Skip to main content

Posts

Showing posts from May, 2015

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

மாணவர்களும் அரசியலும்

ஐஐடி அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதை ஒட்டி நடக்கும் சர்ச்சை மாணவர் கருத்துரிமையை மையம் கொண்டது. மாணவர்களுக்கு அரசியல் பேச முழு உரிமை வேண்டும் என பலரும் கோருகிறோம். கடந்த சில பத்தாண்டுகளில் தொழில்நுட்ப கல்வியும், தனியாய் கல்வி நிறுவனங்களும் பெருகி, கலை, அறிவியல் படிப்புகள் பலவீனப்பட்ட பின் மாணவர் அரசியலும் முளையில் கருகிப் போய் விட்டது. ஆனால் இதைப் பேசுகிற வேளையில் மாணவர்கள் அனைவரும் மிகுந்த அரசியலுணர்வுடன் இருப்பதாகவும் அரசும் பிற நிறுவனங்களும் இணைந்து அவர்களை முடக்குவதாகவும் நம்புவதும் மிகை தான்.

அம்பேத்கர், பகவத் கீதை மற்றும் ஓஷோ

அம்பேத்கரின் “கிருஷ்ணரும் அவரது கீதையும்” எனும் கட்டுரை படித்தேன். முதலில் மொழி பற்றி. அவரது மொழியின் சில அம்சங்கள் மிகவும் வியப்பூட்டுகின்றன. குறிப்பாய் அதன் சமகாலத்தன்மை. இன்றைய எழுத்தின் குணங்களாய் நாம் காணும் நேரடித்தன்மை, விவாத வடிவம், நேரடியாய் வாசகனை அழைத்து உரையாடும் தன்மை, அபாரமான தெளிவு, தயங்காமல் எதிர்கருத்தை பதிவு செய்வது, எளிமை, லௌகீக பார்வை இவை அனைத்தும் அம்பேத்கரிடம் உள்ளன. பெயரை மாற்றி பிரசுரித்தால் நிச்சயம் இணையத்தில் புழங்கும் ஏதோ ஒரு இளைஞன் எழுதியது எனத் தான் தோன்றும்.

தமிழில் மெட்டாசினிமா?

”ஜிகிர்தண்டாவை” எல்லாம் மெட்டாசினிமா என்கிறார்கள். ஏதோ மெட்டாசினிமாவை நாம் புதிதாய் கண்டுபிடிக்க வேண்டி இருந்தது போல. பல வருடங்களாய் நம் மசாலா சினிமாவில் மெட்டா சினிமா மிக வலுவாய் இருந்து கொண்டு தான் இருந்தது. மெட்டா சினிமா, பின் நவீனத்துவம் எல்லாம் அறியாமல் இதை மக்கள் ரசித்து கைதட்டிக் கொண்டும் தான் இருந்தார்கள். ஆனால் இந்த உண்மையை நான் சற்று தாமதமாய் ஒரு நண்பருடன் ராயப்பேட்டையில் ஒரு ரோட்டோரக்கடையில் தந்தூரி சிக்கனை எச்சில் வழிய கடித்துக் கொண்டிருந்த போது தான் உணர்ந்தேன்.

அம்பையின் பெண்ணியப் பார்வையின் சிக்கல்கள்

“சிறகுகள் முளைக்கும்” 17 வருடங்களுக்கு முன்பு காலச்சுவடில் வெளிவந்த அம்பையின் ஒரு பெரிய பேட்டி. மனுஷ்யபுத்திரனும் கண்ணனும் சேர்ந்து எடுத்தது. சுவாரஸ்யமும் சரளமும் கொண்டது. ஒரு பாதி அம்பையின் வாழ்க்கைக்கதை, இன்னொரு பாதி அவரது இலக்கிய அபிப்ராயங்கள். இப்பேட்டியை காலச்சுவடு பெண் படைப்புகள் நூலில் காணலாம்.

