முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் என்ன நடந்தது?

 




டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் ஆறாவது நாளன்று வேகமாய் இந்திய விக்கெட்டுகள் சரிந்தன. குறைவான ரன்களை இலக்காகக் கொண்டு நியுசிலாந்து அடித்தாடி சுலபத்தில் போட்டியை வென்று முதல் டெஸ்ட் சேம்பியன் அணியானது. இந்திய அணிப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி “சிறந்த அணி வென்றது” என திறந்த மனத்துடன் பாராட்டினார். ஆனால் உண்மை இதையும் கடந்தது, சிக்கலானது. ஏன் இந்திய அணி தோல்வி உற்றது என்பது பற்றி அலசிய சச்சின், கவாஸ்கர், ஆகாஷ் சோப்ரா ஆகியோர் வலியுறுத்துவது இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய மட்டையாளர்கள் அவசரப்பட்டு அடித்தாட முயன்று விக்கெட்டுகளை கொடுத்ததே தோல்விக்கு மிக முக்கிய காரணம் என்பது. குறிப்பாக, ஏன் இந்திய மட்டையாளர்கள் அவ்வாறு ஆடினர் எனும் கேள்வியை அவர்கள் எழுப்பினர். அதுவும் இந்த தோல்வியை முன்வைத்து கோலி அடுத்து நடக்க இருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் புஜாராவை பலிகொடுக்க இருப்பதாக சேதி கசிந்ததும் கவாஸ்கர் இந்த இரண்டாம் இன்னிங்ஸ் குழப்படியை பிரதானப்படுத்தி ஒரு கட்டுரை எழுதினார். இரண்டாவது இன்னிங்ஸ் தடுமாற்றத்துக்குப் பின்னால் வேறொரு அரசியல் இருப்பதாக நான் நினைக்கிறேன். முன்னாள் / மூத்த கிரிக்கெட் வீரர்கள் இதை வெளிப்படையாக சொல்ல முடியாத நெருக்கடியில் மறைமுகமாக இதை சுட்டுவதாக எண்ணுகிறேன். அது என்ன? 


மழையினால் சுமார் ஒன்றரை நாட்களுக்கு மேல் வீணான நிலையில் மூன்றரை நாட்களில் வெற்றி, தோல்வி சாத்தியமாகும் என யாருமே நம்பவில்லை. குறிப்பாக நியுசிலாந்து ஆதரவாளர்கள் சோர்ந்து போயிருந்தனர் - தமது அணிக்கு வெற்றி வாய்ப்பு இருந்தும் ஆட்டம் டிரா ஆகி கோப்பையை பகிரும் நிலை ஏற்பட்டு விடுமே என அவர்கள் அங்கலாய்த்தனர். கோலி ஆரம்பத்தில் டிராவே மேல் என எண்ணியிருக்கலாம். ஆனால் நியுசிலாந்து வெல்ல வேண்டிய ஆட்டத்தை தாம் டிரா செய்து கோப்பையை பகிர்வது தன் பெருமைக்கு இழுக்கு என அவர் கருதி இருக்கலாம். இதுதான் அவரை இறுதி நாளில் அடித்தாடி ஒரு நல்ல இலக்கை தீர்மானிக்கத் தூண்டியதா? ம்ஹும்! 

