Skip to main content

Posts

Showing posts from October, 2025

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

ஆப்யந்தர குற்றவாளி

  "ஆப்யந்தர குற்றவாளி" சேதுநாத் பத்மகுமார் என்பவர் எழுதி இயக்கிய படம். ஆசிப் அலி நாயக வேடத்தில். 498A போன்ற போலி வழக்குகளால் அலைகழிக்கப்படும் இளைஞர் ஒருவரின் கதை. இக்கதை நான் கேட்ட, பார்த்த பல்வேறு சம்பவங்களை மீள்நிகழ்த்தியதைப் போல உள்ளது. பெற்றோரின் அழுத்தத்தின் பெயரில் திருமணம் செய்து அதிலிருந்து உடனடியாக வெளியேற பொய்க்குற்றங்களை கணவர் மீது சுமத்தி வழக்காடுமன்றம் வரும் ஒரு பெண். அவர் இறுதியில் மனம் மாறி நீதிபதி முன்பு உண்மையை ஒப்புக்கொண்டு வழக்கைப் பின்வாங்குகிறார். நடுவே துணைக்கதைகளாக பொய்க்குற்றச்சாட்டின் பெயரில் மகளைக் காண அனுமதிக்கப்படாத அப்பாவும், அம்மாவாலும் தாத்தாவாலும் அவர் மீது அச்சத்திடமும் இயல்பாகவே தனக்கு அப்பா மீதுள்ள பாசத்திடமும் மோதித் தடுமாறுகிற அவரது பெண் குழந்தை, கணவர் இறந்தபிறகு மாமனார் பெயரில் உள்ள சொத்தைக் கேட்டு வழக்காடு மன்றம் செல்லும் பெண் எனக் காத்திரமான சில காட்சிகளும் உள்ளன. அந்த மகளைக் காணத் தவிக்கும் அப்பாவின் பாத்திரத்தில் சித்தார்த் பரதன் அபாரமாக நடித்திருக்கிறார். அவர் மட்டுமல்ல, பெரும்பாலானவர்கள் படத்தில் நன்றாக நடித்திருக்கிறார்கள். சிறு பா...

நாவலெழுதுவது பற்றின குறிப்புகள் 1

  'நாவலை எழுதும்போது அதைப் பின்னுக்குச் சென்று திருத்தக்கூடாது. முதல் வரைவை வருகிறபடி எழுதிவிட வேண்டும்' என்பார்கள். இது உண்மையே. ஆனாலும் விதிவிலக்குண்டு. சிலநேரங்களில் நாம் எழுதி வரும் ஒரு நாவலில் இருந்து ஒரு சிறிய இடைவேளை எடுத்து திரும்ப வரும்போது சின்னச்சின்ன குறைகள் தென்படும். அப்போது ஆரம்பத்தில் இருந்து சில திருத்தங்களைச் செய்வதே நல்லது. உ.தா., ஒரு கதாபாத்திரம் 200வது பக்கத்தில் திடீரென வந்தால்? அவருக்கான முன்கூறான விபரங்களை முதல் 50 பக்கங்களுக்குள் அங்கங்கே தூவ வேண்டும். காரண காரிய சரடு சரியாக காட்சிகளுக்குள் அமைக்கப்படவில்லை என்று தோன்றினாலும் அதையும் ஆரம்பம் முதலே அங்கங்கே செய்துவிட்டே மிச்ச கதையை எழுத முடியும். எனில் நாவலைத் திருத்தி அதன் இரண்டாவது வரைவை எழுதும்போது குழப்பங்கள் வராது. அப்போது பின்னுக்குப் போய் மீளெழுதுவதைவிட ஆரம்பத்திலே செய்வது நல்லது என்பது என் எண்ணம். ஒரு நாவலின் சரியான நடை, கதைசொல்ல வேண்டிய பாணி, மொழி என்ன என்பதும் முக்கியமான கண்டுபிடிப்பே. அதையும் சரியாக எப்போதும் நாம் துவக்கத்திலே கண்டறிவதில்லை. அதைச் சரியாகப் பிடிப்பதே சிலருக்கு பெரும் திகைப்பூட்...

