முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ரோஹித் ஷர்மாவின் அணித்தலைமை

Image result for rohit sharma ipl

நேற்றைய ஐ.பி.எல் ஆட்டத்தில் மும்பை அணிக்காக ரோஹித் ஷர்மாவின் தலைமை அற்புதம். குறிப்பாய் கள அமைப்பு. 170 இலக்கை விரட்டிக் கொண்டிருந்த கொல்கொத்தா அணியின் சூர்யகுமார் யாதவுக்கு கால் பக்கம் பந்தை flick செய்து சிக்ஸர் அடிக்கப் பிடிக்கும். இதை உணர்ந்து ரோஹித் சரியாக டீப் மிட்விக்கெட்டில் தடுப்பாளரை வைத்திருந்தார். யாதவ் அப்பொறியில் கச்சிதமாய் வீழ்ந்தார். அதே போல் மலிங்காவின் ஓவரில் மெதுவான பந்துகளை கணித்தாட முடியாமல் பியுஷ் சாவ்லா திணறுவதைக் கண்ட அவர் ஆடுதளத்தின் மெத்தனத்தன்மையை கணித்து இறுதி ஓவரை பகுதிநேர மெதுவேக வீச்சாளர் கயரன் பொலார்டுக்கு அளித்தார். முதல் பந்தில் யூசுப் பதான் வெளியேற நான்கு பந்துகளில் ஒன்றைக்கூட சாவ்லாவால் அடிக்க இயலவில்லை. ஒரே ஒரு பந்து பந்தின் கீழ்விளிம்பில் பட்டு மோசமான களத்தடுப்பு காரணமாய் நான்கு ஓட்டங்கள் போனது தவிர வேறு பாதிப்பு இல்லை.


ரோஹித்திற்கு ஆட்டத்தின் போக்கு பற்றின ஒரு சரியான புரிதல், ஒருவித ஆட்ட உணர்வு, புத்திசாலித்தனம் எல்லாம் உள்ளது. வேகமாய் முடிவெடுக்க முடிகிறது. புத்திசாலித்தனமாய் களம் அமைக்கிறார். மூத்த வீரர்களை ஒருங்கிணைப்பதும் சிறப்பு. தேவையின்றி பதற்றமாகிறார் என்பது மட்டும் தான் சிறு குறை. எதிர்காலத்தில் இந்திய அணித்தலைவராக அவருக்கு நிச்சயம் வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம்.


இவ்வளவும் எழுதுகிற போதும் நேற்றைய ஆட்டத்திற்கு சூதாட்ட சம்மந்தமுள்ளதோ என ஐயம் எழாமலும் இல்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இன்று அவளது ஐம்பதாவது திருமண நாளாக இருக்க வேண்டும் (ஆன் கார்ஸன் கவிதைகள் 3)

  ரொமானிய சுவரை நோக்கி உரையாற்றுகிறது குளிர் - ஆன் கார்ஸன் - தமிழில் ஆர். அபிலாஷ் ஒளி மட்டற்று ( சிறைப்படுத்தப்பட்டது ) மேலும் , நிழல்கள் விழக் காத்திருக்கின்றன தலைமறைப்புகளைப் போல . மூளை தட்டுகிறது இருமுறைகள் உப்புக்காக .   WOULD BE HER 50TH WEDDING ANNIVERSARY TODAY Cold orates upon a Roman wall. Light is extreme (caught) and shadows wait like hoods to drop. Brain taps twice for salt. Was it Ovid who said, There is so much wind here stones go blank. (Excerpt From Decreation, Anne Carson) வாசகக் குறிப்பு : இதுவும் ஒரு கீறல் ஓவியம் போன்ற கவிதைதான் . விளக்கக் குறிப்புகளோ விவரணைகளோ இல்லை . கதையாடல் கவிதையென்றாலும் யார் , என்ன , எப்படி , ஏன் ஆகிய தகவல்களை நாமே அனுமானிக்க வேண்டும் . இப்போது ஒவ்வொரு சொல்லும் ஒரு உருவகமாகிறது ( ஏனெனில் தலைப்பில் உள்ள திருமண பந்தம் குறித்த விபரம் இதைக் குறியீடாக்காமல் தடுக்கிறது ). ஐம்பதாவது திருமண நாளெனில் அவருக்கு வயது 70 இருக்குமா ? அவர் ரொமானிய வரலாற்றுச் சின்னங்களைக் காண வந்...

