முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குற்றம் எனும் தத்துவச் சிக்கல்

 

எழுத்தாளன் சமூகத்துக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டியவன், அவன் குற்றம் செய்யலாமா என்பது ஒரு முக்கியமான கேள்வி. எழுத்தாளன் எப்படி இருக்க வேண்டும், அவன் யார் என்று போவதற்கு முன் வேறொரு கேள்வி முக்கியம்.

குற்றம் என்றால் என்ன? ஒரு செயல். வெற்றிலை போடுவதும் ஒரு செயல், கொலை செய்வதும் செயல். கையைப் பிடித்துழுப்பதும் ஒரு செயல். சமூக எல்லைக்கோடு ஒன்றை மீறிப் போய் நிகழ்த்தும் செயலே குற்றம். இந்த விளக்கம் மிக முக்கியம். நாம் எல்லாரும் செயல்பட்டுக் கொண்டே இருக்கிறோம், யாரோ ஒருவர் இந்த எல்லைக்கோட்டை கடந்து போய் விடுகிறார். அவர் அப்போது குற்றம் செய்கிறார் (அரிஸ்டாட்டில் இதை இப்படித்தான் விளக்குவார்.) 

ஆக குற்றம் என ஒரு சாராம்சமான செயலோ குற்றவாளி எனும் சாராம்சமான மனிதனோ இல்லை. அந்த செயல் முடிந்ததும் நீங்கள் மீண்டும் சாமான்யர்களில் ஒருவர் ஆகி விடுகிறீர்கள். அதனாலே போலீஸ்காரர்கள் குற்ற அறிக்கை என ஒன்றை விசாரணை செய்து உருவாக்கி ஒருகதையை’ / கதையாடலை உருவாக்குகிறார்கள். அவர்கள்வரலாற்றெழுத்தாளர்களாகசெயல்படுகிறார்கள். ஏனென்றால் குற்றம் நடந்து மறைந்துவிட்டது - இது ஒரு தத்துவார்த்தமான சிக்கல். இப்போது சமூகத்துக்கு அந்த குற்றத்தை தூலமாக நிறுவும் கடமை ஏற்படுகிறது. ஆனால் குற்றம் புலனுலகிலோ காலத்திலோ எங்குமே இல்லை. பாதிக்கப்பட்ட சமூகத்துக்கு குற்றத்தை பழிவாங்க வேண்டும். அதற்கு குற்றவாளியைப் பழிவாங்க வேண்டும். ஆனால் குற்றவாளிஎங்குமேஇல்லை. ஒரு மனிதன் தான் இருக்கிறான். அது சமூகத்தில் ஒரு பரவலான பதற்றத்தை உண்டு பண்ணுகிறது. குற்றம் குறித்து பல விவாதங்கள் பொதுவாக உடனுக்குடன் நடப்பது இதனாலே. குற்றவாளி கண்ணுக்கு முன் நின்றிருந்தால் அவனை ஒரு குற்றவாளியாகசமைப்பதுமுக்கியம். அதற்கு கடந்த கால நிகழ்வுகளை ஒரு ஒழுங்குவரிசையில் அடுக்கி அவற்றுக்கு சில நோக்கங்களை, காரணங்களை கற்பிக்க வேண்டும். இந்த கடமையை சமூகத்திற்காக ஆற்றுவதற்காகவே நீதிமன்றம், சட்டம், நீதிபதிகள், வக்கீல்கள் இருக்கிறார்கள்

நோய் என ஒன்று இருக்கிறது. அதை நீங்கள் மறுக்க முடியாது. அது உங்கள் உடலில் ஏற்படும் ஒரு சீர்குலைவு. அது எப்போது ஏற்பட்டது என விஞ்ஞான பூர்வமாக நிறுவ முடியும். ஒரு மருத்துவர் தன் நோயாளிகளை நம்ப வைத்து அழைக்க வேண்டியதில்லை. எந்த நோயாளியும் எனக்கு நோயில்லை என்று வாதிடுவதில்லை. ஆனால் குற்றம் என ஒன்று நிஜத்தில் இல்லை. குற்றத்தை பெரும்பாலானோர் ஏற்பதில்லை. அதனாலேகுற்றத்தைஒருவர் மீது சுமத்த வேண்டி இருக்கிறது. குற்றம் எப்போது எப்படி நடந்தது என்பதைப் பற்றி குற்றவாளிகளுக்கே நிறைய மனக்குழப்பங்கள் உண்டு. அதனாலே குற்றம் என்பது ஒரு தத்துவப் பிரச்சினை என்கிறேன். அது நடப்புலகில் உள்ள ஒரு புலனுணர்வு சார்ந்த உண்மை அல்ல. அது மனவுலகம் சார்ந்தது


