இம்மாத அம்ருதாவில் ஷங்கர்ராமசுப்பிரமணியன்
விக்கிரமாதித்யன் பற்றி எழுதியுள்ள கட்டுரை “மலை மீது ஓய்வு கொள்ளும் கவிஞன்” சிறப்பானது.
மிக நளினமான, அழகான மொழியில் ஷங்கர் விக்கிரமாதித்யனை அலசி மதிப்பிடுகிறார். அவரை தமிழ்
மரபின் கடைசி கவி என்கிறார். நவீனத்துவத்துக்கும் மரபுக்கும் இடையில் ஒரு திரிசங்கு
நிலையில் அவர் உள்ளதை குறிப்பிடுகிறார். கவிதை அவருக்கு ஒரே சமயம் கழுத்தில் தொங்கும்,
காலை சுற்றி வளைக்கும் பாம்பாக உள்ளதாக சொல்கிறார். அந்த பாம்பு உவமை எவ்வளவு ஆழமானது.
விக்கிரமாதித்யனின் மனம் எப்போதும் இரண்டு எதிர்நிலைகள் இடையே மாட்டி அவஸ்தைப்படும்
ஒன்று எனும் அவதானிப்பை ரசித்தேன்.
பொதுவாக தமிழில் ஒரே கேம்பில் உள்ள கவிஞர்கள் பரஸ்பரம்
மானே தேனே என கொஞ்சி மதிப்புரை எழுதுவது வழமை. ஆனால் ஷங்கர் தனக்கு மிகவும் நெருக்கமான
விக்கிரமாதித்யனை இவ்வளவு கராறாய் மதிப்பிடுகிறார் என்பது தான் என்னை மிகவும் கவர்ந்த
விசயம். ஒரு கட்டத்தில் விக்கிரமாதித்யன் தன்னை மகாகவிஞன் என முடிவெடுத்து ஒரு மலையுச்சியில்
போய் அமர்ந்து கொண்டதாய் கூறுகிறார். அதன் பிறகு அவர் இறங்கி வரவில்லை. அந்த வரியில்
இருந்து தான் தான் கட்டுரைத் தலைப்பு வருகிறது. அந்த தலைப்பிலே ஒரு சின்ன கிண்டல் உள்ளது
தானே!
கருத்துகள்