இந்த காற்று

சேற்றில் குதித்து விளையாடும் குழந்தை போல இக்காற்று என் மேல் புரள்கிறது மேஜை, அதன் மேல் புத்தகங்கள் கோப்பை நான் நறுக்க வைத்திருக்கும் வெங்காயம், பூண்டு ஒவ்வொன்றையும் தூக்கி அடிக்கிறது கொடியில் காயும் என் சட்டைக்குள் புகுந்து தன் பருத்த உடம்பை தனக்குத் தானே காட்டி சிரித்துக் கொள்கிறது தூங்கும் உன் கூந்தலை அள்ளி முகத்தில் இட்டு மூடி உதடுகள் தெரியும் படி சில இழைகளை மட்டும் விலக்குகிறது பறக்க இயலாமல் ஒரு சிறு வண்டு தவிக்கிறது ஜன்னல் சட்டத்துக்கு பின்பக்கமாய் சாய்வாய் இறகுகளை துடித்தபடி எட்டிப் பார்க்கிறது ஜன்னல் திரை முந்தானை போல பறக்கிறது எழுந்து அருகில் போக தொங்கும் வானம் வெளிச்சம் படாது காற்றுப்படாது வெளிறிய சருமம் போல கண்ணை கூசச் செய்கிறது உள்ளே நடந்தபடி வெம்மை மீதமிருக்கும் ஒவ்வொரு இடமாய் தொட்டுப் பார்க்கிறேன் கற்பூரம் தீபம் தொட்டு கண்ணில் ஒற்றுவது போல. காகிதக் கற்றைகள் போல் பறந்து பறந்து அமர்கிறது வெம்மை வண்டு வெளியே போய் விட்டிருக்கிறது

பெரியாரும் பிராமணர்களும்

-      தி.கவின் தாலியறுப்பு நிகழ்வை ஒட்டி இந்துத்துவர்கள் பெரியார் சிலைக்கு மூத்திர அபிசேகம் செய்து பரபரப்பை கிளப்பினர். அன்றைய நாள் முழுக்க முகநூலில் நண்பர்கள் தொடர்ச்சியாக பெரியாரை புகழ்ந்தும் அவரது மேற்கோள்களை நினைவுகூர்ந்தும் டைம்லைனை ஒரு பக்கம் நிரப்ப இன்னொரு பக்கம் பெரியார் எதிர்ப்பாளர்களும் சின்ன அளவில் தம் கோபத்தை காட்டினர். இரண்டாவது தரப்பை சேர்ந்த என் பிராமண நண்பர் ஒருவர் மிக மோசமான வசை மொழியில் பெரியாரை தாக்கி என் முகநூல் பக்கத்தில் பின்னூட்டம் இட்டார். அவர் படித்து ஒரு உயர்பதவியில் உள்ள முதிர்ந்த மனிதர். ஏன் இவ்வளவு ஆத்திரப்பட்டு பண்பாடின்றி பேசுகிறார் என எனக்கு வியப்பேற்பட்டது. தான் வாழ்வின் பெரும்பகுதி திகவினரின் இந்து மத தூஷணைகள் மற்றும் பிராமண சமூக தூற்றல்களை கேட்டு வளர்ந்தவன் என்பதால் தன்னுடைய வலி என்பது ஆழமானது என்றார். பொறுக்க முடியாமல் அவரது கோபமும் எரிச்சலும் வெளியாகி விட்டதாய் நியாயப்படுத்தினார். பெரியார் மீதான அவமதிப்பு, தாலி அறுப்பு, பண்பாட்டு விசயங்களில் தொடர்ந்து தமிழகத்தில் இந்துத்துவர்கள் உருவாக்கு சலசலப்புகள் ஆகியவை தவிர்த்து எனக்கு மற...

குட்டிப்பையன் உணவருந்துகிறான்

மூன்று மணி போல ஓட்டல் பணியாளர்கள் ஒன்றாய் மேஜையை சுற்றி இருந்து உணவருந்தினர். பத்து வயது மதிக்கத்தக்க வடகிழக்கு மாநில சர்வர் பையன் ஒரு சின்ன தட்டில் கொஞ்சம் கெட்டிப்பட்ட சுடுசோறும் அதில் பருப்பும் ஊற்றி அமர்ந்தான். அடிக்கடி சூடு தாளாமல் விரல்களை உதறியபடி அதை விண்டு விண்டு ஆர்வமின்றி தின்று கொண்டிருந்தான். தன் நண்பனிடம் கண்காட்டி ஏதோ நகைச்சுவையை பகிரும் விளையாட்டு ஆர்வம். அவன் அம்மா பார்த்தால் சரியாய் சாப்பிடாமல் நோஞ்சானாய் போகிறாயே என கவலை கொள்ளலாம். எனக்கு ரசிக்கவே தோன்றியது.