தத்துவார்த்தமாக நோக்கினால் குற்றம் என்பது காலம் குறித்த ஒரு உள்முரணைக் கொண்டிருக்கிறது எனத் தெரிய வரும்: 7:59க்கு ஒருவர் ஒரு குற்றத்தைப் பண்ணுகிறார் என வைப்போம். அவருக்குஎன பெயரிடுவோம். கவனியுங்கள் அவர் 7:59இல் இரு செயலைப் புரிந்த’. 8 மணிக்கும் அவர்தான். ஆனால் அவர் செய்ததாக சொன்ன அந்த செயல் அப்போது இல்லை, அவர் மட்டுமே இருக்கிறார். செயல் காணாமல் போய்விட்டது. அல்லது காலம் மறைந்துவிட்டது. மனிதனுக்கு காலம் பொருண்மையாக உள்ளதாக நம்ப வேண்டும். அவன் அதற்காக மொழியில் நினைவுத்திறனில் சில வேலைப்பாடுகளை செய்து 7:59 மணிதான் 8 மணிஎன நம்பத் தேவையிருக்கிறது. 7:59இல் இருந்து துவங்கி அவன் 8 மணிக்கு வந்து சேர்ந்திருக்கிறான் என நினைவுபடுத்த தேவையிருக்கிறது (எந்த குற்ற அறிக்கையிலும் கால ஒழுங்கு மிக முக்கியமாக இருப்பது இதனாலே.) ஆனால் நிஜத்தில் காலம் எங்குமே இல்லை, பருவுடல் மட்டுமே இருக்கிறது. காலத்தை எடுத்து பருவுடல் மீது ஒட்டி வைத்துநீ தான் அதுஎன நம்ப வைப்பதே குற்ற விசாரணையும், தீர்ப்பும். அச்செயலே வரலாறு. அச்செயலே தன்வரலாறு. அச்செயலே தன்னிலை கட்டமைப்பு. நமது ஆவணங்கள் அனைத்தும் நம்மை இந்த கற்பனையை நிச்சயமாக்க தோற்றுவிக்கப்பட்டவை.

குற்றத்தைப் பொறுத்தவரையில் நமக்கு திரும்பத் திரும்ப காலத்தினுள் ஒரு மனிதனைப் பொருத்தி நீ அது மட்டுமே என உறைய வைப்பது அவசியமாகிறது. அதனாலே கோணங்கி ஒரு படைப்பாளி அல்ல, குற்றவாளி தான் என்றும், அவர் ஒரு படைப்பாளி-குற்றவாளி என்றும், அவர் படைப்பாளி என்பதால் குற்றவாளி என்றும், அவர் குற்றவாளி என்றாலும் படைப்பாளியே, அதனால் மன்னியுங்கள் என்றும் பலவிதங்களில் நாம் குற்றத்தைச் சுற்றி ஜாங்கிரி சுற்றுகிறோம். என்னிடம் கேட்டால் அவர் இந்நேரம் சிறுநீர் கழிக்கிறார் என்றால் அவர் சிறுநீர் கழிக்கும் ஒரு மனிதன். பேஸ்புக் பார்த்துக் கொண்டிருந்தால் பேஸ்புக் பார்க்கும் ஒரு மனிதன். அதைத் தாண்டி அவர் ஒன்றுமில்லை. ஆனால் நான் சொல்வதை நீங்கள் ஏற்க மாட்டீர்கள்


