முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாலசந்திரனும் புலிகளின் குழந்தைப் போராளிகளும்


புலிகள் குழந்தைப் போராளிகளை பயன்படுத்தியது குறித்து ஒரு கட்டுரை இன்றைய இந்துவில் வந்துள்ளது. சிங்ளப்படையினர் பாலசந்திரனை கொன்றதை கண்டிக்கும் போது மேற்சொன்ன புலிகளின் தவறையும் நினைத்துக் கொள்வோம் என்கிறார் ஆசிரியர். 


பொதுவாக இன்று இன/மத அழித்தொழிப்புகள் குறித்த வினா எழுப்பப்படும் போது மறுதரப்பு எய்கிற மாமூல் ஆயுதம் இது: நீங்களும் குற்றம் செய்யவில்லையா?

இது ஒரு முட்டாள்தனமான கேள்வி. இரு குற்றங்கள் ஒரு சரியாகி விடாது. தவறு என்றுமே தவறு தான். 
 
புலிகள் செய்தது தவறென்பதை நாம் மறுக்கப் போவதில்லை. ஆனால் அத்தவறுக்கு பதில் கூற அவர்கள் உயிருடன் இல்லை. அவர்களை குற்றவாளிக் கூண்டில் நாம் ஏற்ற முடியாது.  ஆக, அதைப் பற்றி இனி பேசுவதிலும் பொருளில்லை. 

சிங்களப்படை தளபதிகளும் ராகபக்‌ஷேவும் உயிருடன் இருக்கிறார்கள். அவர்கள் செய்த குற்றத்துக்கு தண்டனை அனுபவித்தாக வேண்டும். இது மனித உரிமைகள் மற்றும் போர்க்குற்றங்கள் சம்மந்தப்பட்ட ஒரு பிரச்சனை. முன்பு ஜெயலலிதா கூறியது போல சிலர் போர்க்குற்றங்கள் தவிர்க்க முடியாதவை என இதற்கு நியாயம் பேசுகிறார்கள். ஆனால் உலகம் முழுக்க போர்க்குற்றங்களுக்கு தலைவர்களும், ஜனாதிபதிகளும், தளபதிகளும் பதில் சொல்லி தண்டனை அனுபவித்தே இருக்கிறார்கள். யாரும் இதுவரை உலக சமூகத்தால் மன்னிக்கப்பட்டது இல்லை. ராஜபக்‌ஷேவும் ஒரு நாள் தன் பாவங்களை கழுவி ஆக வேண்டும்.

சமீபத்தில் என்னுடைய முகநூலில் காவிப்படையினர் ஏவிய மும்பை கலவரத்தைப் பற்றின காணொளி ஒன்றை பகிர்ந்திருந்தேன். அதற்கு என் இளம்பருவ நண்பன் ஒருவன் “கூட கோத்ரா வன்முறை படங்களையும் நீ பகிர்ந்து பாரேன்” என்று குறுந்தகவல் அனுப்பி இருக்கிறான். கோத்ரா உண்மையில் ஒரு மதவாத தாக்குதால் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். மும்பையில் அப்பாவி மக்களை பா.ஜ.க கொன்றதை கோத்ராவால் நியாயப்படுத்த முயல்வது படு அபத்தம். ஒரு விவாதத்தில் கண்ணுக்கு கண் கேட்பவர்கள் ஒரு பண்பட்ட நாட்டில் வாழும் தகுதி அற்றவர்கள்.

சுருக்கமாக, புலிகளுக்கும் ராஜ பக்‌ஷேவின் மனித உரிமை மீறல்களுக்கும் சம்மந்தமில்லை. புலிகள் ஆயிரம் குற்றங்கள் செய்திருந்தாலும் இலங்கை தன் கழுத்தை பலி பீடத்தில் வைத்து தான் ஆக வேண்டும்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...