பிரியாணி எளிய பொதுமக்களுக்காக பெரிய அளவில் செய்யப்பட்ட உணவாகவே சில நூற்றாண்டுகளுக்கு முன் இருந்தது என தன் கட்டுரையில் வீர் சங்க்வி சொல்வது சுவாரஸ்யமானது (லிங்க் https://www.hindustantimes.com/lifestyle/brunch/rude-food-by-vir-sanghvi-the-people-s-biryani-101627181800260.html . நான் சென்னையில் இருந்த நாட்களிலும் அது அனைவருக்குமான உணவே. 25 ரூ குஷ்கா, 40 ரூ கறி பிரியாணி, அதுவும் வாசமான சுவையான பிரியாணி, சாப்பிட்டதெல்லாம் நினைவு வருகிறது. பிரியாணி சமைக்கத் தெரிந்தவர்களால் மிகக்குறைந்த செலவில் வீட்டிலேயே சைவ / முட்டை பிரியாணியை செய்ய முடியும்.
என் அனுபவத்தில் தலைசிறந்த பிரியாணியை செய்பவர்கள் இருவர்:
1) ஹைதராபாதிகள். அதுவும் ஹைதராபாத் பாரடைஸ் ரெஸ்டரண்ட் பிரியாணி ஒரு சொர்க்கம்! அது ஒவ்வொரு கரண்டிக்கும் எழுப்பும் புதுப்புது சுவைகளும் வாசனையும் ஈடற்றது. உலகின் தலைசிறந்த உணவுக் கலைஞர்கள் ஹைதராபாதிகளே!
2) நான் இளங்கலை படிக்கும் போது ஒரு இஸ்லாமிய தோழியின் மதிய சாப்பாட்டு டப்பாவில் அவ்வப்போது வரும் வெஜ் பிரியாணி - அதை அடிக்க இன்னொரு பிரியாணியை பிறகு நான் கண்டதில்லை.
என்னைப் பொறுத்தமட்டில் உலகின் மகா மட்டமான பிரியாணியை செய்பவர்கள் கேரளத்து மக்கள். அவர்கள் பிரியாணி எனும் பெயரில் செய்யும் அட்ராசிட்டியை பெங்களூரில் பார்த்து வெறுத்து விட்டேன். பாவமாய் ஒரு தட்டு சோறு, அதனுள் புதைத்து வைத்த பொரித்த கறித்துண்டு, இதுதான் அவர்களுடைய பிரியாணி. அடேய்!
கருத்துகள்