மூன்றாவது அணி இயக்குநர்

  ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஒரு பிரச்சினை இருக்கும் - கடந்த பத்தாண்டுகளில் அது நரேட்டிவ் செட் பண்ணுவதாக இருக்கிறது. அரசியலில் இதைத் துவங்கி வைத்தது பாஜக. பகிங்கரமான குற்றச்சாட்டுகள், கதையாடல்கள், எதிரிடைகளை உருவாக்கி மக்களிடையே வெறுப்பை விதைத்து அந்தப் பரபரப்பையும் பதற்றத்தையும் கொண்டு தம்மைப் பெரியோராகக் காட்டுவது, அதே சமயம் தம்மைப் பாதிக்கப்பட்டோராகவும் முன்னிறுத்துவது. ஊடகங்களைத் தம் வசப்படுத்தி தம்மை விமர்சிப்பவர்களை துரோகிகள், குற்றவாளிகள் என்றோ ஒடுக்குபவர்கள், கொடுமைக்காரர்கள் என்றோ, இரண்டுமேதாம் எனவோ சித்தரிப்பது, இதைக் குறித்து அஞ்சி அவர்கள் வாயை மூடும் சூழலை ஏற்படுத்துவது. இதை ஜெர்மனியில் ஹிட்லரும் ரஷ்யாவில் ஸ்டாலினும் முன்பே பண்ணியிருக்கிறார்கள் என்றாலும் நம் நாட்டில் தேசியம், கட்சிக் கட்டுப்பாடு, சித்தாந்த விசுவாசம் ஆகியவற்றை மீறி மூளைச்சலவையாக மட்டுமே இது இருக்கிறது. அவ்வாறு மூளைச்சலவை செய்து சாதி, மதம் உள்ளிட்ட எதிரிடைகளைக் கொண்டு என்னதான் பாசிசத்தை வளர்த்தாலும் ஒட்டுமொத்தமாக அதே சமூக நீதி மக்களாட்சியைத்தான் இவர்களும் செய்ய வேண்டியிருக்கிறது என்பதொரு சுவாரஸ்யம். சினிமா...

'வெகுமக்கள்' சினிமாவைக் கொண்டாடும் விலங்குப் பண்ணை

தீபாவளி என்றால் ஓய்வு தினம், கொண்டாட்டம். நான் என் குழந்தைப் பருவத்தில் அப்படித்தான் மகிழ்ச்சியாக இந்நாளைப் பார்த்தேன். இந்த நாளில் எவ்வளவோ பேசலாம், படிக்கலாம், எழுதலாம், நன்றாக சாப்பிட்டுவிட்டு உறங்கலாம். உறவினர்களைச் சந்திக்கலாம். பட்டாசு வெடித்து சூழலை ஓரளவுக்கு மாசுபடுத்தி ஊரையே கதறடிக்கலாம். இதைப் பற்றி பிறரிடம் பகிரலாம். நம் வாழ்க்கை மீது உள்ள நம் கட்டுப்பாடு புலனாகும். நாம் இங்கே இவர்களுடன் இணைந்திருக்கிறோம் எனும் உறுதி ஒரு நம்பிக்கையை அளிக்கும். பொங்கலும், கிறித்துமஸும் கூட அப்படித்தான் (இஸ்லாமிய பண்டிகைகளை இவர்கள் இன்னும் பண்டமாக்கல் செய்யாததால் அதற்குள் நான் வரவில்லை.) ஆனால் நம் ஊடக வியாபாரிகள் தீபாவளி என்றால் தீபாவளி சிறப்பிதழ் படியுங்கள் என்று ஆரம்பித்து படம் பாருங்கள், படம் மட்டுமே பாருங்கள் என்று அதைப் பற்றி மட்டுமே யோசிக்கிற வைபவம் ஆக்கிவிட்டார்கள்.  ஏன் தீபாவளி என்றாலே படம் பார்த்துவிட்டு அதைப்.பற்றி புலம்ப வேண்டும் என ஒரு கும்பல் திரிகிறார்கள்? அதிலேயே ஒருநாள் முடிந்துவிடுகிறதே. நீங்கள் ஒன்றை செய்யக் கூடியவராக இருக்கையில் அங்கு செயலை நிகழ்த்துபவர். நீங்...