ஏனென்றால் குற்றம் அல்ல, குற்றத்திற்கான நீதி எனும் வேட்கையே உங்களை அலைகழிக்கிறது. இந்தநீதி வேட்கைநிஜத்தில் ஒரு பழிவாங்கும் உணர்வு மட்டுமே. உங்களுக்கு கோணங்கியை பழிவாங்க வேண்டாம். அது ரொம்ப சுலபம். பஸ் ஏறி இப்போது கிளம்பினால் காலையில் அவரைப் போய் சந்தித்து பழிவாங்கி விடலாம். ஆனால் உங்களில் எவரும் அதை செய்ய மாட்டீர்கள். அது மற்றொரு குற்றமாகும் என்பதால் அல்ல. (நான் ஏற்கனவே சொன்னதைப் போல நம்மில் பலரும் குற்றங்களை அன்றாடம் இழைப்பவர்களே.) நாம் கோணங்கியை அல்ல, அவர் செய்த குற்றத்தையே பழிவாங்க விரும்புகிறோம். இது நவீன மனிதனின்கோணங்கித்தனம்’. எப்படி கடவுளைத் தேடி, சுயத்தைத் தேடி, அன்பைத் தேடி, நிம்மதியைத் தேடி நாம் அலைகிறோமோ அப்படியேகுற்றத்தைத் தேடியும்அலைகிறோம். அந்த அரூப சங்கதி உலகில் எங்குமே இல்லை என்றறிந்தால் நாம் மனமுடைந்து போவோம். இதனாலே நான் சொல்வதெல்லாம் பித்துக்குளித்தனம் என்றும் குற்றவாளி என ஒருவர் இருக்கிறார் என்றும் நீங்கள் தொடர்ந்து நம்புவீர்கள்


இந்த அபத்த உலகில் தொடர்ந்து நிலைத்திருக்க உங்களுக்கு அந்த நம்பிக்கை அவசியம். ஆனால் நான் இந்த உலகில் குற்றமே இல்லை என உறுதியாக சொல்வேன். காலம் என்பது சார்புநிலையில் தோன்றும் ஒரு சங்கதி, மனிதன் தொடர்ந்து ஒழுகிக் கொண்டிருக்கும் ஒரு நதி என நான் நம்புகிறேன். இதை நான் கோணங்கியைக் காப்பாற்ற சொல்லவில்லை. நான் எல்லா குற்றவாளிகளுக்கும் இதையே சொல்வேன். நான் இந்த நாட்டை ஆண்டால் முதலில் இந்த நீதிமன்றம், சிறைச்சாலைகளை ஒழித்துவிடுவேன். நவீன சமூகத்தின் மிகப்பெரிய அபத்தங்கள் இவைதாம். ஆனால் பழிவாங்கும் உணர்வை வெளிப்படுத்த தெரியாத வரையில் நம்மால் சிறைசாலையையும் ஒழிக்க முடியாது என அறிவேன். இது உண்மையில் ஒரு குற்ற பிரச்சினை அல்ல, இது ஒரு தத்துவ பிரச்சினையே என்று அதனாலே கூறுகிறேன். என்னை நீங்கள் ஒரு சிறைச்சாலையில் தள்ளினால் நான் அங்குள்ள மனிதர்களுடன் மிக இயல்பாக இருந்து விடுவேன். என்னைப் பொறுத்தவரையில் அவர்கள் குற்றவாளிகள் அல்ல, சாதாரண மனிதர்களே.