அறுபது சொச்சம் ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து ஆறாவது நாளில் ஆட வந்த இந்திய அணி 180-200க்கு இலக்கை தீர்மானித்து நியுஸிலாந்தின் 10 விக்கெட்டுகளை எடுத்து ஆட்டத்தை வெல்வதற்கு போதுமான அவகாசம் இருக்கவில்லை. ஏனென்றால் ஆடுதளம் ஓரளவு மட்டையாட்டத்துக்கு நன்றாக இருந்தது. கவாஸ்கர் சொல்வதைப் போல ஆறாவது நாள் ஆடுதளத்தில் புற்கள் இல்லை. ஐந்து நாட்களாக வெயிலடி படாததால் பெரிதாக பந்து சுழலவும் இல்லை. ஆக 80-90 ஓவர்கள் பந்து விடாமல் இந்தியா வெற்றி பெற வாய்ப்பில்லை. இந்தளவுக்கு ஓவர்கள் என்றால் இலக்கும் 250-280 இருக்க வேண்டும். இதற்கு நிச்சயமாக அவகாசம் அன்று இருக்கவில்லை. ஆனாலும் இந்திய அணி ரிஸ்க் எடுத்து ஆடி விக்கெட்டுகள் தொடர்ந்து பறி கொடுத்தது. ஒரு கட்டத்தில் ஓவருக்கு 3 ரன்கள் விதம் ரிஷப்பும் ஜடேஜாவும் ஆடிக் கொண்டிருக்க, அவர்கள் ஆட்டத்தை டிராவை நோக்கிக் கொண்டு போவார்கள் அல்லது 160க்கு மேல் இலக்கை எடுத்து சென்று நியுசிலாந்துக்கு ஆட 30 ஓவருக்குள் கொடுப்பார்கள் என எதிர்பார்த்தேன். ஆனால் நடந்ததோ வேறு - ஒரு கட்டத்தில் ஜடேஜா, ரிஷப் பண்ட், அஷ்வின் மூவருமே வேகமாக ரன் அடிக்கும் முயற்சியில் வெளியேறினார்கள். அதுவும் ஜடேஜா அவுட் ஆனதும், ரிஷப் பண்ட் சிக்ஸர் அடிக்க முயன்றது அது அணி நிர்வாகத்திடம் இருந்து வந்த அறிவுறுத்தலால் தான் என்பதைக் காட்டுகிறது. அடுத்த பத்து ஓவர்களுக்குள் ஆட்டத்தை முடித்து 50-55 ஓவர்கள் பந்து வீசலாம் என்பது கோலியின் திட்டமாக இருந்திருக்கலாம். எதற்காக? ஆட்டம் டிராவில் முடிந்தாலும் தன் அணி அப்போது வெற்றியின் ஏறுமுகத்தில் இருந்ததாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவது கோலியின் நோக்கமாக இருந்திருக்கலாம். “டிரா ஆனாலும் நாங்களே வென்றோம்” என பகட்டாக பேச அது உதவியிருக்கலாம். ஆனால் விக்கெட்டுகள் எதிர்பாராத வேகத்தில் விழுந்ததும், இலக்கு 30-40 ரன்கள் குறைவாக அமைந்ததும், நியுசிலாந்து மட்டையாளர்கள் சுதந்திரமாக மட்டையாடியதும், இந்திய வீச்சாளர்கள் சொதப்பியதும் கோலியின் முகத்தில் சாணியை அப்பி விட்டது.


கிரிக்கெட்டில் வெற்றி வாய்ப்பு இருக்கும்பட்சத்தில் ரிஸ்க் எடுப்பதில் தப்பில்லை. ஆனால் வெற்றி வாய்ப்பு 10% எனும் போது எந்த அணியும் ரிஸ்க் எடுக்காமல் டிரா செய்யவே முயலும். அதுவும் ஒரு இறுதிப்போட்டியில் ரிஸ்க் எடுக்க வாய்ப்பே இல்லை. ஆனால் கோலி தான் உலகிலே தன்னிகரற்ற நிதானமில்லா முழுமூடர் அல்லவா! 


இன்னொரு விளக்கமும் உள்ளது - ஐந்தாவது நாள் மாலை நியுசிலாந்து அணி நிர்வாகம் - பயிற்சியாளர் + தலைவர் வில்லியம்சன் - கோலியிடம் ஒரு வேண்டுகோள் வைத்திருக்கலாம். இரு அணிகளும் வெற்றிக்காக முயற்சி செய்வோம். நீங்கள் எங்களுக்கு ஆட 50 ஓவர்களாவது கொடுங்கள், டிராவில் முடிந்தாலும் பரவாயில்லை என்று. கோலி இதை நம்பி ஏமாந்திருக்கலாம். வில்லியம்சன் கோலியின் நல்ல நண்பர் வேறு. ஆனால் இது நடந்திருக்க சாத்தியம் சற்று குறைவே. நடந்திருக்கவே முடியாது என சொல்ல முடியாது என்றாலும்.


