Skip to main content

Posts

Showing posts from April, 2021

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

கே.வி ஆனந்த் - மிகை வண்ணங்களின் காதலன்

கே . வி ஆனந்த் சற்று மிகைப்படுத்தப்பட்ட ஆனால் அழகான துலக்கமான சித்திரங்களை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார் - அவருடைய ஒளிப்பதிவில் காட்சிகள் கூட துண்டுத் துண்டு சித்திரங்களாகவே என் மனத்தில் பதிந்துள்ளன . அவருடைய இயக்கத்தில் வந்த படங்களில் கூட அப்படித்தான் . அதுவும் பாடல்களில் வரும் மொண்டாஜ் பாணி அவ்வளவு அழகாக இருக்கும் .   பி . ஸி ஶ்ரீரம் மிக மென்மையான ஒளியில் சன்னமான வண்னங்களுடன் , ஒளி - நிழல் பின்னல்களுடன் காட்சிகளை உருவாக்க விரும்பினார் என்றால் , அந்த காட்சிகள் கதையமைப்புடன் பொருந்தி படத்தின் செய்தியை உள்மனத்துக்கு உணர்த்த வேண்டும் என நினைத்தார் என்றால் , அவருடைய சீடரான கே . வி ஆனந்த் ஒரு மீ - எதார்த்த கனவுலக பாணி ஒளியமைப்பை கொண்டு வந்தார் . 96 இல் என் பதின்வயதில் “ காதல் தேசம் ” வந்த போது “ எப்படி இப்படியெல்லாம் எடுக்கிறார்கள் ?” என பார்த்து பார்த்து ஏங்கியது நினைவுள்ளது . “ என்னைக் காணவில்லையே நேற்றோடு ” பாடலில் அந்த நீல நீர் அப்படி கனவில் காண்பது போல - எட்டித் தொடலாம் - என்பது போ...

“ரஜினிகாந்த்” நூல் குறித்து தமிழ் பிரபா

 நண்பர்களுடனான மதுக்களிப்பில் நான் அதிகம் பேசுபவைகளுள் ஒன்று “ரஜினியின் நடிப்பில் பொதிந்திருக்கும் கலைத்தன்மை”.    மேற்கூரியது போன்ற கட்டுக்கோப்பான சொற்களில் பேச மாட்டேன் எனினும் வாய்க்குழைவில் இந்த சாரமே மிகுந்திருக்கும். மதுவின் இனிய மயக்கத்தில் நினைவுகளை, ஏக்கங்களை, மனிதர்களை, நாவல்களை, திரைப்படங்களை, ஆளுமைகளைக் குறித்துப் புலம்புவது என் களியாட்டத்தின் ஒருபகுதி. இதில் ரஜினி மெஜாரிட்டி. இனி அடுத்த முறை ரஜினி பற்றி உரையாட வருமாயின் ஆர், அபிலாஷ் எழுதிய “ரஜினிகாந்த்” என்னும் குறுநூலையும் துணைக்கு வைத்துக் கொள்வது உசிதம் என்று எண்ணுகிறேன். அபிலாஷ் எழுதி சமீபத்தில் வெளிவந்த ரஜினி பற்றிய கட்டுரைகளின் தொகுப்பான இதில், ரஜினியின் கதாப்பாத்திரம் பரவலாக கொண்டாடப்படதற்கு காரணம் அதிலுள்ள தொன்மம், அதை முன்வைத்து தத்துவப் பார்வை, ரஜினியின் உடல்மொழி அரசியல், ஆகியவை குறித்து எழுதியிருக்கிறார். உதாரணத்திற்கு சில கட்டுரைகளின் தலைப்புகளைத் தருகிறேன். ரஜினியும் கமலும் ரஜினி எனும் தொன்மமும் இந்தியக் குடும்பமும் அதிகாரத்தை எதிர்கொள்ளும் இருமுறைகள்; ரஜினியும் பூக்கோவும்.  ரஜினியின் சிகரெட...

என்ன செய்ய வேண்டும்?