அண்மையில் இதைக் குறித்த ஒரு எழுத்தாளரின் பதிவை நான் பகிர்ந்து கொண்ட போது அவர் பாலியல் சீண்டலில் முன்பு ஈடுபட்டவர், அவருக்கு இதை சொல்லும் தகுதி இல்லை என சிலர் கூறினார்கள். ஒரு தோழி என்னிடம் மெஸஞ்சரில் வந்து வாதிட்டார். நான் அவரிடம் கேட்டேன், ஒருவர் உண்மை சொல்வதால் அவர் உண்மை விளம்பியும், ஒருவர் பொய் சொல்வதால் அவர் பொய்யரும் ஆவாரா என்று. ‘உண்மை விளம்பி நாளை பொய்யே சொல்ல மாட்டாரா, பொய்யர் நாளை உண்மையே சொல்ல மாட்டாரா?’ ‘சொல்லக் கூடும்என்றார் தோழி. ‘கூடும் எனில் அவர் எப்படி உண்மை சொன்னவரோ, பொய் விளம்பியவரோ ஆனார்? ஒருவரை உண்மையும் பொய்யும் சொன்னார் என்று தானே நாம் சொல்ல வேண்டும்?’ என நான் கேட்டேன். சம்பவம்’ 7:59க்கு நடக்கிறது. சம்பவம்’ 8 மணிக்கு நடக்கிறது. சம்பவம்வை செய்தரேவையும் செய்கிறார் என்றால் நாம் ஏன் அவரை-ஆவைசெய்தவர் என்றல்லாமல் ஒரே ஒரு சம்பவத்துடன் மட்டும் அடையாளப்படுத்துகிறோம்? இது ஒரு அபத்தம் இல்லையா என்று கேட்டால் அத்தோழிநீங்க சொல்றதை எல்லாம் ஒத்துக்க முடியாதுஎன்று கிளம்பி விட்டார். அவரிடமும் செயல்படுவது செயல்படுத்த முடியாத பழிவாங்கும் உணர்வு தரும் நெருக்கடியே, அவருடைய பிரச்சினை குற்றம் சம்மந்தப்பட்டதல்ல.

சரி குற்றமே இல்லையென்றால் சமூகத்தின் நிலை என்னவாகும்? ஆளாளுக்கு கொலை, கொள்ளை அடித்துக் கொண்டு இருப்பார்களே என்று கேட்டால் அப்படி ஆகாது என்று கூறுவேன். தண்டனைகளோ அப்பயமோ குற்றங்களைக் குறைப்பதாக யாரும் இதுவரை நிரூபிக்கவில்லை. குற்றங்களில் ஈடுபடுவதை தண்டனை இருந்தாலும் இல்லாவிடிலும் ஒரு சமூகம் அனுமதிக்காது. அதனால் சமூகத்துடன் இயைந்து போகிறவர்கள் குற்றங்களைத் தவிர்க்கவே செய்வார்கள். குற்ற விசாரணை, அதற்கான அமைப்புகள், தண்டனைக்கான ஏற்பாடுகள் இந்த சமூக அமைப்பின் மீது செயற்கையாக அமர்ந்திருப்பவை. ஒரு அட்டைப்பூச்சியைப் போல இவை நம் சமூகத்தை உறிஞ்சி வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இவற்றால் யாருக்கும் பயனில்லை. குற்றங்கள் அலையலையாகத் தோன்றித்தோன்றி அடங்குவதே சமூக எதார்த்தம். நாம் நம் பாட்டுக்கு வாழ்ந்து கொண்டும் இருப்போம். இயல்பான சமூக அழுத்தங்களால் குற்றங்கள் மட்டுப்படுத்தப்பட்டு ஒரு சமநிலை தோன்றும். அச்செயலை நாங்களே ஆற்றுகிறோம் என காவல்துறையும் நீதித்துறையும் சிறைத்துறையும் கோருவது பணத்துக்கும் அதிகாரத்துக்கும் ஆசைப்பட்டே ஒழிய அது நிஜம் அல்ல. நீதிமன்றத்தில் அலைந்தவர்களும் சிறை சென்று வந்தவர்களும், இந்த அமைப்புக்குள் ஒண்டி வாழ்கிறவர்களும் இதை நன்றாகவே அறிவார்கள் என நினைக்கிறேன்.

அதனால் குற்றங்களைப் பற்றி யோசித்து அவதிப்படாமல், அங்கலாய்க்காமல் வாழ்க்கையை அதன் போக்குக்கு வாழ்ந்துவிட்டுப் போவதே சிறப்பு. பழிவாங்குவதற்கு பதில் ஒரு காரையோ சில தங்க காசுகளையோ வாங்கலாம்

கருத்துகள்

Aravind இவ்வாறு கூறியுள்ளார்…
தத்துவ அளவில் இது சிறப்பான வாதம் ஐய்யா.
ஆனால் நடைமுறையில், ஆழ்பவர்களை காக்க சட்டமும் காவல் துறையும் அவசியமாகிறது.
எனவே, எவர் ஆழ்பவராக மாறினாலும், குற்றத்தை தண்டிக்கும் அமைப்பை மாற்ற இயலாது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...