நூலகமும் கழிப்பறையும் சாருவும்

அம்மா வருகையை ஒட்டி குவிந்திருந்த கரைவேட்டிகளில் சிலர் கோட்டூர்புரம் அண்ணா நூலகத்திற்குள் கழிப்பறை பயன்படுத்த வந்திருந்ததை பார்த்தேன் . கூட இருந்த ஒருவர் கட்சிக்காரர்களின் வாகங்களை பார்க் செய்வதற்கும் இன்று நூலக வளாகத்தைதான் பயன்படுத்தினார்கள் என்றார் . முன்பு நூலகத்தை ஆஸ்பத்திரி ஆக மாற்ற ஜெயலலிதா முயன்றதை ஒட்டி நடந்த சர்ச்சையில் சாரு தமிழகத்துக்கு நூலகங்களை விட கழிப்பறைகளே அதிகம் தேவை எனக் கூறியது வேறு நினைவுக்கு வந்து தொலைத்தது . அதிமுக கரைவேட்டிகளை மிக நன்றாய் புரிந்து கொண்டவர் சாரு .

“ரசிகன்” – அபத்தங்களின் நாயகன் - பா.சரவணன்

மனிதர்களுக்கும் வாழ்க்கைக்கும் இடையே நடக்கும் சூதாட்டத்தில் ‘ ரம்மி ’ சேர்ந்துவிடாதபடி மனிதர்கள் வாழ்க்கையையும் , வாழ்க்கை மனிதர்களையும் கலைத்துப்போட்டுக்கொண்டே இருக்கின்றன இந்த நாவலில் .

அம்மா அமளிதுமளி

அம்மாவின் கவர்னர் சந்திப்பை ஒட்டி சின்னமலையில் ஆரம்பித்து அடையார், கோட்டூர்புரம் வரை அமளிதுமளி தான். வட்டச்செயலாளர்களும், நிர்வாகிகளுமாய் வேன்களில் அழைத்து வரும் மக்கள், வேன் மீது கட்டப்பட்ட ஸ்பீக்கர்கள் முழங்கும் எம்.ஜி.ஆர் பாடல்கள், பேண்ட்மேளம், அங்கங்கே சிறுமேடை அமைத்து அபஸ்வரமாய் பாடும் புரட்சித்தலைவி கானங்கள், வழியெங்கும் பதாகைகள், சுவரொட்டிகள், இரட்டை இலை தோரணங்கள் இப்படி விழாக்கோலம் பூண்டிருந்தது. நேற்றிரவு அவ்வழி வீடு திரும்பும் போது நிறைய போலிசார் குவிக்கப்பட்டிருந்தது பார்த்தேன். நாளை இப்பாதையில் போக்குவரத்தை உறைய வைத்து விடுவார்கள் என எதிர்பார்த்தேன். ஆனால் போக்குவரத்து பெரும்பாலும் இயல்பாகவே இருந்தது. அதிமுகவினரும் சாலையில் நாணயங்கள் போல் இறையாமல் ஒழுக்கமாகவே நடந்து கொண்டனர். கிண்டியின் சிறு தெருக்களில் கழகத்தினர், சாதிக் கட்சியினர் கூட்டம் போட்டாலும் வாகனங்களை நடுசாலையில் நிறுத்தி, பாதையை மறித்து உயிரை வாங்குவார்கள். ஆனால் நகரத்தின் பிரதான பகுதி என்பதாலோ ஏனோ கட்சிக்காரர்கள் சுய ஒழுக்கத்துடன் நடந்து கொண்டார்கள்.

