இப்படியே ஏதோ ஆண்கள் மட்டுமே குடிப்பதாக ஒரு சித்திரத்தை ஏற்படுத்துவது நியாயமல்ல.
இங்கு நான் மதுக்கடைகளில் ஆண்களுக்கு சரிசமமாக பெண்களும் கடைக்கு வந்து மதுப்போத்தல்களை வாங்கிப் போவதைப் பார்க்கிறேன். சென்னையில் உள்ள பப்களில் பெண்கள் இல்லையா? பள்ளி வயது பெண் குழந்தைகளே இன்று குடிப்பதில்லையா? சரி நான் பொதுமைப்படுத்துகிறேன் என நினைப்பவர்கள் இந்த ஆய்வைப் பாருங்கள். இன்று இந்தியாவில் குடிக்கும் பெண்கள் 5 மில்லியன் என்கிறார்கள். இப்பெண்கள் சிறிது குடித்தாலே மிக மோசமாக மதுவால் பாதிப்புக்குள்ளாவர்கள், பெண்களின் உடலமைப்பு அப்படி என ஒரு ஆய்வு சொல்கிறது. இப்படி இயல்பாகவே தினமும் குடிக்கிற சமகாலப் பெண்கள் என்ன சந்திர மண்டலத்திலா வாழ்கிறார்கள்? இப்பெண்க்ள் திருமணத்திற்குப் பின்னர் கணவனுடன் குடிக்கப் போகிறார்கள். குடி போதை எனும் நோய் ஆண்களுக்கு உள்ளதைப் போல பெண்களுக்கும் உண்டு. ஆனால் அது வெளியே தெரிய வருவதில்லை. அவர்கள் குடித்துக்கொண்டு ரோட்டில் படுப்பதில்லை. ஊடகங்களும் பேசுவதில்லை என்பதே வித்தியாசம்.
ஆணே குடிப்பவன் என்பதே இவ்வார நீயா நானா நிகழ்ச்சி ஏற்படுத்தும் பொதுவான சித்திரம். இன்றைய பெண்களும் குடிக்கிறார்கள் என நேரடியாக சொன்னால் தான் என்ன? ஏன் நம் விவாத நிகழ்ச்சிகளில் பால் சமத்துவம் இல்லை?
கருத்துகள்