இந்த இரண்டாம் அலையில் நாடே போதுமான மருத்துவ வசதிகள், ஆக்ஸிஜன் இல்லாமல் மக்கள் சாகும் போது பிறர் கேளிக்கையில் ஈடுபட்டு, இயல்பு வாழ்க்கையின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா இல்லை துக்கத்தில் மூழ்க வேண்டுமா எனக் கேட்கிறார்கள். அடுத்தவர் துயரப்படும் போது நாமும் கண்ணீர் சிந்த வேண்டுமா இல்லையா எந்த அடிப்படைக் கேள்வி.  பிறருடைய துன்பம், இழப்பு ஒரு தவிர்க்க முடியாத விபத்தென்றால் கண்ணீர் விடலாம். ஆனால் இப்போது நிகழ்பவை நிர்வாகப் போதாமையால், தொலைநோக்குத் திட்டம் இல்லாமையால் நிகழ்த்தப்படும் மறைமுகமான படுகொலைகள், மக்களுக்கு அவர்களுடைய பிரதிநிதிகள் செய்யும் அளப்பரிய துரோகம். இப்போது கேட்கிறேன்: ஒருவருடைய திட்டமிட்ட அக்கறையின்மையால், தடித்தனத்தால், திமிரால் மக்கள் செத்தால் நியாயமாக என்ன உணர்ச்சி வர வேண்டும்?  என் பதில்: மக்கள் கோபப்பட்டு அரசியல்பட வேண்டும்! ஒன்று திரள வேண்டும். அடித்துப் பிடித்து போராட வேண்டும் என சொல்லவில்லை. கோபத்தை மொழியில் மாற்றி உருவேற்றி வைத்திருக்கலாம், கைமாறப் படும் நெருப்பைப் போல அதை உயிருடன் பாதுகாக்கலாம். கோபம் ஒரு மோசமான உணர்ச்சி அல்ல...

நவதாராள பொருளாதாரம் எப்படி நவீன சாதியமைப்பை உருவாக்குகிறது?

பாரத் பயோடெக்கும், செரம் இன்ஸ்டியூட்டும் வேறுபாட்டு விலைமுறை (differential pricing) மூலம் தடுப்பு மருந்தின் விலையை 150 ரூபாயில் இருந்து 600-1200 என சூழலுக்கு ஏற்றபடி மாற்றி மக்களை ஜேப்படிக்கிறார்கள் என்பதை ஜெயரஞ்சன் ஒரு காணொலியில் விமர்சித்திருந்தார். அதாவது அரசு சந்தையை இரு நிறுவனங்கள் வசம் ஒப்படைத்து விட்டு, அவர்களை சந்தையின் தேவைக்கு ஏற்பட் விலை ஏற்ற அனுமதிப்பதன் விளைவு மாநில அரசுகள் ஒரு பக்கம் பணமின்றி கடனாளி ஆவது மட்டுமல்ல, மக்களுக்கு இடையில் ஒரு செயற்கையான படிநிலை, மதிப்பேற்றம், மதிப்பிறக்கம் நிகழ்வதும் தான் என அவர் சொல்லுகிறார். உதாரணமாக ஒரே தோசையை ஒருவர் தள்ளுவண்டியில் சாப்பிடுவதற்கும் ஒரு மத்திய தர ஓட்டலில் அமர்ந்தும் சாப்பிடுவதற்கும் அதையே ஐந்து நட்சத்திர ஓட்டலில் இருந்து சாப்பிடுவதன் வித்தியாசம் செலவு செய்யும் திறன், தயாரிப்பு செலவு, பொருளின் மதிப்பு மட்டுமல்ல, ஒருவருடைய சமூக மதிப்பு, அந்தஸ்து, சுயமதிப்பும் தான் - நீங்கள் வாங்கி துய்க்கும் பொருளைப் பொறுத்து ஒரு நுகர்வோனாக என் மதிப்பு மாறுபட்டால் பரவாயில்லை என்று விட்டு விடலாம். ஆனால் அத்தியாவசியப் பொருட்கள் இப்படியான வேறுபாட...

நினைக்க மனம் பதறுகிறது!

