மகாபத்ராவின் சில கவிதைகளைப் படித்திருக்கிறேன். காலம், அதன் வழி மனித தன்னிலை எப்படி வெளிபடுகிறது என்பதைப் பற்றி நதி போன்ற நீர்மை உருவகங்கள், காலநிலைக் குறிப்புகள் வழியாக பரிசீலிக்கும் கவிதைகள் அவை. குறிப்பாக ஒரு பெரிய வாழ்க்கைப் பரப்பை பேசுவது, பல தலைமுறைகளாக ஒரு தனிமனிதனின் தன்னிலை பயணித்து வருகிறதா என வினவும் வேதாந்தக் குரல் இவரது கவிதைகளுக்கு ஒரு காவியத் தன்மையை தருவதாக நினைக்கிறேன். தமிழ் நவீன கவிதையில் ஒரு துண்டுபட்ட குரலே இருக்கும். அதற்கு மாறாக 'நான் என் பண்பாட்டின், வரலாற்றின் குரல்' எனும் நெஞ்சு நிமிர்த்தல் மகாபத்ராவிடம் இருக்கும்.
ஒரிஸ்ஸாவில் மிஷினரிகள் செய்த மதமாற்றம், அதனால் இந்துக்கள் தன் அடையாளத்தை இழந்தார்கள், தானும் பாதிக்கப்பட்டேன் என சில பேட்டிகளில் சொல்லியிருக்கிறார், தன் கவிதைகளிலும் அதைப் போகிற போக்கில் விமர்சித்திருப்பார். இதை அவர்களுடைய வரலாறு, சமூக நிலைமைக்கு வெளியே புரிந்துகொள்வது சிக்கலானது.
இரங்கல்!
கருத்துகள்