முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இருவிதமான சமூகங்கள்

                                                            (வெல்பெக்)
 

பிரஞ்சு நாவலாசிரியர் மிஷல் வெல்பெக்கின் நேர்முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன் (Louisiana Channel). அதில் அவரிடம் எப்படி எழுத்தாளராக முடிவெடுத்தீர்கள் என்று கேட்கிறார்கள். அவர் "எழுத்தாளராவதென்றால் எழுதி ஜீவனம் நடத்த முடிவது. நான் நாற்பது வயதை அடைந்தபோதுதான் என் புத்தகத்தில் இருந்து பணம் வரத் தொடங்கியது. Elementary Particles நன்றாக விற்றது. உடனே என் அலுவலக வேலையை உதறித் தள்ளிவிட்டு எழுத்தாளரானேன். ஆகையால் நான் எழுத்தாளராக வேண்டுமா என்பதை நான் தீர்மானிக்கவில்லை. மக்கள் முடிவெடுத்தார்கள்" என்கிறார். இத்தனைக்கும் வெல்பெக் ஒரு இலக்கிய எழுத்தாளர். பின்நவீனத்துவர். வணிகப் படைப்பாளி அல்லர். இந்த பிரஞ்சு இலக்கியவாதிகளை நினைத்து பொறாமை கொள்ளாமல் இருக்க இயலவில்லை. ஒரு சில ஆண்டுகளிலேயே மூன்று லட்சம் பிரதிகள் விற்றிருக்கிறது. முக்கியமாக ஐரோப்பிய நாடுகளில் 25 மொழிகளில் பிரசுரமாகி இருக்கிறது. மலையாளத்தில் கூட நாவல்கள் லட்சங்களில் விற்றதுண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறே. இப்போது அங்கும் நிலை மாறி தர்மஜன் போன்றோர் வணிக மொழியில் எழுதப்பட்ட நாவல்களே பெரும் எண்ணிக்கையில் விற்கின்றன. இலக்கியம் அங்கே ஆயிரங்களுக்குள் சுருங்கிவிட்டது. தமிழில் பிரசித்தமாகும் நாவல்கள் ஆயிரங்களிலும் மற்றவை நூற்றுக்கு சொச்சம் எண்ணிக்கையிலுமே சராசரியாக விற்கின்றன.

இதை நினைத்துப் பொறாமை கொள்ளும்போது வேறொரு எண்ணமும் எழுகிறது.
பொதுவாக இலக்கியம் வாசிக்கும் சமூகம் சுயச்சிந்தனையும் உணர்ச்சிக் கட்டுப்பாடும் பரந்துபட்ட சிந்தனையும் கொண்டிருப்பர். குறைந்தது சினிமா கவர்ச்சிக்கு ஆட்பட்டு பலியாக மாட்டார்கள். உதாரணமாக, ஒரு நடிகர் கைகாட்டினார் என்பதற்காக அறிமுகமில்லாத சின்னத்தில் நிற்கிற பெயர் தெரியாத ஒருவருக்கு வாக்களிக்க மாட்டார்கள். அவர்கள் நடிகரை ஒரு தொழிலாளியாக மட்டுமே பார்ப்பர். சிந்தனைத் திறன் இல்லாமல் வெறுமனே சம்பாத்தியத்திற்காக மட்டுமே படிக்கிறவர்கள் உள்ள சமூகத்தில்தான் நடிகரைப் பார்க்க மக்கள் பெருந்திரளாகக் கூடுவர். நடிகர் முட்டிப் போடு என்றால் முட்டிப் போடுவர். நடிகர் கடலில் குதி என்றால் பாட்டுப் பாடிக் கொண்டே குதிப்பர். நடிகரை முதல்வராக்கி கடவுள் ஆக்குவர். அந்த விதத்தில் தமிழர்களை விட பீடா வாயன்கள் என்று நாம் அழைக்கும் உ.பிகாரர்களும் பீகாரிகளும் மேல்.
படித்தும் முட்டாளாக இருப்பது மிகவும் கேவலம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...