இதே போலத் தான் கோலி 2019 ஒருநாள் உலகக்கோப்பை அரை இறுதியின் போது நியுசிலாந்துக்கு எதிராக 240 இலக்கை விரட்டி சென்று மட்டையாடும் போது ரிஷப் பண்ட், கார்த்திக், ஹர்த்திக் போன்றோரை தோனிக்கு முன்னால் அனுப்பினார் கோலி. 71க்கு 5 விக்கெட்டுகள் எனும் நிலையில் மட்டையாட வந்த தோனிக்கு முன் இமய மலை அளவுக்கு பெரிய இலக்கு இருந்தது. அவரும் ஜடேஜாவும் பிரமாதமாக ஆடி ஒரு 116 ரன் கூட்டணியை அமைத்து வெற்றியின் விளிம்பு வரை கொண்டு வந்தனர். இரண்டு விக்கெட்டுகளுக்கு முன்பு தோனி வந்திருந்தால் என்னவாகி இருக்கும்? சுலபத்தில் வெல்ல வேண்டிய ஆட்டத்தை கோலியின் தவறான முடிவால் இழந்தோம். அதற்கு கோலி சொன்ன நியாயம் தோனி ஒரு finisher என்பது. 240 இலக்கை துரத்துவதற்கு மூத்த வீரர்கள் 4, 5 எண்களில் ஆடுவதே அவசியம். அத்தொடரில் அதுவரை ஒரு ஆட்டம் கூட ஆடாத கார்த்திக்கையா அனுப்புவது என மூத்த வீரர்கள் கொந்தளித்தனர். ஆனால் கோலியை பொறுத்தவரையில் அவருடைய லீலைகளில் ஒன்று அது, அவ்வளவே. ஆட்டம் முடிந்ததும் அவர் தன் மனைவியுடன் டூயட் பாட, இன்ஸ்டாவில் கூத்தடிக்க கிளம்பி விடுவார்.

 உலக கிரிக்கெட் தலைவர்களிலேயே நடைமுறைக்கு விரோதமான, தர்க்கத்துக்கு உட்படாத, தன் ஈகோவை வருடி விடும் முடிவுகளை எடுக்கிற ஒரே தலைவர் கோலி தான். அது மட்டுமல்ல அவர் அணி மீது போடுகிற மிதமிஞ்சிய அழுத்தம் அரை இறுதி, இறுதிப்போட்டிகளில் வீரர்களை பிளாஷ்லைட் வெளிச்சம் பட்ட முயல்களைப் போல ஆக்கி விடுகின்றன. அவரும் தன் மட்டையாட்டத்தில் தவறாது சொதப்பி விடுவார். அடுத்து நடக்க இருக்கும் டி-20 உலகக்கோப்பையின் அரை இறுதி, இறுதிப்போட்டியில் நிச்சயமாக இதே போல இந்தியா தோற்க இருக்கிறது. அது முடிந்த பின்னரும் கோலியின் ஆதரவாளர்கள் “அவருக்கு இன்னொரு வாய்ப்பளிக்கலாம், அவருக்கு கீழ் அணி சிறப்பாக ஆடுகிறது” என முட்டுக்கொடுப்பார்கள். அப்படியே 2023 50 ஓவர் உலகக்கோப்பை அரை இறுதிப்போட்டியிலும் இந்திய அணி பேஸ்மண்ட வீக்காக, கால்கள் நடுங்குவதை மறைத்துக் கொண்டு ஜட்டியில் உச்சா போனபடி ஆடுவார்கள். அப்போதும் கோலியின் ஆதரவாளர்கள் “பரவாயில்லை, எந்த உலகக்கோப்பைகளையும் வெல்லாவிட்டாலும் அவர் தலைமையில் நன்றாகத் தான் ஆடினோம்” என இறுதியாக முட்டுக் கொடுப்பார்கள். அப்போது கோலியின் வயது 34. அவர் 38-40 வயது வரை ஆடுவார் என்பதால் 2027 உலகக்கோப்பை வரை கூட தலைவராக நீடித்து தொடர்ந்து மூன்று உலகக்கோப்பைகளில் நமக்கு தோல்வியைப் பெற்றுத் தரலாம். அல்லது தேர்வாளர்களுக்கு குறைந்தபட்ச சுரணையும், கிரிக்கெட் வாரிய தலைவருக்கு குறைந்தபட்ச அறிவும் உள்ள நிலையில் அப்போதேனும் கோலியை வீட்டுக்குப் போய் ஓய்வெடுக்கக் கேட்பார்கள். அல்லது 34 வயதிலேயே கோலி பதவி விலகி, தன் அடிமையான ராகுலை தலைவராக்குவார். ராகுலின் கீழ் இந்திய அணி இன்னும் மோசமான நிலையை எட்டும். 


இந்திய கிரிக்கெட் வாரியம், தேர்வாளர்கள் கோலியின் பிரான்ட் மதிப்பை மட்டும் கருதி அவரை தக்க வைக்காமல் விரைவில் அவரிடத்தில் ரோஹித்தை தலைவராக்கினால் நாம் அடுத்த இரு உலகக்கோப்பைகளில் ஒன்றையாவது வெல்வோம். கோலியின் மட்டையாட்டமும் மேம்படும்.  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...