இப்போது நிலவி வரும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஒரு வினோதமான சூழலை உண்டு பண்ணியிருக்கிறது - மக்கள் தெருவிலும் ஆஸ்பத்திரி வராந்தாக்களிலும் படுத்தபடி கெஞ்சுவது, ஆக்ஸிஜன் தரப்படாமல் கொல்லப்பட்டவர்களின் குழந்தைகளை சமூகத்தை சாபமிடுவதை, அழுது புலம்புகிற காணொலிகளை, காட்சிகளை தினம் தினம் பார்க்கிறோம் - நல்லவேளை மருத்துவர்களாக இருந்து இதையெல்லாம் நேரில் கண்டு பதில் சொல்லுகிற நிலை ஏற்படவில்லை; எனக்கெல்லாம் பைத்தியம் பிடித்திருக்கும்.  இந்தியா முழுமைக்கும் தேவையான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் திறன் இந்தியாவுக்கு உண்டு எனும் சேதியை படித்தேன். எனில் ஏன் இந்த தட்டுப்பாடு? கடந்த ஓராண்டாக நாம் திட்டமிடாமல் அக்கறையில்லாமல் இருந்து விட்டோம். கடந்த சில மாதங்களாகவே நமது பிரதமரும், உள்துறை அமைச்சரும் முழுமூச்சாக மாநில தேர்தல் பிரச்சாரங்களில் - குறிப்பாக மேற்கு வங்கத்தை கைப்பற்றும் ‘போரில்’ - ஈடுபட்டிருந்தனர். இது போக, இரண்டாம் அலை பற்றி தெரிந்திருந்தும், ராகுல் காந்தி போன்றோர் முன்பே வலியுறுத்தி இருந்தும் அவர்கள் பொருட்படுத்தவில்லை. முன்கூட்டியே திட்டமிட்டிருந்தால் நம்மால் போதுமான அளவுக்கு ஆக்ஸிஜனை தயாரித்து வை...

தேவ்தத் படிக்கல்: எதிர்கால இந்திய துவக்க வீரர்?

இந்த தேவ்தத் படிக்கல் ஒரு தனித்துவமான கலவை - அதிரடியாக ஆடினாலும் கண்டமேனிக்கு சுற்றுவதாகத் தோன்றாது. இதனாலே அவர் சரளமாக / வேகமாக ஆடும் போது ‘இதோ இப்போ அவுட் ஆகிடுவான் பாரேன்’ எனத் தோன்றாது. ஐ.பி.எல்லில் வேறு பலர் அடித்தாடும் போது ஏதோ கடையில் இருந்து முட்டையை காகிதத்தில் பொதிந்து வீட்டுக்கு எடுத்து வரும் திகில் உணர்வு இருக்கும். ஆனால் படிக்கல் அதிரடியாக ஆடும் போது ‘இவன் அவுட் ஆவான்னு தோணலியே’ என்றே எனக்குத் தோன்றும். அவருக்கு கச்சிதமான தடுப்பாட்டமோ பழுதற்ற காலாட்டமோ இல்லை. அவர் கால்களை போதுமானபடி அசைப்பதே இல்லை. ஆனால் ஒரு தெளிவான திட்டமிடல், தெளிவு, temperament என சொல்வார்களே அந்த நிதானம் உள்ளது.  கவனித்துப் பார்த்தால் ஒன்று தெரியும்: அவர் இரண்டு, மூன்று ஷாட்களைத் தான் பவுண்டரி, சிக்ஸர்களுக்காக அடிக்கிறார். வேறு ஷாட்கள் இல்லாமல் அல்ல, தன் அதிரடி ஆட்டத்தை ஒரு கட்டுக்குள் வைப்பதற்காக. இது கோலியின் ஸ்டைல். அவர் எப்போது எப்படி ஆடுவார் என நாம் சுலபமாக கணிக்க முடியும். இந்த கணிக்கத்தக்க ஆட்டமே கோலி தொடர்ச்சியாக ரன்கள் அடிக்கக் காரணம். படிக்கல்லும் அப்படித்தான்.  எனக்கு படிக்கல்லிடம் ...

