குற்றத்தை செய்கிறவர்களுக்கும் அதை விசாரிப்பவர்களுக்கும் என்ன உறவு? இருவரும் ஒருவரே தானா என இந்நாவல் கேட்கிறது. பொதுவாக துப்பறியும் நாவல்களில் ஒரு நிபுணர் குற்றவாளியை கண்டுபிடிப்பார். யார் குற்றவாளி என்பதே கேள்வியாக இருக்கும். முடிவில் விடை இருக்கும். ஆனால் இந்நாவல் துப்பறியும் பணியை வாசகனிடமே ஒப்படைக்கிறது. வாசகன் குற்றவாளியை அல்லாது குற்ற மனதின் விசித்திரங்களை தேடிக் கண்டைகிறான். Pedophilia எனப்படும் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களில் ஈடுபடுகிறவர்களின் கற்பனைகளும் நியாயப்படுத்தல்களும் என்னவென இந்நாவல் சித்தரிக்க முயல்கிறது. பல நேரங்களில் நம்முடைய குறுகிய பார்வை தான் பிறரை குற்றவாளி ஆக்குகிறதா, நம் நம்பிக்கைகள், ஆசைகள், விகார எண்ணங்களை மற்றொருவரை குற்றவாளி ஆக்குவதன் மூலம் வெளிப்படுகின்றனவோ எனவும் இந்நாவல் கேள்வி எழுப்புகிறது.
மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...
கருத்துகள்