணி அந்த சுத்தியலின் மற்றொரு பாகமாக, அது துளைக்கும் சுவரின் அதன் நீட்சியாக மாறுகிறது. இதனாலே ஒருவன் சுத்தியலால் ஒரு பெண்ணின் தலையில் அடித்துக் கொன்றால் செய்தியில் he hammered her to death என வருகிறது என ஹைடெக்கர் கூறுகிறார். இங்கு சுத்தியல் அறையப்படுவதற்கு அதை ஓங்கி செலுத்துகிற அசைவிலிருந்து, அசைய வேண்டும் என்கிற நோக்கத்திலிருந்து, தான் சுத்தியலால் அறைகிறோம் எனும் எண்ணம், அதனால் தான் சுத்தியலை அறைகிறவர் ஆகிறோம் எனும் பார்வை அவனுக்குள் தோன்றுகிறது, அவன் பார்க்கிறவனாகவும் பார்க்கப்படுகிறவனாகவும் ஆகிறான், இப்படி பல நிலைகள் அவனை சுத்தியலைக் கொண்டு அறையச் செய்கின்றன. ஆனால் அதனாலே சுத்தியலை எடுத்து அறைகிற அந்த (செயலூக்க நிலை) அசைவானது அந்த செயலை தானாக நிகழ்த்துவதில்லை. அவனுக்கு உடம்பில் அதற்கான வலு இருக்க வேண்டும், அது இருந்தாலும் அந்த சூழல் அதற்கு சாதகமாக இருக்க வேண்டும், அங்கு சுவர் இருக்க வேண்டும், சுவர் ஆணியால் அறையப்பட தோதாக இருக்க வேண்டும் ... இப்படி பல நிலைகள் இந்த நிலைகளுக்கு பின்னுன்று செலுத்துவதைப் பார்க்கிறோம்

அடுத்து இங்கு காலம் குறித்த ஒரு சிக்கல் வருவதையும் நாகார்ஜுனர் உணர்த்துகிறார். சுத்தியலால் அறைய வேண்டும் எனும் நோக்கம் அது ஏற்படும் முன்பு என்னவாக இருக்கிறது? சுத்தியலை வீசும் அசைவாகிய அந்த செயலூக்க நிலை அதற்கு முன்பு என்னவாக இருக்கிறது? இப்போது அது நிலை என்றால் அப்போது அது -நிலையா என நாகார்ஜுனர் கிண்டலாக வினவுகிறார். ஏனென்றால் ஒன்றைக்கொண்டு அதை சாராம்சமான நிலையாக நாம் கட்டமைக்கும் போது அது காலத்தில் முன்னோ பின்னோ மற்றொன்றாக இருக்கையில் அது -நிலையாகவே இருந்தாக வேண்டும். ஆனால் ஒன்று சாராம்சமற்று ஒன்றை தோற்றுவிக்கும் போது மட்டுமே நிலையாக இருக்கிறது என நாம் சொல்லும் போது இச்சிக்கலோ அபத்தமோ ஏற்படுவதில்லை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...