முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நம்மூர் தவளைகள்



வர்ணனையாளர்களில் தமிழ்நாட்டு முன்னாள் வீரர்களும் சரி, தமிழ்நாட்டை சேர்ந்தவர்களாக இருந்து வெவ்வேறு அணிகளில் பயிற்சியாளர்களாக பணியாற்றியவர்களும் சரி தவறாமல் சில வீரர்களை ஒருபக்க சார்பாக விமர்சிக்கிறார்கள். அதுவும் தமிழ் வர்ணனை ஆரம்பித்த காலத்தில் இருந்தே பார்க்கிறேன் - சஞ்சு சாம்ஸன் தொடர்ச்சியாக தன் அணிக்காக அனேகமாக எல்லா பருவங்களிலும் ரன் அடித்தாலும், ஆட்டங்களையும் தனியாக வென்றளித்தாலும் அவரைப் பாராட்ட இவர்களுக்கு மனமே வராது. அவர் மீது கடுமையான காழ்ப்புணர்வு இவர்களிடையே உள்ளது. தமிழக வீரர்களில் தினேஷ் கார்த்திக்கையும் சுலபத்தில் பாராட்ட மாட்டார்கள். ஆனால் விஜய் சங்கரையும் அஷ்வினையும் விழுந்து புரண்டு பாராட்டுவார்கள். சங்கரா கமான், கமான் என்று வடிவேலுவை போல இரு கைகளையும் அசைத்து கூப்பிடுவார்கள். வெங்கடேஷ் ஐயரையும் தவறாமல் பாராட்டுவார்கள். இந்த மூன்று வீரர்களும் ஒரு சில பருவங்களைத் தவிர பிற போட்டிகளில் சோபிக்காதவர்கள். ஐ.பி.எல் ஏலத்தில் பெரிதாக கவனம் பெறாதவர்கள். இந்த பாகுபாடான மனநிலையை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. அணி விசயத்திலும் இப்படித்தான் நடந்துகொள்வார்கள் - காலங்காலமாக கோப்பை வெல்லாத பெங்களூரையும் அண்மையில் மோசமாக ஆடி வரும் மும்பையையும் பாராட்டிக் கொண்டு இருப்பார்கள். சன் ரைஸர்கள் சொதப்பினாலும் பாராட்டுவார்கள். சென்னை தோற்றாலும் புகழ்ந்துகொண்டே இருப்பார்கள். தோனி வந்ததும் அவுட் ஆனாலும் ‘செம ஷாட் அடிச்சு அவுட் ஆனார்’ என மெய்சிலிப்பார்கள். வேறு அணிகளை துளியும் கண்டுகொள்ள மாட்டார்கள்.

இவ்வளவு வெறுப்பு இருப்பதனால் தான் முப்பதாண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டு அணியால் ஒரு போதும் ரஞ்சித்தொடரில் கோப்பை வெல்ல முடியவில்லை என நினைக்கிறேன். கடந்த ரஞ்சிக்கோப்பை இறுதிப்போட்டியில் தமிழ்நாட்டு அணி தோற்ற பிறகு அணித்தலைவரை ஒரு பக்கம் மும்பையில் இருந்து வந்த பயிற்சியாளர் சுலேக்ஷன் குல்கர்னி மீடியாவில் ரோஸ்ட் பண்ணினார், முன்னாள் தமிழக பயிற்சியாளர்கள் அணித்தலைவரை ஆதரித்து பயிற்சியாளரை ரோஸ்ட் பண்ணினார்கள். தமிழ்நாட்டு அணித்தலைவர் யார் சொல்லையும் கேட்காமல் தற்குறியாக இருப்பவர், அவருக்கு கீழ் ஆடியவர்களும் அப்படித்தான். அவர்களைக் கொண்டு கடைசி வரை கூட்டி வந்ததே பெரிய விசயம். கடைசியில் பயிற்சியாளரை ராஜினாமா பண்ண வைத்தார்கள்.
இவர்களைக் கட்டுப்படுத்தி ஆட வைக்க நீங்கள் இவர்களை விட உச்சபட்ச அதிகாரம் பெற்றவராக இருக்க வேண்டும். மோசமான பண்பாடு!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...