இருளின் காலம்

ஊடகவியலாளர்களைக் கொத்துக்கொத்தாகக் கைது பண்ணுகிறார்கள் எனும்போதே நெருக்கடி நிலை ஆரம்பித்துவிட்டது ஊர்ஜிதம் ஆகிறது. அதுவும் போராட்டங்களைப் பதிவு பண்ணுவதற்குப் போனவர்களை. ஒட்டுமொத்தமாக போராடுபவர்களைத் தூக்கிச் சிறையில் வைப்பது, அவர்களைக் குறித்த விபரங்கள், காணொளிகள், செய்திகள் வெளிவராமல் பார்ப்பதே பாஜக அரசின் திட்டம். இனி அடுத்து என்னவெல்லாம் செய்வார்கள்? எதிர்க்கட்சிகளின் செயல்பாட்டாளர்களை கண்ட இடத்தில் கைது, மறைமுகமாக பல ஊடகங்கள் முடக்கம், மக்கள் சில பகுதிகளில் பயணிக்க மறைமுகத் தடை, எந்தெந்த விசயங்கள் ஊடகங்களில் பேசப்படலாம் என்பதற்கான மறைமுக அறிவுறுத்தல் எனப் போகும். முடிவில் எதிர்க்கட்சிகள் தாம் ஆளும் மாநிலங்களில் போராடினால் ஆட்சிக் கலைப்பு நடக்கும். ஆளுநர் ஆட்சி வரும். இப்போதைக்கு நீதிமன்றங்கள் பிணை வழங்குவதால் சிறிது அவகாசம் போராளிகளுக்கும் எதிர்க்கட்சியினருக்கும் கிடைத்துள்ளது. வெளிவர முடியாத சட்டங்களில் கைது நடக்கும்போது நிலைமைத் தீவிரமாகும். ராகுல் காந்தி இப்போராட்டங்களை முன்னறிந்து பாராளுமன்றத்தில் பேசியது நினைவுக்கு வருகிறது. அதாவது கரப்பான்கள் தோன்றும் முன்பே இப்படியான போராட்ட...

தமிழ்நாடு ஏன் க்யானேஷ் குமாருக்கு எதிராகப் பொங்குவதில்லை?

  சினிமா போதையின் பிரச்சினைகளைப் பற்றி தமிழ்நாட்டு எழுத்தாளர்களே தொடர்ந்து அழுது புலம்பி சபித்து சமாதானமாகி இருக்கிறார்கள் இதுவரை. ஆனால் இப்போது முதன்முறையாக வெகுமக்கள் இடையில் சினிமா வெறியர்கள் அரசியல்மயமாவதற்கு எதிர்ப்பு வந்திருக்கிறது. குறிப்பாக 40-70 வயதுக்கு உட்பட்டோர் பேசுவதைக் கேட்டால் புரியும். அரசியல் நோக்கர்களும் இதனால் கசப்படைகிறார்கள். தமிழ்நாட்டினர் எப்படி மூளைச்சலவை செய்யப்பட்டனர் என திருப்பூர் குணாவும், ஜீவாவும், ஆர்.கே. சண்முகவேலும் சேர்ந்து ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார்கள் ("டிஜிட்டல் போதையில் நாம் யாரையும் தேர்ந்தெடுக்கவில்லை"). அவர்கள் சமூகவலைதளச் செயல்பாடுகளும் தரவுப் பகுப்பாய்வுத் தொழில்நுட்பமும் விஜய்யின் வெற்றிக்கு எப்படிப் பயன்பெற்றன என்றே பிரதானமாகப் பேசினாலும் விஜய்யின் சினிமாப் புகழ் அவரை வைத்து நடந்த டிஜிட்டல் பிரச்சாரத்துக்கு அடிப்படை என்பதை அவர்கள் மறுக்கவில்லை. கடந்த தேர்தலின் போதிருந்தே 'தற்குறி' எனும் சொல் இதற்கென மக்களால் பரவலாகப் பயன்படுத்தப்படுவதையும் பார்க்கிறோம். 'தற்குறி' சினிமா ரசிக மனநிலை, சினிமா மந்தைத்தனம் ஆகியவற்றை...