ஜியும் கொரோனாவும் - சர்வாதிகாரத் தந்தை / பாசமிகு தந்தை

நடுவண் அரசு கொரோனா தடுப்பூசிகளை தாராளமயப்படுத்தி சந்தைக்கு திறந்து விடுவது, விலையை இஷ்டத்துக்கு நிர்ணயிக்கலாம் என அனுமதி அளிப்பது, (தாம் ஆளும் மாநிலங்களுக்கு இலவசமாக அளிக்க) 50% தடுப்பூசிகளை 150 ரூபாய்க்குள் வாங்கும் எனவும், மிச்சத்தை அதிக விலையில் மாநிலங்கள் வாங்கி தம் மக்களுக்கு இலவசமாக அளிக்க வேண்டும் எனக் கோருவதும் என்னை ஆச்சரியப்படுத்தவில்லை. ஏனென்றால் இந்த அரசின் கடந்த சில ஆண்டுகளின் செயல்பாடுகள் இவ்வாறே இருந்துள்ளன. இந்த அரசு தொடர்ந்து தான் ஆளும் மாநில மக்களை உயர்வாகவும், தனக்கு வாக்களிக்காத மாநில மக்களை இரண்டாம் தர குடிமக்களாகவுமே நடத்தி வருகிறது. இதை மறைக்க எந்த முயற்சியும் அது எடுப்பதில்லை - சொல்லப்போனால் பாஜக ஆளாத மாநில மக்கள் தாம் ஜியின் அன்பைப் பெறாதவர்கள், அதனாலே கைவிடப்படுகிறோம் எனும் அச்சவுணர்வுக்கு, தவிப்புக்கு ஆளாக வேண்டும் என்றே நடுவண் அரசு விரும்புகிறது. இது ஒரு கோபக்கார தந்தை தன்னை மதித்து பணியாத மகனிடம் பேசவோ அவனுக்கு பணம் அளிக்காமலோ தனிமைப்படுத்துவது, அதற்கும் பணியாத போது பாசத்தை பிற பிள்ளைகளிடம் காட்டி ஒருவித பொறாமையை உண்டு பண்ணப் பார்ப்பது, இது எதுவுமே பலனளிக்க...

இந்து மதம்-தலித்தியம்-தமிழ் தேசியம்: மதசார்பின்மை மீதான கூட்டுத் தாக்குதல்

இந்த விவாதத்தை ஒரு கேள்வியுடன் ஆரம்பிப்போம் : தமிழகத்தில் பாஜகவின் போர் ஏன் சிறுபான்மையினரை குறி வைக்காமல் திராவிடம் , மதசார்பின்மைக்கு மட்டும் எதிராக உள்ளது ?  யோசித்து பாருங்கள் - பாஜகவினர் நியாயமாக இஸ்லாமியருக்கு எதிராகத் தானே பேச வேண்டும் . அதுதானே அவர்களுடைய இந்துத்துவ இலக்கு . ஆனால் கடந்த ஆறேழு வருடங்களில் கடுமையான தாக்குதலை பாஜகவிடம் இருந்து எதிர்கொண்ட ஒரு சிந்தனை மரபு இஸ்லாம் , கிறித்துவம் போன்ற சிறுபன்மை மதங்கள் அல்ல , மதசார்பின்மையே என்பது ஒரு வியப்பான சேதி . அண்மையில் இது இன்னும் தீவிரமாகி உள்ளது . இதை செய்பவர்கள் இந்துத்துவர்கள் என்பதையும் , இதை ஏற்கிறவர்கள் சில சிறுபான்மை அமைப்புகள் என்பதையும் கவனிக்க வேண்டும் .   இந்துத்துவர்கள் ( ஆடு நனையுதே என ...) சிறுபான்மையினரிடம் “ உங்களுக்கு இந்த மதசார்பின்மை பேசும் கட்சிகள் பிரதிநுத்துவம் தருவதில்லை ” என கண்ணீர் மல்க சொல்கிறார்கள் . “ நாங்கள் வெளிப்படையாக உங்களை ஆதரிக்கிறோம் , பிரதிநுத்துவம் தருகிறோம் ” எனச் சொல்லி முத்தலாக் போன்ற சட்டங்க...