முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சின்மயி வைரமுத்துவை சார்ந்திருந்தாரா? பாடல் விபரங்கள் சொல்வதென்ன?


2018இல் வைரமுத்துவிடன் மோதிய பிறகு சின்மயி ரஹ்மான், யுவன் என அனேகமாக எல்லா இசை இயக்குநர்களிடமும் பாடியிருக்கிறார். மற்ற பெண் பாடகிகளை விட அதிக வாய்ப்பை 2018இல் இருந்தே பெற்றிருக்கிறார். அடுத்து, மீ டூ விவகாரம் சர்ச்சையான 2018க்கு முன்புள்ள சில வருடங்களாக வைரமுத்து குறைந்த அளவு பாடல்களே, அதுவும் சின்மயி பாடின பாடல்கள், எழுதி இருந்தார். 2017இல் “நல்லை அல்லை” பிரசித்தமான ஒரு பாடல். ஆனால் அதற்கு முன்பு பார்த்தால் 2016இல் தர்மதுரை படத்தில் ஒரு பாடல். இப்படி அவ்வப்போது சில பாடல்களே. ஆனால் இவை பிரசித்தமான பாடல்களாக இருந்தன.

 இன்னொரு விசித்திரமான செய்தி: 2002இல் சின்மயி அறிமுகமான பின்னர் வைரமுத்து அவரது காட்பாதராக இருந்தார் என்பது போன்ற ஒரு சித்திரம் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு ஒரு காரணம் தேசிய விருது பெற்ற பாடல்கள் உட்பட சில பிரசித்தமான பாடல்களை அவரது பாடலுக்கு இவர் பாடியிருக்கிறார் என்பது. ஆனால் எண்ணிக்கையை பார்த்தோமானால் அறிமுகமான முதலிரு ஆண்டுகளில் ஒரு சில பாடல்களை அவர் வைரமுத்துவின் வரிகளுக்கு எழுதியிருந்தாலும் 2005க்குப் பிறகு பரவலாக வேறு பாடலாசிரியர்களின் வரிகளுக்கே அவர் அதிகமாய் பாடியிருக்கிறார். குறிப்பாக 2016க்குப் பிறகு அவர் வைரமுத்துவிற்கு பாடுவது வெகுவாக குறைகிறது. வைரமுத்துவும் திரையிசையில் தன் செல்வாக்கை 2000க்கு பின்பு இழந்து வருகிறார். இன்னும் சொல்லப் போனால், 2002-03க்குப் பிறகு சின்மயி வருடத்திற்கு இரண்டு மூன்று என சொற்பமான பாடல்களையே ஒப்பீட்டளவில் வைரமுத்துவுக்குப் பாடியிருக்கிறார் (மொத்தமாக 22). வெறும் 9.6%. பொதுவாக இயக்குநர்கள், இசையமைப்பாளர்களே இவ்விசயத்தில் முடிவெடுப்பவர்களாக இருக்கிறார்கள் என நினைக்கிறேன். உ.தா., மி டூவிற்குப் பிறகு சின்மயி ரஹ்மான் இசையில் பாடுகிறார், ஆனால் ரஹ்மான் இந்த கட்டத்தில் வைரமுத்துவை தள்ளி வைக்கிறார்.

 எனில் சின்மயி தன் திரைவாய்ப்புகள் பறிபோகக் கூடாது என்பதற்காக வைரமுத்துவை அதுவரை எதிர்க்காமல் இருந்தார் என்பது பொய் ஆகி விடுகிறது. 

தகவல் அடிப்படையில் இதுவே நிஜம். ஆனால் சினிமா துறைக்குள் வேறு எதார்த்தம் உள்ளதா, தான் எழுதாத பாடல்களிலும் யார் பாட வேண்டும் எனத் தீர்மானிக்கும் அதிகாரத்தை வைரமுத்து பெற்றிருந்தாரா என சினிமாக்காரர்கள் தாம் சொல்ல வேண்டும். அது உண்மையெனில், வைரமுத்து ஏன் மற்ற புது பாடலாசிரியர்களை அப்பாடல்களை எழுத அனுமதிக்க வேண்டும்?


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...