வாடா மலர்

  எனக்கு இடதுபுறம் நிற்பவர் என் முனைவர் பட்ட ஆய்வு மாணவர். ஆன் தெரஸா பென்னி. அவருக்கு நேற்றே முனைவர் பட்ட வாய்மொழித் தேர்வு நடந்தது. கடுமையான உழைப்பாளி. ஆய்வுக் காலத்திலே கல்யாணம், குழந்தைப் பிறப்பு, புது வேலை என மாற்றங்களும் சவால்களும் வர அவர் அவற்றுடன் முனைவர் ஆய்வுப் பணியையும் செறிவாக மேற்கொண்டார். எனக்கு வலப்பக்கம் நிற்பவர் எப்.டி எனக்கு எம்.ஸி.ஸி கல்லூரியில் பிரசித்தமாகத் திகழும் பேராசிரியர் பிராங்கிலின் டேனியல். நான் அங்கே முதுகலைப் பட்டப் படிப்பில் சேர்ந்தபோது எப்.டி சார் அங்கு ஏற்கனவே நிலைப்பெற்று பெரும் ஆளுமைகளாகத் திகழ்ந்த பேராசிரியர்களின் மத்தியில் ஒரு நாட்காட்டியில் விடுமுறைத் தினங்கள் கவனப்படுத்தப்பட வேலை தினம் போலத் தோன்றினார். சற்று கூச்சமான, கனவான் தோரணை கொண்ட நட்பான மனிதர். இளைஞர்களுக்கு ஈடானத் தன்னைக் கருதி இளைஞர்களாலும் (இயல்பாகவே) அவ்வாறே கருதப்பட்டு சமமாக நினைக்கப்படவர். நான் கல்லூரியில் பணியாற்ற ஆரம்பத்தில் விரும்பி பின்னர் அப்பணி செய்யப் பிடிக்காமல் ஊடகம், இதழியல் என்று சிறிது காலமும் அறிவியல் இதழ்களைத் திருத்தும் பணியிலும் இருந்து வேலையில்லாதவன், வேலை தெரிந்...

புனைவு எழுதுவது குறித்த கேள்வி பதில் - நேரலைக் காணொளி

  கேள்விகள்: நாம் எழுதியதை, புதிய கோணத்தில் திருத்தி எழுதுகிறோம். சில நேரங்களில், அப்படி எழுதிய எல்லாம் முக்கியமான பகுதியாக தெரிகின்றன. சில நேரங்களில், இந்த பகுதி அவ்வளவு முக்கியமில்லை என்று தோன்றுகின்றது. இதில் முடிவெடுப்பது சிரமமாக இருந்திருக்கின்றது. கதையை சற்று தள்ளிவைத்து, வாசித்து பார்க்கலாம் என்று எண்ணி, ஒரு வாரத்திற்கு வாசித்து பார்த்தாலும், அதே தடுமாற்றம் இருக்கின்றது. இதை எப்படி சரி செய்வது? ஒரு சித்தாந்தம் குறித்து எழுதும் போது, அதை எப்படி கதையின் போற போக்கில் எழுதுவது? அதாவது எப்படி 'preaching' ஆக இல்லாமல், அதே சமயம் ஆழமாகவும் அழுத்தமாகவும் அதை பதிவு செய்வது? பதிலுக்குக் காணொளொயைப் பார்க்கவும்!

நீதி பிளாஸ்டிக் பொம்மை வியாபாரிகள்

  நான் கடுமையாக வெறுப்பது யுடியூப் வழியாக முன்னெடுக்கப்படும் சமூக ஊடக பட பிரமோஷன்களைத்தாம். அவை நம் நேரத்தைக் கொல்வதுடன் உலகமகா சமத்துவ, நீதிப் பிரச்சினைகளைக் கையில் எடுத்துக்கொள்பதாகப் பாவிக்கின்றன. ஆனால் அப்படங்களின் ஒரே நோக்கம் வியாபாரம்தான். நம் கவனத்தை அறுவடைப் பண்ணி விற்பதுதான். அதற்காக 'நான் சிறுவயதில் வடை தின்னும்போது காக்கா ஏமாற்றிவிட்டது, அந்தக் காக்காய்ளுக்கு எதிராகவும், பாட்டிகளின் சார்பாகவும் படமெடுக்கிறேன்' என குரல் தழுதழுக்கப் பேசுவார்கள். ஊடக வெளிச்சத்திற்காக ஏங்கும் அப்பாவிகளையும் கூடவே கூட்டிவருவார்கள். பிஹைண்ட்வுட்ஸ் துவங்கி பல்வேறு சேனல்கள், பேஸ்புக், இன்ஸ்டா விளம்பரக் கட்டணம், தயாரிப்பு வலையில் உள்ள சன் டிவி, ஸ்டார் டிவி என பெரிய பிள்ளைபிடிக் குழு இது. இவர்களுடைய பாணி அப்படியே பிக்பாக்கெட் திருடர்களின் உத்தியை ஒத்திருக்கும் - ஒரு கூட்டம் கவனத்தைத் திருப்பும், இன்னொன்று திருடும், மற்றொன்று விற்கும், பணத்தை மடைமாற்றும். ஒரு கும்பலாக ஒரே நேரத்தில் ஒருங்கிணைந்து செயல்பட்டு சில வாரங்களில் மறைந்துபோவார்கள். இது ஒரு பருவகால வியாபாரம் போல வருடத்திற்கு இருமுறைகளோ, ...

