முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காங்கிரஸ் வெள்ளையரை எதிர்க்க காரணம்





பெரியார் இதில் தரும் சித்திரம் முக்கியமானது. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் வெள்ளையர் ஆட்சியின் சில நவீன முடிவுகள், நீதி சார்ந்த கண்ணோட்டம், சிறுபான்மையினர், தலித்துகளுக்கு ஆங்கிலேய நிர்வாகிகள் குழுக்களில் பிரதிநிதித்துவம், கல்வி, வேல் வாய்ப்புகள் அளித்தது போன்றவை நமது சமாதன சாதியமைப்பை சிறிது ஆட்டி வைத்தன. இதை ஆங்கிலேயர் அன்று காங்கிரஸுக்குள் கோலோச்சிய பார்ப்பனீய தரப்பினரின் வாலை ஒட்ட நறுக்கவும் தான் செய்தனர். காந்திக்கு செக் வைக்க அம்பேத்கருக்கும் ஜின்னாவுக்கும் ஆதரவளிக்கவும் செய்தனர் இதே ஆங்கிலேயர். எது எப்படியோ, இதனால் பார்ப்பனீயத்தில் இருந்து சிறிது ஆசுவாசம் அப்போது மக்களுக்கு கிட்டியது. 


அதுவரை ஆங்கிலேயத்துக்கு ஆதரவாக நின்ற பார்ப்பனியம் இப்போது பத்தி விரித்து தாக்க தயாரானது. ஆங்கிலேய அரசின் இந்த அணுகுமுறையை விரும்பாமல் தான் இந்திய விடுதலைக்கு முன் சுமார் நாற்பதாண்டுகளாக இந்துமத சீர்திருத்தவாதிகள் எனப்படும் மென் வலதுசாரிகள், சனாதனிகள் காங்கிரசுக்குள் இருந்தபடி தேசப்பற்று எனும் பசுத்தோலை போர்த்திக் கொண்டு, வெள்ளையரை இந்துமத விரோத அந்நிய கும்பல், அதனாலே இந்நாட்டை ஆளத் தகுதியற்றவர்கள் என சித்தரித்து மக்களிடையே பிரச்சாரம் செய்து அதில் ஓரளவு வெற்றியும் கண்டனர். மக்களிடையே இதை பரவலாக்க தன்னை துறவியாக அறிவித்துக் கொண்ட ஒருவருடைய நாடகீயமான அரசியல், நடவடிக்கைகள் அவர்களுக்கு உதவின. அவரைக் கொண்டு ஆங்கிலேய அரசை பலவீனமாக்கி பின்னர் சரியான சந்தர்ப்பம் அமைந்ததும் ஆட்சியையும் கைப்பற்றினர் இவர்கள். இதையே பெரியார் இங்கு பார்ப்பனீயம் தன் பொய் புரட்டால் மக்களை ஏமாற்றி வெள்ளையரை துரத்தி அதிகாரத்தை மீண்டும் வென்ற வரலாறு என்கிறார். 


நாம் வழக்கமாய் நம்புகிற இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் இருந்து மாறுபட்ட விளக்கம் இது. விடுதலைப் போராட்ட பார்ப்பனீய அரசியலை இங்கு பெரியார் அம்பலப்படுத்துகிறார். 


பார்ப்பனீயம் அன்று வெற்றிகரமாக ஊரை அடித்து உலையில் போட ஒரு வக்கீலை பயன்படுத்தியது. அவர் இந்திய-பாக் பிரிவினை வரை பார்ப்பனியத்தின் முகமூடியாக இருந்தார். அவருக்கு அதுவரை ஏராளமான நிதியும் ஊடக வெளிச்சமும் கொடுத்து அது வளர்த்து விட்டது. அவரை அவர்கள் மகாத்மா என்று அழைத்தனர். தம்முடைய சோலி முடிந்ததும் அவரையும் அது காலி பண்ணியது.


நான் இணைத்துள்ள பெரியாரின் மேற்கோள் அவரது "நமது ஜனநாயகத்தின் வரலாறு" எனும் தலையங்கத்தில் உள்ளது. 24.3.1967 அன்று "விடுதலையில்" வெளியானது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...