முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிறப்புக் கட்டுரை: அலோபதியும் புற்றுநோயும்!


Image result for cancer patient in india
Image courtesy: Down to Earth
என்னுடைய குடும்பம் புற்றுநோய்க் குடும்பம். என் பாட்டி, அத்தைகள், அத்தை ஒருவரின் கணவர், என் அப்பா என பலரும் புற்றுநோய்க்குப் பலியானதை, அந்நோய் உடலை மெல்ல மெல்ல சிதைக்கும் அவலத்தை, அது குடும்பத்தினருக்கு அளிக்கும் கடும் துயரத்தை, நேரடியாகக் கண்டிருக்கிறேன்; புற்றுநோய் ஏற்படுத்தும் பொருளாதாரப் பாதிப்பையும் அனுபவித்திருக்கிறேன்.

என் அப்பா தனக்குப் புற்றுநோய் உள்ளதாக அறிந்துகொண்டபோது அது ஓரளவு முற்றிப்போன நிலையில் இருந்தது. நான் அப்போது முதுகலைப் பட்டத்துக்காகப் படித்துக்கொண்டிருந்தேன். கடுமையான அலோபதி சிகிச்சைக்குப் பிறகு அவர் சில வருடங்கள் கூடுதலாய் வாழ்ந்தார். ஆனால், அதற்கு அவர் கொடுத்த விலை பெரிது. அவரது வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் இந்த சிகிச்சைக்காக இழந்தார். அவரது மறைவுக்குப் பிறகு அம்மாவின் எதிர்காலம் கேள்விக்குறியானது. ஒரே வீடு மட்டும் எஞ்சியிருந்தது; அதிலிருந்து வரும் வாடகையும் அதோடு அப்பாவின் மிகச் சொற்ப ஓய்வூதியமும் அவரைச் சற்றே காப்பாற்றின.
முதுகலைப் படிப்புக்குப் பின் ஆய்வுப் படிப்பையும் முடிக்க இயலாத நிலை எனக்கு ஏற்பட்டது; நான் எம்.பில் சேர்ந்த பின் அப்பாவின் நிலை அறிந்தபின் குற்றவுணர்வு என்னை வாட்டியது; குடும்பம் பணமின்றித் தவிக்கையில் நான் மட்டும் சொகுசாகப் படிப்பதா? என் பெற்றோர் படிக்க வேண்டாம் எனத் தடுக்கவில்லை; நான் படிப்பை விட்டுவிட்டு வேலைக்குச் செல்லவா என யோசித்தபோது அவர்கள் “வேண்டாம் படி” எனச் சொல்லவும் இல்லை. அந்தக் குழப்பமான நிலையில் நான் கவிஞர் யுவன் சந்திரசேகரிடம் சென்று என் மனத் தடுமாற்றத்தைப் பகிர்ந்து கொண்டேன். அக்கட்டத்தில் ஒரு தீர்க்கமான முடிவெடுக்க அவர் உதவினார். படிப்பைக் கைவிட்டு வேலைக்குச் செல்ல முடிவெடுத்தேன்.
விளைவாக எந்த வேலையிலும் என்னால் உறுதியாக நீடிக்க முடியவில்லை; என் விருப்பத்துக்குரிய வேலையை நான் அடைய எட்டு வருடங்கள் ஆயின. ஒருவேளை என் இளங்கலையின்போது அப்பாவைப் புற்றுநோய் தாக்கியிருந்தால் நான் கல்லூரிப் படிப்பைக்கூட முடிக்காமல் போயிருக்கலாம். இதுபோன்ற உருக்குலைவுகள் பலர் வாழ்க்கையிலும் நிகழ்ந்துள்ளதை அறிவேன்.

மேலும் படிக்க: http://www.minnambalam.com/k/2018/10/25/26?fbclid=IwAR1GQmhjoqmULyIJBAptB2auTKRxfC4ab3EQs0Msid72TwfHRN6GDORDzmw

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...