முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வேலை, சம்பாத்தியம், அதிகாரம் எனும் காலாவதி சிந்தனை

வேலையென்பது அதிகப் பணத்தையும் சமூக ஏற்பையும் அதனாலே சமூக அதிகாரத்தையும் தரும் என ஒரு காலத்தில் நம்பப்பட்டது. இது நிலம் ஆணுக்கு உரிமையாக இருந்த காலத்தின் விழுமியம், அதன்மீதான நம்பிக்கை. 1950களுக்குப் பிறகு அது உடைந்து 70களுக்குப் பிறகு நிர்மூலமானது. உழைக்கும் ஆண்கள், தொழிற்சாலை அடிமைகளாகவும், நகரங்களில் உழல்பவர்களாகவும் தமது நேரம், உடல்மீது அதிகாரமற்றவர்கள் ஆனார்கள். அவர்கள் குடும்பத்தை இறுகப் பற்றிக்கொண்டார்கள். அங்கு தம் அதிகாரத்தைக் காட்ட முயன்று அவர்களில் சிலர் வன்முறையாளர்கள் ஆயினர். அதற்கடுத்த தலைமுறையில் தாராளமயமாக்கல் வர, பெண்கள் அதிகமாக வேலைக்குச் செல்ல வேலையென்பதன் பொருள் துன்பம், அடிமைத்தனம், அவதி என அவர்கள் புரிந்துகொண்டதன் பதிவை நாம் 80, 90களின் வெகுஜனக் கதைகளில், படங்களில் நுட்பமாகப் பார்க்க முடியும் இதை முதலீட்டியம் விரும்பாது. முதலீட்டிய முகவரான பெண்ணியம் உடனே வேலையின் அர்த்தமின்மையை, அவதியை குடும்பத்தின், ஆண்களின் மீது சுமத்தியது. பேருந்தில், சமையலறையில் பெண்களுக்குத் துனம் என்றார்கள், ஆனால் பத்து மணிநேரம் வேலைக்காக ஓடுவதன் சிக்கலைப் பற்றி யாரும் பேசவில்லை. இன்று தனிப்பெண்களிடம் பேசும்போது அவர்கள் வேலையிட நிச்சயமின்மை, சுரண்டல், அழுத்தம் குறித்த கவலைகளை வெளிப்படையாகச் சொல்கிறார்கள். அவர்களில் மேல்தட்டினர் அதிகமாகக் குடிக்கிறார்கள், தூக்கமின்மையால், மன அழுத்தத்தால் துன்புறுகிறார்கள். மெல்லமெல்ல இன்று வேலை குறித்த புரிதல் மாறிவருகிறது. 
 குடும்பத்துக்காக உழைப்பது மிகவும் அழுத்தமுள்ள நெருக்கடியான விசயம், துன்பம். அதை ஆண்கள் அதிகமாகச் செய்கிறார்கள் எனில் அதற்கு சமூகக் கட்டாயமே காரணம். வேலைக்குப் போகும் பெண்கள் பயணம், வேலையிட இடர்கள், மன அழுத்தம் பற்றி வருந்துகிறார்கள் எனும்போது அதையெல்லாம் தொடர்ந்து சகிக்கும் ஆண்களுக்கு அதற்கான அங்கீகாரம் அவசியம் எனக் கருதுகிறேன். 

அடுத்து, வேலை என்பது தனிமனித துய்ப்புக்காக சம்பாதிக்கச் செய்யும்போது மட்டுமே விடுதலை, அல்லாவிடில் அடிமைத்தனம். இதை இன்று பெண்கள் உணர்ந்து வருகிறார்கள், அதனாலே குடும்ப அமைப்பை இளம்பெண்களில் ஒரு பகுதியினர் விரும்புவதில்லை என்பதே என் பார்வை. ஆனால் ஆண்கள் குடும்பத்துக்காக உழைக்க வேண்டும் என சமூகம் இன்றும் அழுத்தம் கொடுப்பதால் அவர்களால் அது சுலபத்தில் முடிவதில்லை. குடும்பம் இல்லாமல் சாப்பாட்டைக் கூட சமாளிக்கலாம், ஆனால் செக்ஸ் அவர்களுக்கு ஒரு பெரிய பிரச்சினை. உத்தியோகம் ஆண்களின் பொறுப்பல்ல, லட்சணமல்ல என்று பொதுசமூகம் கோரும்போதே பெண்களும் அதை ஏற்கும்போதே இன்று வேலையின் பொருட்டு ஆண்கள் நேரிடும் அழுத்தமும், செய்யும் தற்கொலைகளும் குறையும். வேலையை அதிகாரம் என நாம் தவறாக நினைக்கிறோம். அக்காலம் முடிந்துவிட்டது. இன்று ஆண்களின் வேலை அவர்களது நிபந்தனைக்குட்பட்ட அதிகாரம் மட்டுமே. வேலை என்பது அவ்வளவு நிச்சயமற்றதாகிட சம்பாத்தியமும் தற்காலிகமாகிட ஆண் அதிகாரத்திற்கு அர்த்தமில்லாமல் போய்விட்டது. நாம் இன்றும் பழைய பல்லவியைப் பாடியிராமல் வேலையைச் சுமையாக மட்டும் பார்க்க வேண்டிய காலம் வந்துவிட்டது. அதிகமாக சுமக்கிறவருக்காக பரிதாபப்படவும் அவரை ஆதரிக்கவும் வேண்டும் (அது ஆணோ பெண்ணோ). என்னுடைய வருத்தம் ஏன் அம்மாதிரி விவாதம் இங்கு நடப்பதில்லை என்பதே.

ஆம், வேலை ஒரு privilege தான், ஆனால் தனக்காக உழைத்துச் செலவு செய்யும்போது மட்டும். குடும்பத்துக்காக வெளியே போய் செய்யும் வேலையின் பெயர் சமூகச் சுராண்டல், அடிமைத்தனம். அதில் எந்த பெருமையும் இல்லை. சிக்கிக்கொண்டு விட்டடார்கள் என்பதைத் தவிர அவர்கள் அதில் நிலைப்பதற்கு வேறு காரணமும் இல்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...