குவளைக்கண்ணன் மறைவு

கவிஞர் குவளைக்கண்ணன் காலமானார் . ஆழ்ந்த இரங்கல்கள் . அவருடைய கவிதைகள் சிலவற்றை படித்திருக்கிறேன் . மூன்று கவிதைத் தொகுப்புகள், நீட்சேயின் இவ்வாறு சொன்னான் ஜாருதுஷ்டிரன் போன்ற முக்கியமான நூல்களை வெளியிட்டிருக்கிறார். அவரது கவிதைகள் பெரும்பாலும் தேடல் பற்றியவை. அபியைப் போன்று அரூபக் கவிதைகளும் அதிகம் எழுதியவர். கீழ்வருவது போன்ற அழகான படிமங்களும் எழுதியிருக்கிறார். கிறக்கம் காற்றாடி முட்டி முட்டிக் காற்றைக் குடிக்க, வெளி கிறங்கலாயிற்று.

பட்டியல்

“பட்டியல்” என்றொரு மாபியா படம் முன்பு வந்தது. வாடகைக் கொலையாளிகளான ஆர்யா மற்றும் பரத்துக்கு கொச்சின் ஹனீபா ஒரு பட்டியல் அளிப்பார். அதில் உள்ளவர்களை இவர்கள் போட்டுத் தள்ளுவார்கள். கடைசியில் இந்த பட்டியலில் ஆர்யா மற்றும் பரத்தையே சேர்த்து அவர்களையும் போட்டுத் தள்ளுவார்கள். பட்டியல் தூக்கினவர்கள் பட்டியலாலே சாகிறார்கள். தமிழ் இலக்கியத்திலும் பட்டியல்கள் இது போன்ற மாபியா பண்பாட்டை ஒரு பக்கம் வளர்க்கிறது. ஆனாலும் பட்டியலை சிலநேரம் தவிர்க்காமல் இருக்க முடிவதில்லை.

நாம் நினைப்பது

உன்னை நினைத்து அட என்ன நினைத்தேன் என நினைத்து முடித்து முடிப்பதற்குள் நீ வந்து நிற்கிறாய் விரல் நுனி பற்றியபடி ஒரு நல்ல சேதி சொல்லுகிறாய் இதைச் சொல்லவே இவ்வளவு தூரம் வந்தேன் என்கிறாய் உன்னைத் தான் நினைத்திருந்தேன் என்றேன் நெகிழ்ந்து கையைப் பற்றிக் கொண்டாய் இப்போதெல்லாம் உன்னை நினைப்பதே இல்லை என்றாய்

போகன் சங்கர்

கடந்த ஐந்து வருடங்களில் கவனம் பெற்ற எழுத்தாளர்களில் போகன் சங்கர் ஒரு நட்சத்திரம் . பொதுவாக, குழந்தைக்கு சோறூட்டும் அம்மாக்களை போன்றவர்கள் கவிஞர்கள். அப்படியான ஒரு அம்மா என்னிடம் சமீபத்தில் சொன்னார், குழந்தை பெற்ற பெண்கள் குழந்தைக்கு ஊட்டி மீதமாகிற உணவை சாப்பிட்டே குண்டாகி விடுகிறார்கள் என்று. பெரும்பாலான நம் கவிஞர்கள் தம் கவிதைகளையும் சுற்றி உள்ளோர் கவிதைகளையும் படித்து படித்தே மூச்சுத்திணறி விடுகிறார்கள். அவர்கள் நாவல், கட்டுரை, தத்துவம், அரசியல், சமூகவியல், வரலாறு என நகர மாட்டார்கள் (விதிவிலக்குகள் உண்டு). போகன் அப்படி அல்ல. அவரது பரவலான தீவிரமான வாசிப்பு வியப்பூட்டுவது. மன அழுத்தம் பற்றின Noonday Demon எனும் தடிமனான நூலை வாசிக்க தொடங்கினேன். எதேச்சையாய் ஒரு நூலகத்தில் கண்டெடுத்த நூல் அது. மிக முக்கியமான அடர்த்தியான பதிவு. தன்வரலாறும் உளவியலும் கோட்பாடுகளுமாய் மன அழுத்தத்தை ஆராயும் ஒரு சாதனை நூல். ஒரு நாள் எதேச்சையாய் போகன் அந்நூலைப் பற்றி முகநூலில் போகிற போக்கில் குறிப்பிட்ட போது ஆச்சரியமானேன். ஆனால் வாசிப்பதை அப்படி முழுங்கி எழுத்தில் மேற்கோள்களாய் துப்ப மாட்டார். சு...

