நவம்பர் நாவல் எழுதும் சவால்
அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் நவம்பர் மாதத்தை கவனிக்கப்பட்ட நாவலாசிரியர்களும் இளம் எழுத்தாளர்களும் நாவல் எழுதும் மாதமாக கொண்டாடுவார்கள். குறிப்பாக ஒரு நாவலை எழுத நினைத்து திரும்பத் திரும்ப கைவிட்டு நொந்து போயிருப்பவர்களுக்கு ஒரு படைப்பை தினமும் எழுதி முடிப்பதற்கான மாதமாக இதை அறிவிப்பார்கள். ஒருநாளைக்கு 1600 சொச்சம் வார்த்தைகளை எழுதி மாத இறுதிக்குள் 50000 வார்த்தைகளை முடிக்க வேண்டும் என்பதே சவால். இதில் முக்கியம் நாவலின் தரத்தை அன்றி அளவையே முக்கியமாகக் கருதி வேகமாக எழுதி முடிப்பது.
இந்த நவம்பர் நாவல் சவாலை நான் இங்கு இணையத்தில் ஆரம்பிக்கலாம் என இருக்கிறேன். என்னுடன் இணைந்து நீங்களும் எழுதலாம். தினமும் மாலை 1 மணிநேரம். ஒரு லிங்க் கொடுக்கிறேன். அதை கிளிக் பண்ணி சேர்ந்து அமைதியாக எழுதுங்கள். ஒரு மணிநேரத்துக்குப் பின் உங்கள் எழுத்தனுபவங்களைப் பகிருங்கள். கேள்விகள் இருந்தால் கேளுங்கள். ஐயங்களை பரஸ்பரம் கேட்கலாம். என்னால் முடிந்தளவுக்கு நான் உதவுகிறேன்.
மாலையில் எந்த நேரம் எல்லாருக்கும் பொதுவாக வசதியாக இருக்கும் என நினைக்கிறீர்கள்?
6-7
7-8
8-9
9-10
சொல்லுங்க. abilashchandran70@gmail.com
இன்றே ஆரம்பிக்கலாம்!
கருத்துகள்