முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எழுத தயக்கமா?


 

அண்மையில் எழுத்தாளர் இந்திரன் அழைத்துப் பேசும் போது என்னுடைய நாவல் வகுப்பைப் பற்றியும் கேட்டார். வகுப்புக்கு அப்பால் ஒவ்வொரு மாணவருக்கு நான் தனிப்பட்ட முறையில் வழங்கும் வழிகாட்டுதலைப் பற்றி கேட்டுவிட்டு "இது உங்கள் நேரத்தை கணிசமாக எடுத்துக் கொள்ளுமே?" என்றார். உண்மை தான். ஆனால் அது எழுத்தாளராக எனக்கு பயனுள்ள நேரமே. என் வகுப்புகளில் இளம் படைப்பாளிகளுக்கு சில நேரம் அவர்களுடைய படைப்பைப் பற்றி பேசி நம்பிக்கை ஊட்ட வேண்டியிருக்கும். தயக்கத்தை களைந்து அவர்களை எழுத வைக்க பல உத்திகளை கையாள வேண்டியிருக்கும். தயக்கமின்றி எழுதும் பண்பு கொண்டோருக்கு அவர்களுடைய நாவல் பிரதியின் வடிவ நுணுக்கங்களை புரிய வைக்க நேரம் செலவிட வேண்டி வரும். இது ஒவ்வொன்றும் எனக்கு தனிப்பட்ட முறையில் எழுதுவதற்கு உத்வேகமும் ஆற்றலும் தரும். சில நேரங்களில் என்னுடைய மாணவர்களின் நாவல் பிரதியை அலசும் போது வடிவ ரீதியாக பல விசயங்களை நான் கற்றுக்கொள்கிறேன். முக்கியமாக ஒரு எழுத்தாளராக நான் தனியாக இந்த அல்லல்களை எதிர்கொள்ளவில்லை, எனக்குள்ள பிரச்சினைகள் வேறு பலருக்கும் உள்ளவை தான் என ஒரு ஆறுதலைக் கொடுக்கிறது. இதுவே அவர்களுக்கு தேவையானது - தம் திறமை மீதான சந்தேகம், போதாமை உணர்வு, கதை நகராமல் இருப்பது, கதையில் நமபகத்தன்மை இல்லாமல் போவது, எதையெல்லாம் உள்ளே கொண்டு வருவது ஆகிய சவால்கள் அனேகமாக எல்லா படைப்பாளிகளுக்கும் உள்ளவையே. இதை உணரும் போது நமக்கு ஒரு தன்னம்பிக்கையும் துணிச்சமும் வரும். இது விசித்திரமானதே, ஆனால் மனிதன் ஒரு கூட்டு விலங்கு அல்லவா. எழுத்தாளர்கள் ஒரு குழுவாக இயங்கும் போது அதிக ஆற்றலை வெளிப்படுத்துவது வரலாறு தோறும் நடந்து வந்துள்ளது. நாவல் வகுப்பு இதற்கு ஒரு நல்வாய்ப்பை அமைத்து தருகிறது. சக படைப்பாளிகளை கண்டடைந்து அவர்களுடன் உங்கள் எழுத்துப் பயணத்தை பகிர்ந்துகொள்ள முடிகிறது. கூடவே நீண்ட காலமாக எழுதி வரும்ஒ ரு வழிகாட்டியை, mentorஐயும் தருகிறது.

ஒரு வகுப்பில் இணையும் போது நீங்கள் பன்மடங்கு ஆற்றல் பெற்றவர் ஆகிறீர்கள்.
வரும் இரு மாதங்களில் நடக்கப் போகும் இணையவழி நாவல் வகுப்பில் இணையவும் கட்டணம் உள்ளிட்ட விபரங்களை அறியவும் 9790929153 எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.