வாசக சாலையின் முழுநாள் இலக்கிய அரங்கு

நேற்று பனுவல் புத்தகக் கடை அரங்கில் நடந்த வாசக சாலையின் முழுநாள் இலக்கிய அரங்கு மிகவும் நிறைவாக பயனுள்ளதாக அமைந்தது. எழுபது பேருக்கு மேல் கூட்டம். உட்கார இடமின்றி சிலர் கீழே அமர்ந்திருந்தனர். ஏ.ஸி திணறி மூச்சு விட்டதால் பார்வையாளர்களும் பேச்சாளர்களும் மூச்சு விட திணறினர். ஆனாலும் பார்வையாளர்கள் ஆர்வமாய் முழுநாளும் இருந்து கேட்டனர். இது ஒரு வித்தியாசமான பார்வையாளர் கூட்டம். கணிசமாய் இளைஞர்கள். அதிகம் தமக்குள் விவாதிக்கவோ அடிக்கடி எழுந்து வெளியே டீ, சிகரெட்டுடன் தனிக்கூட்டம் போடவோ இல்லை. அதோடு பங்களிப்பாளர்களின் பேச்சுக்களும் ஆர்வமூட்டும்படியாய் செறிவாய் இருந்தன. மாலன் ஏற்கனவே தனது இணையதளத்தில் எழுதியிருந்த “மூன்றாம் மரபு” கட்டுரையை ஒட்டி பேசினார். இன்றுள்ள எழுத்து சமூகவியல், வரலாறு, தன்வரலாறு, அரசியல் என முழுக்க மாறியுள்ள நிலையில், எழுத்தாளன் பிரதியை முன்வைக்காமல் தன்னை முன்வைத்து பேசுவது அதிகமாகியுள்ளது. எழுத்தாளன் இறந்து விட்டான் எனும் ரொலாண்ட் பார்த்தின் கூற்று தமிழில் இனி ஏற்கத்தக்கது அல்ல என்பது அவரது மையவாதம். மிக முக்கியமான ஒரு அவதானிப்பு இது. இதை வைத்தே ஒரு தனி கருத்தரங்கு...

ரோஹித் ஷர்மாவின் அணித்தலைமை

நேற்றைய ஐ . பி . எல் ஆட்டத்தில் மும்பை அணிக்காக ரோஹித் ஷர்மாவின் தலைமை அற்புதம் . குறிப்பாய் கள அமைப்பு . 170 இலக்கை விரட்டிக் கொண்டிருந்த கொல்கொத்தா அணியின் சூர்யகுமார் யாதவுக்கு கால் பக்கம் பந்தை flick செய்து சிக்ஸர் அடிக்கப் பிடிக்கும் . இதை உணர்ந்து ரோஹித் சரியாக டீப் மிட்விக்கெட்டில் தடுப்பாளரை வைத்திருந்தார் . யாதவ் அப்பொறியில் கச்சிதமாய் வீழ்ந்தார் . அதே போல் மலிங்காவின் ஓவரில் மெதுவான பந்துகளை கணித்தாட முடியாமல் பியுஷ் சாவ்லா திணறுவதைக் கண்ட அவர் ஆடுதளத்தின் மெத்தனத்தன்மையை கணித்து இறுதி ஓவரை பகுதிநேர மெதுவேக வீச்சாளர் கயரன் பொலார்டுக்கு அளித்தார். முதல் பந்தில் யூசுப் பதான் வெளியேற நான்கு பந்துகளில் ஒன்றைக்கூட சாவ்லாவால் அடிக்க இயலவில்லை. ஒரே ஒரு பந்து பந்தின் கீழ்விளிம்பில் பட்டு மோசமான களத்தடுப்பு காரணமாய் நான்கு ஓட்டங்கள் போனது தவிர வேறு பாதிப்பு இல்லை.