முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

“ரசிகன்” – அபத்தங்களின் நாயகன் - பா.சரவணன்


மனிதர்களுக்கும் வாழ்க்கைக்கும் இடையே நடக்கும் சூதாட்டத்தில்ரம்மிசேர்ந்துவிடாதபடி மனிதர்கள் வாழ்க்கையையும், வாழ்க்கை மனிதர்களையும் கலைத்துப்போட்டுக்கொண்டே இருக்கின்றன இந்த நாவலில்.

இரண்டுக்கு மேற்பட்ட இளைஞர்கள் வரும் இடங்கள் மிகத் துள்ளலுடன் எழுதப்பட்டிருக்கின்றன. பெண்கள் வேறுபட்ட பின்ணணியும் குணங்களும் கொண்டவர்களாகவும் , சிக்கலான நேரங்களில் தங்கள் கதாபாத்திரத்தின் தன்மைக்கேற்ப நடந்துகொள்பவர்களாகவும் இருக்கின்றனர்.
மதம்மாறித் திருமணம் செய்தல், சரிவிலிருப்பவனைக் காதலித்தல் எனச் சிலசினிமாத்தனமானசூழல்கள் மிகைப்படுத்தப்பட்ட உணர்ச்சிகளின் பின்னால் ஓடாமல், நிதானத்துடன் நகர்வது குறிப்பிடத்தக்கது .சாதிக்கின் சிறு பத்திரிகை அனுபவம், ‘கதைசொல்லிசங்கரின் பத்திரிகை அனுபவம் போன்ற இடங்கள் தகவல்களின், செய்திகளின் தொகுப்பாக மட்டும் நின்றுவிடுகின்றன. போதையுடன் நிகழும் சில உரையாடல்கள் நீண்டுகொண்டே போவது போன்ற உணர்வைத் தருகின்றன.
ரசிகர் மன்றச் செயல்பாடுகளில் நடிகரின் (ரஜினி) பெயரைப் பயன்படுத்தியிருப்பதை (நடிகரைப் பற்றி எதிர்மறையாக அதிகம் சொல்லாவிட்டாலும்) துணிச்சலான செயல் என்றே சொல்லவேண்டும்.
இடதுசாரிகள் , சிறுபத்திரிகைச் சூழல் குறித்த பல இடங்கள் திட்டமிடப்பட்டு எழுதப்பட்டிருக்கின்றன ( Premeditated shot). அவ்விடங்களில் பந்துபௌண்டரிக்குச் செல்லவில்லை.
நாவலின் வடிவத்தில் நண்பர்களில் வாழ்க்கை , இடதுசாரி/சிறுபத்திரிகை அறிவுச்சூழலின், மனிதர்களின் வீழ்ச்சி , தற்கால ஊடகங்களின் தாக்கம் என்ற மூன்று கதைகள்கொலாஜ்செய்யப்பட்டிருப்பது போல் இருக்கிறது. இது நாவலுக்கு பலமாகவும், சில இடங்களில் பலவீனமாகவும் ஆகிறது. அதிர்ச்சியூட்டக்கூடிய சில இடங்களில்டரண்டினோபடம் பார்ப்பதைப் போன்ற உணர்வு ஏற்படுகின்றது.
மக்களை விட்டு விலகி மேட்டிமைத்தனமான இதிகாசங்கள்,இற்றுப்போன சுயபுனைவுகள், பாவனைகள் மிகுந்த உணர்வுகள் பொங்கி வழியும் சொற்குவியல்களின் பின்னால் மூத்த தலைமுறை (உரைநடை எழுதும் ) இலக்கியவாதிகள் சிலர் திரியும்( Pun intended!) நிலையில், கடந்த ஐந்தாண்டுகளில் தன்னைச் சுற்றியுள்ள மக்களை , வாழ்க்கையைப் பேசும் புதிய (‘இளம்அல்ல) எழுத்தாளர்களின் பல நாவல்கள் வெளிவந்திருக்கின்றன. அந்த வரிசையில் மனிதர்களின் சீரழிவின் வாயிலாக சமூகத்தின் வீழ்ச்சியைப் புனைய முயன்றிருக்கிறது ஆர்.அபிலாஷ் எழுதியரசிகன்’.
ரசிகன் (நாவல்) – ஆர்.அபிலாஷ் , உயிர்மை வெளியீடு


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.