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

வயநாடு பயணம்

  கடந்த சனி, ஞாயிறு கேரளாவில் வயநாட்டுக்கு பைக் பயணம் மேற்கொண்டேன். என் நண்பரின் நண்பர் வழியாக அங்குதான் எழுத்தாளர் லைலாவைச் சந்தித்தேன். அதற்கு அடுத்த நாள் வயநாட்டில் நடைபெற்ற நூல் வெளியிட்டு விழாவிற்கு அழைத்தார்கள். ஒரு மலையாள இலக்கியக் கூட்டம் எப்படி நடக்கும் எனத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தினால் சென்றேன். ஆனால் போனதும் அப்படியே அழைத்து மேடையில் அமர வைத்துவிட்டார்கள். 122 கவிகள் எழுதிய கவிதைகளின் தொகுப்பு அது. பெரும்பாலும் பெண் கவிகளால் அரங்கு நிரம்பியிருந்தது. இத்தனை பேர்கள் எழுதும் ஆர்வத்தில் இணைந்திருக்கிறார்களே என எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது. என்னை வாழ்த்துரை பேச அழைத்தார்கள். அண்மையில் மலையாள இலக்கியத்தில் வெகுஜன நாவல்களுக்கு பெரிய சந்தை தோன்றியுள்ளது. இவ்வருடம் சாகித்ய அகாடெமியின் யுவ புரஸ்காரை மலையாளத்துக்காகப் பெற்ற அகில் தர்மஜன் அத்தகைய ஒரு சுவாரஸ்ய எழுத்தாளர் மட்டுமே. அவரது ராம் c/o ஆனந்தி எனும் நாவல் ஒரு கோடி ரூபாய் மதிப்புரிமைத் தொகையை அவருக்குப் பெற்றுத் தந்துள்ளது. இந்த விசயங்கள் அங்குள்ள இலக்கியவாதிகளிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதை கவனித்தேன். நான் அன்று ...

அஞ்சலித் தாக்குதல்

  தமிழில் சுரணை உள்ள எழுத்தாளர்களின் ஒரே வேண்டுகோள் தாம் இறந்து ஜெயமோகன் அஞ்சலிக் கட்டுரை எழுதும் நிலை வரக்கூடாது என்பதே. ரமேஷுக்கு அவர் எழுதிய அஞ்சலி அப்படியான மாபெரும் அவலம். அதில் ரமேஷின் படைப்பாற்றலைவிட உடல் நோய்மையைப் பற்றியே 99% எழுதியிருக்கிறார் - முழுக்க முழுக்க தன்னிடம் இரந்து பெற்ற ஒரு கலைஞனாகச் சித்தரிக்கிறார். தான் ஒருவருக்கு அளித்த தொண்டைக் கூட அவர் சொல்லலாம். அது அவரது தேர்வு. ஆனால் அந்த அஞ்சலிக் குறிப்பு முழுக்க ரமேஷ் ஜெயமோகனை விட ஒரு படி கீழாகவே வைக்கப்பட்டிருக்கிறார். ஒருவித படிநிலை முழுக்க உள்ளோடுகிறது. இது ஜெயமோகனுடைய மிகப்பெரிய ஆளுவை வழு - அவரால் பிறரை தனக்கு இணையாகக் காணவே முடிவதில்லை. அவர் ரமேஷுக்கு உதவியபின்னர் அவரிடம் "நான் உன் உடலுக்காக நிதியளிக்கவில்லை, உனக்குள் இருக்கும் கலைஞனுக்கே நிதியளிக்கிறேன்" என்றிருக்கிறார். அது ரமேஷை சீற்றமடைய வைக்கிறது. அதில் எந்த ஆச்சிரியமும் இல்லை. நீங்கள் ஒருவரை அப்படி உடலென்றும் கலைஞனென்றும் பிரிக்க இயலாது. அது ஒருவரைக் கடுமையாக அவமதிக்கும் செயல். என்னிடம் யாராவது வந்து "நான் உன் உடலுக்காக, உன் குடலுக்காக, உன் மொட...