முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மகராஜனோடு..






மனிதர்கள் அடிப்படையில் சுயபிரதாபிகளே, தற்பெருமை மிக்கவர்களே என்பது என் நம்பிக்கை. என்ன நமக்கு அதற்கு அவகாசமோ தன்னம்பிக்கையோ இருக்காது. அல்லது துணிச்சல் இருக்காது. அடுத்தவர்களுக்கு அருவருப்பாக இருக்குமே என எண்ணி தவிர்த்துவிடுவோம். ஆனால் ஏதாவது ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் பெரும்பாலானவர்கள் தம் பெருமைகளை எடுத்து அள்ளிவிட தவற மாட்டார்கள். அதிலும் கலைஞர்களை சொல்லவே வேண்டாம். தாமாகவே சுயதம்பட்டம் அடிக்க முடியாத போதே அவர்கள் அடுத்தவர்கள் தம்மைப் புகழ மாட்டார்களோ என ஏங்கத் துவங்குவார்கள். இதை செய்ய விரும்பாதவர்கள் ஒரு போலியான பணிவுக்காகவே பின்னுக்கு நகர்ந்து கொள்ளுகிறார்கள். நான் என்னையும் இந்த பட்டியலில் சேர்த்துக் கொள்வேன். 

இப்படி அல்லாமல் மனம் திறந்து தம்மைப் பாராட்டிக்கொள்ளுவோரை எனக்குப் பிடிக்கும். இலக்கிய உலகில் அவ்வாறு சிலர் இருக்கிறார்கள். அவர்கள் பெயரை சொன்னால் பிரச்சினை வருமென்பதால் தவிர்க்கிறேன். சினிமா உலகில் பலரும் இருக்கிறார்கள் என்றாலும் பல சமயங்களில் நான் ரொம்ப எளிமைங்க, வண்ணமுங்க, ஆமாங்க, போமாங்க என நாடகம் போடுவார்கள். நான் இதை ஒரு ரஜினி பிம்பம் என்பேன். ரஜினி இதை ஆரம்பித்த பின்னர் பலரும் அவரை பின்பற்றி நடிக்கிறார்கள். இந்த போலித்தனம் இல்லாதவர் என்பதாலே எனக்கு இளையராஜாவை பிடிக்கும். தன் மனதில் உள்ளதை பூசி மொழுகாமல் சொல்ல ஒரு துணிச்சல் வேண்டும். அண்மையில் அவர் மனோபாலா பற்றி பேசும் போது சற்று சுயதம்பட்டம் அடிக்கிறார். ஆனால் அதில் தப்பென்ன? சுயகட்டுப்பாட்டுடன் இருப்பவர் அந்த "காரில் போகும் என்னைப் பார்க்க கோடம்பாக்கம் பாலத்தின் இரு பக்கமும் பலரும் காத்து நிற்பார்கள்" என்பதை தவிர்த்திருப்பார்கள். ஆனால் ராஜா செய்யவில்லை. அதுதான் சரியும் கூட. கேட்பவர்களுக்கு ஒரு கழிவிரக்கம், பாதுகாப்பின்மை உண்டென்றால் அது ராஜாவின் பிரச்சினை அல்ல. "எனக்கு கேட்க கஷ்டமா இருக்கில்ல, கொஞ்சம் பணிவா இருங்களேன்" எனக் கேட்பது கேட்பவர்களின் பிரச்சினை, அது ராஜாவின் பிரச்சினை அல்ல. 

இத்தனைக்கும் சுவாரஸ்யம் என்னவென்றால் தாழ்வுணர்ச்சி கொண்ட சிலர் இப்படி தம் குறையை மறைப்பதற்காக சுயதம்பட்டம் அடிப்பார்கள். ஆனால் ராஜா தன்னுடைய நிறையைக் காட்டுவதற்காகவே அதை செய்கிறார். இரண்டுக்கும் பாரித்த வேறுபாடு உண்டு. அவர் இந்த மத்திய வர்க்க பாதுகாப்பின்மை, கூச்சம், போலி பணிவு ஆகியவற்றை ரொம்ப முன்னரே கடந்துவிட்டார். நம்மால் செய்ய முடிந்தது அவரிடம் இருந்து இதைக் கற்பதே. 

நான் என் நாவல் எழுதும் வகுப்புகளில் மாணவர்களை தம்மைப் பற்றி உயர்வாக பேசி சுய அறிமுகம் செய்ய பயிற்சி கொடுக்கிறேன். தினமும் கண்ணாடி முன் நின்று அவ்வாறு பேசிக்கொள்ள சொல்கிறேன். கலைஞனுக்கு அது மிகவும் அவசியம். தன்னை உயர்வாக நினைப்பதே மனிதனின் உச்சபட்ச இயல்புநிலை. தன்னை தாழ்த்திக் கொள்வது அடிமைகளின் மனநிலை என்றார் நீட்சே. ஒரு கலைஞன் முதலில் மனிதனாக இருக்க வேண்டும். ராஜாவிடம் எனக்கு இவ்விசயம் மிகவும் பிடிக்கும். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...