முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மலையாளிகள்: எங்கும் ஒட்டாத இனம்



சமீபமாக சேலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் கேரள மாணவர்களின் கேங் சண்டையின் விளைவாக தீபக் என்று ஒரு மாணவன் இறந்து போனான். சேலத்தில் மட்டுமல்ல அருகாமை மாவட்ட கல்லூரிகளில் உள்ள மலையாளி இளைஞர்கள் கூட இந்த கேங்களில் சேர்ந்து கொள்கிறார்களாம். இதற்கு உறுப்பினர் கட்டணம் எல்லாம் உண்டு. தமிழக மாணவர்களே பண்ணாத ஒரு காரியத்தை வெளிமாநில மக்கள் எப்படி செய்ய துணிகிறார்கள் என நாம் சிந்திக்க வேண்டும். இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன.
1. மலையாளிகள் தாம் தமிழகத்தில் செய்யும் குற்றங்களால் தனிப்பட்ட வாழ்க்கை பாதிக்கப்படாமல் ஊருக்கு திரும்பி விடலாம் என நம்புகிறார்கள். 2. அவர்களிடம் உள்ள எலைட்டிஸ்டு மனநிலையும் பாதுகாப்பின்மை உணர்வும் இவ்வாறு கூட்டு சேர்ந்து சச்சரவுகளை தோற்றுவிக்க தூண்டுகின்றன.

சென்னை கிறித்துவக் கல்லூரியில் நான் படித்த காலத்தில் மலையாளிகளின் அரசியலை அருகில் இருந்து கவனித்திருக்கிறேன். அக்கல்லூரியின் வரலாற்றில் முதன்முதலாக அவர்கள் தமிழர்/தமிழர் அல்லாதோர் என பிரிவினை உண்டாக்கி அரசியல் செய்து இரண்டு வருடங்களுக்கு மேலாக நெருக்கடி நிலையை தோற்றுவித்தார்கள். மாணவர் பிரிவினையின் போது  சில தமிழ் மாணவர்களும் மலையாளிகளின் பக்கம் சேர்ந்து கொண்டார்கள். அவர்களுக்கு மலையாளிகள் பண்பாட்டு அளவில் உயர்ந்தவர்கள் என்கிற தாழ்வு மனப்பான்மை இருந்தது. மலையாளிகளின் பொதுவான அரசியல் பாணியும் உயர்வு மனப்பான்மையும் பிராமணர்களை நினைவுபடுத்துவது.

இது மலையாளிகள் பற்றின எனது மனச்சித்திரம்.

 1. மலையாளிகள் தாம் இருக்கிற இடத்தின் பண்பாட்டோடு பொருந்திப் போக மாட்டார்கள்.
2. ஊசி முனை இடத்திலும் கூட்டம் சேர்த்து கலகம் செய்வார்கள்.

3. காலை முழித்த உடனே யாரை வம்பில் மாட்டி விடலாம் என திரிவார்கள்.

4. பொதுவாக மலையாளிகளை மலையாளிகளே நம்ப மாட்டார்கள்.

5. என்னதான் பிரச்சனைகள் வந்தாலும் அதனால் தமக்கு சிக்கல் வராமல் பார்த்துக் கொள்வார்கள். அதாவது வன்முறை, சச்சரவுகள் நிகழ்ந்தால் அவர்கள் பின்னணியில் மட்டும் தான் இருப்பார்கள். உணர்ச்சிவசப்படும் தமிழ் மாணவர்கள் தாம் அடி வாங்கி அவஸ்தைப்பட்டு சட்டபூர்வ நடவடிக்கைகளுக்கும் ஆளாவார்கள்.

6. தமிழகத்தில் கன்னடியர், தெலுங்கர்கள் முன்னூறு வருடங்களுக்கு மேலாக வந்து வாழ்ந்து பண்பாட்டில் கரைந்து விட்டார்கள். சரளமாக தமிழ் பேசி எழுதி வாழ்கிறார்கள். ஆனால் மலையாளிகளை இந்த பட்டியலில் எளிதில் சேர்க்க முடியாது. அவர்கள் தம்மை ஒருக்காலும் தமிழர்களாக கருத மாட்டார்கள். தமிழர்களை கீழ் சாதியாகவே நினைப்பார்கள். இங்கு பிறந்து வளர்ந்த சில மலையாளிகளை விதிவிலக்கு எனலாம். குமரி மாவட்ட மலையாளிகள் இடைநிலையில் உள்ளவர்கள். கலவை அடையாளம் கொண்டவர்கள்.

பொதுவாக கேரள கலாச்சாரத்துக்கு பல உயர்வுகள் இருந்தாலும் அம்மாநில மக்களின் பண்பாட்டு ஒவ்வாமை அவர்களின் ஒரு அடிப்படையான உளவியல் சிக்கல் என நினைக்கிறேன். அவர்களால் ஒரு புது சூழலில் உள்ள நன்மைகளை சுவீகரிக்க முடியாது. தம் இயல்பு தவிர்த்த எதுவுமே அவர்களில் ஒட்டாது. கேரளாவை சேர்ந்த மணியன்பிள்ளை என்று ஒரு திருடன் தமிழகத்தில் வந்து திமுகவில் சேர்ந்து முக்கிய கீழ்நிலை பொறுப்பு ஒன்றை வகித்து இங்கு தொழில் செய்து சில காலம் வாழ்ந்தான். பின்னர் அவன் எழுதிய சுயசரிதையில் இது பற்றி குறிப்பு உள்ளது. மணியன்பிள்ளைக்கும் தமிழ்தேசிய கட்சியான திமுகவுக்கு என்ன சம்மந்தம்? இது தான் அடிப்படையான மலையாளிப் பண்பு. அவனுக்கு திமுக என்றால் என்ன என்று கூட அக்கறை இருக்காது. ஆனாலும் இங்கு வந்து ஒரு பிரதான கட்சியில் வெறுமனே ஒட்டி இருந்து அதனை பயன்படுத்திக் கொள்வான். பிறகு தப்பி பறந்து புது ஊருக்கு போய் விடுவான்.

கன்னடியர், தெலுங்கர்களை விட மலையாளிகள் இங்கு அதிகமாக வெறுக்கப்படுபதற்கு அவர்களின் இந்த cultural apathy தான் முக்கிய காரணம்.

கருத்துகள்

ப.கந்தசாமி இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் கருத்துகளை ஒத்துக்கொள்கிறேன்.
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
சரியாக கூறினீர்கள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...