நாவலின் ஒரு முக்கிய சிறப்பு அதன் விரிவு, பிரம்மாண்டம். வாசகன் தன் உலகை பன்மடங்கு பெருக்கிக் காணத் தான் நாவலை வாசிக்கிறான். இதை ஒரு எழுத்தாளன் எப்படி நிகழ்த்துகிறான்?
நாவலுக்குள் இடம் மற்றும் காலம் விரிவடையும் போது பிரம்மாண்டம் தோன்றுகிறது.
காலத்தை பிரம்மாண்டமாய் காட்ட கதையை ஒரு வரலாற்றுப் பின்னணியில் வைக்க வேண்டும். அல்லது வரலாற்றையே கூட கதையாக்கலாம். வரலாறு பின்னணி ஆவதற்கு அருந்ததி ராயின் God of Small Things ஒரு உதாரணம். சாதி மற்றும் நிலப்பிரபுத்துவ சமூகம் அடைகிற மாற்றங்கள், கேரள இடதுசாரி அமைப்புகளின் அரசியல் ஆகிய பின்னணிகள் அந்த எளிய காதல் கதைக்கு ஒரு அகலமான கேன்வாஸை அளிக்கின்றன. தமிழில் வணிக நாவல்களில் சாண்டியல்யனின் பல நாவல்கள், “பொன்னியின் செல்வன்”, இலக்கிய நாவல்களில் “ரப்பர்”, “வெள்ளை யானை”, அசோகமித்திரனின் “பதினெட்டாவது அட்சக்கோடு” போன்ற பல படைப்புகளை சொல்லலாம். வரலாறே கதையாவது என்பதற்கு சு.ராவின் “புளிய மரத்தின் கதை”, எஸ்.ராவின் “நெடுங்குருதி”, தல்ஸ்தாயின் “போரும் வாழ்வும்” ஆகியவை உதாரணங்கள்.
நாவலில் பிரம்மாண்டத்தை தோற்றுவிப்பதற்கான அடுத்தடுத்த உத்திகளை வரும் பதிவுகளில் சொல்கிறேன்.
இவ்வகையான விவாதங்களில் பங்கேற்று உங்கள் எழுத்தை மேம்படுத்த இம்மாதம் கடைசி வாரத்தில் ஆரம்பிக்கும் நாவல் வகுப்பில் சேருங்கள். தொடர்புக்கு 9790929153
கருத்துகள்