முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஹீரோவாகும் இயக்குநர்கள்: கட்டியங்காரன் மனப்பான்மை (5)


Image result for mani ratnam kamal haasan

கட்டியங்காரன் பாடி பார்வையாளர்களை கட்டிப் போடுகிறான், வேடிக்கையாய் பேசி சிரிக்க வைக்கிறான். ஆக இந்த மரபு வழி வரும் நாம் நம்மையறியாமலே இயக்குநர், இசையமைப்பாளர், பாடகர்கள் மற்றும் நகைச்சுவையாளர்களை கதைசொல்லி எனும் ஒருவரது பல வடிவங்களாக காணத் துவங்குகிறோம்நாயகனுக்கு இணையாகவும் இவர்கள் மாறுகிறார்கள். கட்டியங்காரன் எடுக்கும் பல தோற்றங்களாகிறார்கள் இவர்கள். நமது தமிழ் சினிமாவில் கூத்தின் தாக்கம் வலுவாக இன்னும் உள்ளதற்கு இந்த இயக்குநர்கள் துவங்கி இசைக்கலைஞர், விதூஷகன் வரையிலானவர்களின் நாயக பரிணாமம் ஒரு அத்தாட்சி.


1)   கார்ப்பரேட்மயமாகாத நிலை: சினிமா கார்ப்பரேட்மயமாக ஆக, அதனுள் உள்ள ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி நிபுணர்கள் தோன்றுவார்கள். அப்போது இயக்குநர் தனக்குத் தரப்பட்ட திரைக்கதைக்கு ஒரு காட்சி மொழி அளிப்பவராக, படவேலைகள் திறம்பட நடப்பதை நிர்வகிப்பவராய், உண்மையான ஒருஇயக்குநராய்” (ஹாலிவுட் பாணியில்) மாறுவார். அதாவது பாரதிராஜா, கமல்கள் மணிரத்னம் போல் ஆவார்கள். தமிழ் சினிமா கார்ப்பரேட்மயமாகும் போது மாற்று சினிமா கூட தனக்கான விற்பனைத் திறனைப் பொறுத்து மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என்றாகும். அப்போது ஒருவரே அனைத்து துறைகளிலும் வேலை செய்து நடிகராகவும் இயக்குநராகவும் செயல்பட்டு சின்ன பட்ஜட்டில் படமெடுத்து யாருடைய தலையீடும் இன்றி பரிசோதனைகள் செய்யும் காலம் முடிவுக்கு வரும். இயக்குநரின் தேகத்தில் இருந்துகட்டியங்காரனின்சாமி இறங்கிப் போக, இயக்குநர் ஒரு எந்திரத்தனமான கார்ப்பரேட் சி..ஓ போல ஆவார்.

நமது இயக்குநர்-நடிகர்களை நாம் சீரியசாக எடுத்துக் கொள்வதோ அவர்கள் கொண்டு வந்த மறுமலர்ச்சியை போதுமான அளவு பாராட்டுவதோ இல்லை. தெருக்கூத்து வடிவத்தில் இருந்து அந்நியப்பட்டு முழுக்க ஹாலிவுட் பார்முலா படங்களை நோக்கி, கார்ப்பரேட்டுகளால் விலாவரியாய் விவாதித்து, அளந்து உறுதி செய்து அளிக்கப்படும் பேக்கேஜ்ட் அயிட்டம் போன்ற படங்களை நோக்கி தமிழ் சினிமா நகரும் காலம் வெகுதொலைவில் இல்லை. ஒருவிதத்தில் அந்த ராட்சத எந்திர சக்கரங்கள் நம் சினிமாவை அரைப்பதற்கு தடைகளாய் இருப்பவர்களும் இந்த இயக்குநர்-நடிகர்களே.
 நடிகனுக்கான எந்த பொருத்தங்களும் இல்லாதவன் என நிராகரிக்கப்பட்டவன் ஒருவன் நடிகனாகி பெரும் வெற்றி பெறுவதும் இயக்குநர்-நடிகர்கள் விசயத்தில் மட்டுமே சாத்தியப்பட்டுள்ளது. இந்த பொதுப்போக்குக்கு பொருந்தாத, பிசிறுபட்ட தன்மையே இவர்களின் முக்கியத்துவம். ரஜினி, கமல், அஜித், விஜய் போன்ற நட்சத்திர நடிகர்களால் முழுக்க நீர்த்துப் போக செய்யப்பட்ட சினிமாவில் கதைக்கும் வசனங்களுக்கும் தனி கவனம் ஏற்படுத்தி அவற்றால் மட்டுமே ஒரு படத்தை பெரும் வெற்றியாக்க முடியும் என நிரூபித்தவர்களும் இவர்களே. இந்த விளிம்புநிலை நட்சத்திரங்கள் இருக்கும் வரை அதன் தொல்வடிவமான கூத்தில் இருந்தும் துண்டிக்கப்படாமல், தனது தனித்தன்மையை இழக்காமல் தமிழ் சினிமா இருக்கும். அதற்காகவே நாம் இவர்களைக் கொண்டாட வேண்டும்.

நன்றி: உயிர்மை, டிசம்பர் 2018

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...