முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆணின் அவமானமும் தாழ்வுணர்வும் தீராக்காதலும்


நம் ஊரில் சிலருக்கு பட்டவர்த்தமாக ஒரு கள்ள உறவில் இருக்க சிறந்த வழி கணவன் மீது குடும்ப வன்முறை, வரதட்சிணைக் கொடுமை என பொய் வழக்குகள் போட்டு அவனை சிறை, நீதிமன்றம், காவல்துறை என அலையவிட்டு கவனத்தை திருப்பிவிடுவதே. ஒரு வழக்கு நிலுவையில் இருக்கும் போது யாரும் எதைப்பற்றியும் கேள்வி எழுப்ப முடியாதல்லவா! அதிலும், பல கணவர்களுக்கு தமக்கு நிகழ்ந்த துரோகங்கள் பற்றி வெளியே பேச தயக்கம் உள்ளது. அதை தன் ஆண்மைக்கு இழைக்கப்பட்ட அவமானம் என்று நினைப்பதால் அதை மறைக்கவே ஒரு ஆண் விரும்புகிறான். அவர்கள் என்னிடம் பேசும் போது தயங்கித் தயங்கி, கிட்டத்தட்ட நா குழற, அரைகுறையாக தம் மனைவியர் பற்றி குறிப்புணர்த்துவதைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது. அதே நேரம், பொய்க் குற்றச்சாட்டுகளை மனைவி மீது சுமத்தும் கணவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் தெருமுனையில் நின்று கத்தி சொல்வார்கள். ஒரு ஆண் எவ்வளவு சத்தமாக ஒரு அந்தரங்க விசயத்தை சொல்கிறாரோ அதை வைத்து அவருடைய நாணயத்தை தலைகீழ் விகிதிமாக கணித்துவிடலாம் என நினைக்கிறேன்.
இன்னொரு பக்கம், மனைவியால் கைவிடப்பட்ட, அவமதிக்கப்பட்ட, துரோகம் இழைக்கப்பட்ட கணவர்களுக்கு ஒரு தாழ்வுணர்வு வந்துவிடுகிறது. இது சில நேரம் அவர்களுடைய கோபத்தை அல்லாமல் ஒருவித மன்றாடல் குணத்தை தூண்டுகிறது. தம் மனைவியருக்கு உளவியல் அடிமைகளாக மாறிப் போகிறார்கள். தம் மனைவியர் எப்படியாவது தம்மை ஏற்றுக்கொண்டால் போதும் என ஏங்குகிறார்கள். சிலர் இதனாலே அவர்களைப் பழிக்காமல் விடுகிறார்கள், விட்டுப்போனால் போதும் என நினைக்கிறார்கள், வேறு சிலர் உறவினர்கள், பொது நண்பர்கள் மூலமாக தொடர்ந்து இப்பெண்களிடம் கெஞ்சுகிறார்கள்: “அவன் உன் கூட இருக்கட்டும், பரவாயில்லை, இதுவரை நடந்ததை மறக்கிறேன், ஆனால் என்னை விட்டுவிடாதே!” பொய் வழக்கில் சிறையில் தள்ளப்பட்டவர்கள், வருடக்கணக்கில் அலைகழிக்கப்படுகிறவர்களை விட இப்படி "ஜெஸ்ஸி ஜெஸ்ஸி" எனப் போகும் ஆண்களைப் பார்த்தால் தான் பாவமாக இருக்கிறது. காதல் தாழ்வுணர்வைத் தூண்டினால் அது விஷமாக மாறி நம்மை சிறுக சிறுக கொன்றுவிடும்.
என்னுடன் தினம் தினம் நண்பர்கள் பகிர்ந்து கொள்ளும் இத்தகைய கண்ணீர் கதைகளைக் கேட்கும் போது என் இழப்பு, துயரம் எல்லாம் ஒன்றுமே இல்லை எனத் தோன்றுகிறது. ஒரு தோழி "நான் எந்த தப்புமே பண்ணல, என் மேலயும் என் பையன் மேலயும் பொய் வழக்கு போட்டிருக்காங்க, நான் பெட்ரோல் கேனுடன் காவல் நிலையத்துக்கு போகப் போறேன்" என சொல்கிறார். ஒருநாள் இதையெல்லாம் கடந்துவிடுவீர்கள், இவ்வளவு உணர்ச்சிவசப்பட வேண்டாம் என சொல்லி வைத்திருக்கிறேன். ஆனால் ஒரு பெண்ணைப் போல இவ்வளவு எளிதாக நேரடியாக ஆவேசமாக ஒரு பொய்க்குற்றச்சாட்டை, துரோகத்தை எதிர்கொள்ள ஒரு பெரும்பாலான ஆண்களுக்குத் தெரிவதில்லை. ஏன் ஆணை பெண்ணை விட பலசாலி என்று சொல்கிறார்கள் என்றே புரியவில்லை. என்னைப் பொறுத்தமட்டில் பெண்ணைவிட பல மடங்கு பலவீனமானவன் ஆணே. ஆணே முதலில் உடைந்து போகிறான், அவனே முதலில் தாழ்வுணர்வு கொள்கிறான், முதலில் மண்டியிடுகிறான், முதலில் தன்னை அழிக்கிறான். எதிர்த்து அடிப்பது, கடந்து போவது, தன்னைப் புத்துருவாக்கம் செய்வது பெண்ணின் சமூக உளவியலில், ஆளுமையிலே இருக்கிறது, ஆனால் ஆணுக்கு இத்திறன்கள் மிக மிக குறைவு.
சட்டத்தின், சமத்துவத்தின் பெயரில் எவ்வளவு துரோகங்கள், சுரண்டல்கள், உளவியல் வதைகள், பகற்கொள்ளைகள். ஒரு பக்கம் இதையெல்லாம் கேட்க கஷ்டமாக இருந்தாலும் இவர்களுடைய கதைகளால் எனக்கு இந்த பாரபட்சமான சூழல், அநீதி ஏற்படுத்தும் நிர்கதியுணர்வு, தனிப்பட்ட கோபம் வெகுவாக குறைந்து வருகிறது. தப்பித்து ஓடுவதை விட நம்மைப் போன்று அல்லல்படுகிறவர்களின் துயரத்தில் பங்கு கொள்வதே நம் மனத்தின் காயங்களை ஆற்றுப்படுத்த சிறந்த வழி என்று ஏன் பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள்!
"உனக்கும் கீழே உள்ளவர் கோடி,
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு”
- கண்ணதாசன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...