வா.மணிகண்டனுக்கு சுஜாதா விருது கிடைத்துள்ளது. என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். அவர் சரளமாக சுவாரஸ்யமாக எழுதக் கூடியவர். சில வேளை இணையத்தில் அவர் வேண்டுமென்றே பரபரப்பான மேட்டரை எழுதுவார். சிலவேளை இலக்கில்லாமல் ஓட்டுவார். ஆனால் நம்மோடு நேரடியாக பேசும் தொனியில் சலிக்காமல் எழுதுவார். முக்கியமாக அவர் பொய் சொல்வதாக படாது.