முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கேள்வி-பதில் 2

 கேள்வி: ஹலோ அபிலாஷ், இயல்புவாத நாவல் என்றால் என்ன?

பதில்: இயல்புவாதம் எதார்த்தவாதத்தின் கிளையாகத் தோன்றி பின்னர் தனக்கென தனி அடையாளம் பெற்றது. அதனாலே எதார்த்தவாத மற்றும் இயல்புவாத நாவல்களுக்கு இடையில் வேறுபாட்டைக் காண்பது சிரமம். எதார்த்தவாதத்தின் பல கூறுகளைக் கொண்டிருந்தால் விட்டேந்தியான, புறவயமான கதைகூறல் முறை, வாழ்வின் முன்கூறப்பட்ட தன்மை இயல்புவாதத்தின் கூறுகள். கதைசொல்லியின் உணர்ச்சிகரமான ஈடுபாடு இல்லாத கதைகூறல் என்றால் அது இயல்புவாத நாவல் என்று நாம் முடிவுசெய்து கொள்ளலாம். இயல்புவாத நாவலில் பிரதான பாத்திரம் தனது அக-ஊக்கத்தினாலோ தன்முயற்சியாலோ அல்லாமல் காலத்தின், இயற்கையின், சமூகச் சூழலின் தாக்கத்தால் நடத்தப்படுவதாக காட்டப்படும். சில நாவல்களில் எதார்த்தவாத, இயல்புவாத கூறுகள் கலந்திருக்கும். மேற்கில் எமிலி ஸோலா, ஜாக் லண்டன், ஹென்ரி ஜேம்ஸ், ஸ்டீபன் கிரேனின் படைப்புகளும், வில்லியம் பாக்னரின் சில கதைகளும் இயல்புவாதத்தின் சிறந்த உதாரணங்களாக கருதப்படுகின்றன. தமிழில் பூமணி, இமையம், கண்மணி குணசேகரனை இயல்புவாத நாவலாசிரியர்களாக குறிப்பிடுகிறார்கள்.
மேலும் பல கேள்விகளை வகுப்பில் எழுப்பி விடைகளைப் பெற்று உங்கள் அறிவை வளர்த்துக்கொள்ள இணையுங்கள் நாவல் வகுப்பில். தொடர்புக்கு இன்பாக்ஸுக்கு வரவும். அல்லது 9790929153க்கு வாட்ஸாப் பண்ணவும்.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...