முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அபிராமிகள் ஏன் தோன்றுகிறார்கள்?

மின்னம்பலம் இணையதளத்தில் வெளியாகி உள்ள என் கட்டுரையில் இருந்து:
 “தன் இரு குழந்தைகளைக் கொடூரமாய் கொன்றுவிட்டுத் தன் காதலனுடன் ஓடிப்போன அபிராமியைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒரு தோழியிடம் இதைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கையில் “ஏன் குழந்தைகளைக் கொன்றாள்? அவற்றைக் கொல்லாமல் விட்டிருந்தால் வேறு யாராவது வளர்த்திருப்பார்கள் அல்லவா? ஏன் கொல்ல வேண்டும்? அதனால் அவளுக்கு என்ன லாபம்?” என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன.
எப்படி யோசித்தும் விடை தெரியாத கேள்விகள். சிக்குண்ட நூல்கண்டைப் பிரிப்பது போல நாங்கள் நீண்ட நேரம் இதையே சுற்றி சுற்றி வந்துகொண்டிருந்தோம்.

அடுத்து, நான் இணையத்தில் இது சம்பந்தமான சேதிகளை நிறைய படித்தேன். அவற்றைக் கொண்டு கீழ்வருமாறு ஒரு சித்திரத்தைத் தொகுத்துக்கொண்டேன்:
என்ன நடந்தது?
அபிராமி சுமார் 17 வயதில் விஜய்யைத் திருமணம் செய்துகொள்கிறார். காதல் திருமணம். இரு குழந்தைகள் பிறக்கின்றன. திருமண உறவுகள் பலவற்றில் நிகழ்வதுபோல அலுப்பும் மனஸ்தாபங்களும் ஏமாற்றமும் மிகுந்திட, வாழ்க்கை கசக்கிறது.
மண உறவுக்கு வெளியே பொழுதுபோக்காக ஒரு “காதல்” தோன்றுகிறது. காதலன் சுந்தரம் பிரியாணிக் கடையில் பில் போடுகிறவர்.
இதுவரையில் பெரிய விநோதம் இல்லை. பல இடங்களிலும் நடப்பதுதான். மண உறவுக்கு வெளியே முகிழ்க்கும் காதல்களே பல தாம்பத்ய உறவுகள் நிலைக்க உதவுகின்றன என ஓர் ஆய்வில் படித்திருக்கிறேன். வெளியே கசியாதவரை. அதாவது, கணவன் / மனைவி கோபித்துப் பிரச்சினை பண்ணாதவரையில், இத்தகைய காதல் திருமண வாழ்வின் அழுத்தத்தைக் குறைக்க உதவும் என்கிறது அந்த ஆய்வு (இதற்காக, எல்லாரும் பிறழ வேண்டுமென்றில்லை. பிறழ்ச்சி மட்டுமே குடும்பத்தைக் காப்பாற்றுகிறது என்பதும் இல்லை).
அபிராமியின் திருமணத்துக்கு வெளியிலான இந்தக் காதல் ஊருக்குத் தெரியவர, கணவன் இதனால் கோபமுற்று அது அடிதடியில் போய் முடிகிறது. இதுதான் இந்த வழக்கமான பிரச்சினையைக் கொலையை நோக்கிக் கொண்டுசெல்வதற்கான முதல் திருப்பம்.
கணவனிடம் கோபித்து அபிராமி சுந்தரத்தின் வீட்டில் சென்று சில மாதங்கள் வாழ்கிறார். சுந்தரமும் திருமணமானவரே. அவர் மனைவியின் எதிர்வினை என்னவெனத் தெரியவில்லை.

மேலும் படிக்க
https://www.minnambalam.com/k/2018/09/04/35

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.