முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிச்சைக்காரன்: மகாபாரத டெம்பிளேட்


 Image result for pichaikaran movieImage result for badshah rajinikanth
வெளியான சந்தர்பத்தில் வெகுவாக பாராட்டப்பட்ட படம் “பிச்சைக்காரன்”. நான் இப்படத்தை அப்போது பார்த்த போது ஒரு தெளிவான நேர்த்தியான திரைக்கதை அமைப்பு (சண்டைக்காட்சிகளைத் தவிர) கொண்ட படம், அம்மா செண்டிமெண்டை மெலோடிராமா இன்றி பயன்படுத்திக் கொண்ட படம் என்கிற அளவிலே ரசித்தேன்.

இன்று இணையத்தில் மீண்டும் பார்த்தேன். அப்போது எனக்கு மகாபாரதத்தின் பாண்டவர்களின் மறைந்து வாழும் படலத்தை நினைவு வந்தது. விராத தேசத்தில் அரண்மனையில் பிரஹண்ணளையாக திருநங்கையாக மாறுவேடத்தில் இருக்கும் அர்ஜுனன் தன் அந்தஸ்து, திறன், கௌரவம் ஆகியவற்றை கைவிட்டு பணிவாக தயக்கமின்றி செயல்படுகிறான். கௌரவர்கள் அத்தேசத்தை படையெடுக்கும் போது, அப்படி அவர்கள் வென்றால் அது தம் வேடத்தை கலைக்கும் எனும் நிலை ஏற்படும் போது மட்டும் அர்ஜுனன் தன் வேடத்தை கலைக்காமலே தன் திறன்களை வெளிப்படுத்துகிறான்; அச்சம் மிக்க இளவரன் உத்தரன் பின்னிருந்து அவனுக்கு தேரோட்டியாய் செயல்பட்டு தன்னந்தனியாய் துரியோதனன், கர்ணன் உள்ளிட்டோரை முறியடிக்கிறான். இறுதியில் தம் தலைமறைவு காலம் முடிந்த பின் பாண்டவர் தம் வேடத்தைக் கலைத்து உரிய கௌரவம் பெற்று, மன்னருக்கு உறவும் ஆகிறார்கள்.
“பிச்சைக்காரனிலும்” இதே தான் நடக்கிறது. அருள் எனும் பெரும் கோடீஸ்வரன் தன் தாயின் உயிரைக் காப்பாற்றும் பொருட்டு, ஒரு சாமியார் அறிவுரையின்படி, 48 நாள் பிச்சைக்காரனாய் வாழ்ந்து தீர்க்க முடிவெடுக்கிறான். அப்போது தன் காதலியிடத்து உண்மை சொல்ல முடியாமல், இறுதியில் அவள் உயிரைக் காப்பாற்றவே தன் அடையாளத்தை பயன்படுத்த இயலாமல் அவன் பரிதவிக்கிறான். இப்படி தானற்றுப் போகும் இந்த காலத்தில் அவன் முதிர்ச்சியடைகிறான். சமூகத் தீமைகளை அழிக்கிறான். மகாபாரதத்திலும் பாண்டவர்களுக்கு இதுவே நிகழ்கிறது. இந்த தியாகம் வீணாகி விடுமோ எனும் அச்சம் இருந்து கொண்டே இருந்தாலும் இறுதியில் அவன் தாய் மீள்கிறாள்; மகாபாரத்தில், பல அவநம்பிக்கை தருணங்களுக்கு முடிவில், தர்மம் ஜெயிக்கிறது.
நமது புராணங்களின் பல நெருக்கடி தருணங்கள் இந்திய கூட்டுமனதை அசைப்பவை. லோகித தாஸ் ஒருமுறை சொன்னாராம், அவரது எல்லா படங்களின் கதையும் ஏதாவதொரு மகாபாரத சம்பவத்தை ஒட்டியது என. எனக்கென்னவோ தமிழின் பெரும்பாலான வணிக பட கதைகள் பாரதக் கதைகளின் நீட்சி எனத் தோன்றும். உ.தா. “பாட்ஷா” மேற்சொன்ன மகாபாரத தலைமறைவு பருவக் கதையே. “அண்ணாமலை”? துரோணருக்கும் அவரது ஆதி நண்பரான தௌரபதருக்கும் இடையிலான அன்பும் பிரிவும் மோதலும் பழிவாங்கலும் பற்றின கதையின் ஸ்டைலான ரஜினி டெம்பிளேட் தானே. ஒட்டுமொத்த மகாபாரதக் கதையின் சுருக்க வடிவம் தானே “தேவர் மகன்”. இப்படி நீங்கள் எந்த வெற்றி பெற்ற தமிழ் சினிமாவை எடுத்தாலும் அதில் மகாபாரதச் சாயல் இருக்கும்.
ஆக, “பிச்சைக்காரன்” விசயத்தில் எனக்கு ஆச்சரியம் இல்லை!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.